கர்நாடக கோவில் மசோதாவில் என்ன மாற்றங்களை முன்மொழிந்தது, பிற மாநிலங்கள் கோவில் வருவாயை எவ்வாறு நிர்வகிக்கின்றன ? -அஜோய் சின்ஹா கற்பூரம்

 கர்நாடக கோயில் மசோதா (Karnataka temple Bill) மாநில சட்ட மேலவையில் தோற்கடிக்கப்பட்டது. பா.ஜ.க. ஏன் இதை விமர்சித்தது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்திலிருந்து இது எவ்வளவு வேறுபட்டது? என்ன சொல்கிறது காங்கிரஸ்  அரசு?


இந்து கோயில்களுக்கு வரி விதிக்கும் சட்டத்தை மாற்ற கர்நாடக அரசு முயன்றது. அதற்காக, அவர்கள் கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் திருத்த மசோதா, 2024 (The Karnataka Hindu Religious Institutions and Charitable Endowments Amendment Bill, 2024)) ஐ  முன்மொழிந்தனர். இது பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 22 அன்று அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ள சட்ட மேலவை  (Legislative Council) அதை நிராகரித்தது.


கோயில்களின் வரிவிதிப்புக்கு (taxation of temples) என்ன மாற்றங்கள் முன்மொழியப்பட்டன?


இந்த மசோதா கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சட்டம், 1997 இன் (Karnataka Hindu Religious Institutions and Charitable Endowments Act, 1997)  பல பகுதிகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.


முதலாவதாக, ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களின் மொத்த வருமானத்தில் 10% கோயில் பராமரிப்புக்காக ஒரு பகிரப்பட்ட நிதிக்கு மாற்ற முன்மொழிந்தது.   


மேலும்,  ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் கோயில்களுக்கு பதிலாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டும் கோயில்களின் வருமானத்தில் 5 சதவீதத்தை பகிர்வு நிதிக்கு ஒதுக்க பரிந்துரைத்துள்ளது. 


இந்த பகிரப்பட்ட நிதி 1997 சட்டத்தில் மாற்றங்கள் மூலம் 2011 இல் பாஜக  அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.


இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் 87 கோயில்கள் மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் 311 கோயில்களில் இருந்து ரூ.60 கோடியை நிதியை அவர்கள் சேர்த்திருப்பார்கள்.


சட்டத்தின் பிரிவு 19 மத நடவடிக்கைகளை ஆதரித்தல், கோயில்களை பராமரித்தல் மற்றும் தொண்டு திட்டங்கள் உள்ளிட்ட பகிரப்பட்ட நிதியைப் பயன்படுத்தக்கூடிய வழிகளை கோடிட்டுக் காட்டுகிறது.  


அதிகரிக்கப்பட்ட நிதியை சிறிய கோயில்களுக்கு உதவவும், நோய்வாய்ப்பட்ட அர்ச்சகர்களுக்கு ஆதரவளிக்கவும், அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கவும் பயன்படுத்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டது.   


திருத்தங்களுக்கு எதிரான விமர்சனங்கள் என்ன?


சித்தராமையா அரசு கோயில்களில் இருந்து பணம் எடுக்க முயற்சிப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியதோடு, இந்து கோயில்களில் மட்டும் ஏன் கவனம் செலுத்துகிறார்கள் என்றும் தங்களது வியப்பை தெரிவித்துள்ளனர்.  


பா.ஜ.க. மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, அரசு ஏன் இந்து கோயில் வருமானத்தில் அக்கறை காட்டுகிறது, ஆனால் மற்ற மதங்களின் வருவாயில் ஆர்வம் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


இருப்பினும், 1997 ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து பகிரப்பட்ட நிதிக்கு பணம் வசூலிக்க எப்போதும் ஒரு விதி உள்ளது என்று சித்தராமையா வாதிட்டார். பகிரப்பட்ட நிதி இந்து மதம் தொடர்பான மத நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், அது தொடர்ந்து அதே வழியில் பயன்படுத்தப்படும்  என்றும் அவர் கூறினார்.


இந்த மசோதாவில் வேறு ஏதேனும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டதா?


சட்டத்தின் பிரிவு 25 இன் படி, கோயில்கள் மற்றும் மதக் குழுக்கள் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட "மேலாண்மைக் குழு"  இருக்க வேண்டும். இதில் ஒரு பூசாரி, பட்டியல் அல்லது பட்டியல் பழங்குடியைச் சேர்ந்த ஒரு நபர், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு உள்ளூர் உறுப்பினர் அடங்குவர். முன்மொழியப்பட்ட மசோதா மீதமுள்ள நான்கு உறுப்பினர்களில் விஸ்வகர்மா இந்து கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பத்தில் திறமையான ஒரு உறுப்பினரