வாராந்திர மற்றும் மாதாந்திர தேர்வுகள், குழந்தைகள் தாங்கள் கற்றுக் கொள்வதில் அர்த்தத்தைக் கண்டறிவதை கடினமாக்குகின்றன. இந்த பிரச்சனைக்கு ஒரு மிகப்பெரிய தீர்வு தேவை.
நம் நாட்டின் கல்வி வரலாறு பல சோதனை மாற்றங்களைக் கண்டுள்ளது. சமீபத்திய சோதனை திறந்த புத்தகத் தேர்வு (open-book examination). இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மன அழுத்தத்திற்கான காரணங்களை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழு ஆராய்ந்தது.
பல குழுக்கள் இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சித்துள்ளன, ஆனால் அது இன்னும் குறையவில்லை. சில பிரச்சினைகள் இன்னும் மோசமாகிவிட்டன. 1990 களின் முற்பகுதியில், மறைந்த பேராசிரியர் யஷ் பால் (Yash Pal) தலைமையிலான ஒரு சிறிய குழு பள்ளி குழந்தைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை ஆராய்ந்தது. யஷ் பால் ஒரு விண்வெளி விஞ்ஞானி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 'சுமை இல்லாத கற்றல்' ('Learning Without Burden) என்ற அவரது அறிக்கை, சமீபத்தில் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் (Tata Institute of Social Sciences (TISS)) நடை பெற்ற பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது. இன்று "சுமை" என்பதை நாம் எப்படி வரையறுக்க வேண்டும் என்று நிபுணர்கள் பேசினர். இப்போது குறைவாகவோ, அதிகமாகவோ, வித்தியாசமாகவோ இருக்கிறதா?
மாநிலங்களவையில் நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணின் உருக்கமான உரையைத் தொடர்ந்து யாஷ்பால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. நியமன உறுப்பினரான நாராயணனின் முதல் உரை இதுவாகும். அப்போதைய துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லாவும் மற்ற உறுப்பினர்களும் குழந்தைகள் அன்றாடம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்த நாராயணின் உருக்கமான உரையினால் கண்ணீர் வடித்தனர்.
ஆர்.கே.நாராயண் கூறுகையில் கனமான பள்ளி பைகள், வீட்டுப்பாடம் செய்வதற்க்கு அதிக நேரம் மற்றும் கூடுதல் கல்வியைப் பெறுவது அவர்களின் குழந்தைப் பருவத்தை அழித்துவிட்டது. இந்த விவகாரத்தை தேசிய முட்டாள்தனத்தின் ஒரு வடிவம் (national madness) என்று அவர் விவரித்தார். அறிவு மற்றும் மோசமான பாடத்திட்ட வடிவமைப்பு பற்றிய தவறான எண்ணங்களால் இந்த நிலை வந்ததாக யாஷ் பால் குழு கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு அதிக அறிவு இருப்பதாக மக்கள் நம்பியதால், மேற்குலகைப் பிடிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். இது மோசமான பாடத்திட்ட வடிவமைப்புக்கு வழிவகுத்தது.
குழந்தைகள், கல்வி முறை மற்றும் சமூகத்தின் போட்டி மனப்பான்மை ஆகிய இரண்டிலும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதன் மூலம் பள்ளிகள் மேலும் அதை மோசமாக்குகின்றன. தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆசிரியர்கள், அதிக ஊதியம் வாங்க, குழந்தைகளை சிறப்பாகச் செயல்படத் தள்ளுகிறார்கள். வாராந்திர மற்றும் மாதாந்திர தேர்வுகள், குழந்தைகளை அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதை கடினமாக்குகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக அவர்கள் தேர்வு மற்றும் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி செல்லுகிறார்கள்.
டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (Tata Institute of Social Sciences (TISS)) பயிலரங்கில், பேச்சாளர்கள் "யாஷ் பால் குழு அறிக்கைக்கு கால் நூற்றாண்டுக்குப் பிறகு நாம் எங்கே இருக்கிறோம்?" என்று கேட்கும் ஒரு சமீபத்திய வெளியீட்டை மேற்கோள் காட்டினர். மைதிலி ராம்சந்த், ரிதேஷ் குன்யகாரி மற்றும் அரிந்தம் போஸ் ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த தொகுதி பள்ளி பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கல்வியை ஆராய்கிறது. இந்த துறைகளில் சீர்திருத்தங்கள் காரணமாக சில முன்னேற்றங்களை அது ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், தொற்று நோய்க்காலம் சில மேம்பாடுகளை மாற்றியமைத்து, புதிய சவால்களுக்கு வழிவகுத்தது. பாடப்புத்தகங்கள் சுருக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றிலிருந்து விஷயங்கள் அகற்றப்பட்டதால் புரிந்துகொள்வது கடினம். கூடுதலாக, ஆசிரியர் பற்றாக்குறை இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சினையாக மாறியுள்ளது. ஒரு விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில் 'ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான ஆசிரியர்' (‘The Right Teacher for Every Child’) என்ற தலைப்பில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (TISS) அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
பயிலரங்கில் தொழில்நுட்பம் குறித்து பேசினர். இது குழந்தைகளையும் ஆசிரியர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. சிலருக்கு பிடிக்கும், மற்றவர்களுக்கு பிடிக்காது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதைப் பற்றி மூன்று ஆசிரியர்கள் பேசினர். ஆனால் அதை விரும்பியவர்களும் இருந்தனர்.
நிச்சயமாக, யாஷ் பால் அறிக்கையில் பேசப்பட்ட பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக மாறுகிறது - பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நிறைய கவலைகள் உள்ளன. இதற்குக் காரணம் பொருளாதாரம் மற்றும் வேலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். குறைவான தொழில் வாய்ப்புகள் இருப்பதால், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பாரம்பரிய, உயர்-நிலை வேலைகளில் சேர அதிக அழுத்தம் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, பயிற்சி மையங்கள் அழுத்தத்தை இன்னும் மோசமாக்குகின்றன.
தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி மிகவும் பிரபலமாகி வருகின்றன. மேலும், அவை இரண்டும் ஒரு புதிய தேர்வு முறையின் எழுச்சிக்கு பங்களிக்கின்றன. இந்த முறை பெரும்பாலும் பல தேர்வு கேள்விகளை உள்ளடக்கியது. இந்தக் கேள்விகள் வெவ்வேறு வழிகளில் சரியான பதிலைக் கண்டறிய மாணவர்களுக்கு சவால் விடுகின்றன. இந்தச் தேர்வுகளை எப்படிச் சமாளிப்பது என்பதை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் பயிற்சி மையங்கள் மிகச் சிறந்தவை. இந்த தேர்வுகள் நிறைய பயிற்சி செய்ய மாணவர்களை ஊக்குவிக்கின்றன. இது வேகமான சவாலாக அமைகிறது. இதன் விளைவாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புரிந்துகொள்வதற்கும், கற்றலை அனுபவிக்கவும் உதவுவதில் கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காலமான யாஷ் பால், இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை கற்பனை செய்திருக்க முடியாது. கோவிட் நெருக்கடிக்கு எதிர்வினையாக ஆன்லைன் கற்றலை நோக்கிய மாற்றம் தொடங்கியது. பாரம்பரிய வகுப்பறைகளுக்கு மாற்றாக ஆன்லைன் கல்வியை ஊக்குவித்தவர்கள் தொற்றுநோய் முடிந்த பிறகு மீண்டும் பாரம்பரிய வகுப்பறைகளுக்கு மாறினர்.
ஆன்லைன் கல்வி திட்டம் வேலை செய்யவில்லை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்தனர். ஆனால், தொற்றுநோய்க்குப் பிறகு புதிய இயல்புநிலையில் அது கட்டாயப்படுத்தப்பட்டபோது அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் அமைப்பில் ஆசிரியர்கள் அரிதாகவே பேசுகிறார்கள். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, அவர்கள் மாணவர்களை அழுத்துகிறார்கள், பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. எனவே, யாஷ் பால் கமிட்டி பேசிய பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது, ஏனெனில் புதிய விஷயங்கள் நமக்கு முழுமையாக புரியவில்லை.
வினோதமான ஒன்று நம்மை பாதிக்கிறது என்று சொல்ல ஆர்.கே.நாராயண் போன்ற ஒருவர் தேவை. நம் குழந்தைகளுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் எதிலும் ஆர்வம் காட்டுவதை குழந்தைகள் மறந்து விடுவார்கள்.
யஷ் பால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழமான சிக்கலைத் திறந்த புத்தகத் தேர்வு (open book exam) தீர்க்குமா என்று சொல்வது கடினம். நல்ல கற்பித்தல் என்பது மாணவர்களை தாங்களாகவே கற்க தூண்ட வேண்டும் என்று அவர் நம்பினார். நமது இயலாமைக்கு ஒரு பெரிய தீர்வு தேவைப்படுகிறது.
கட்டுரையாளர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர்.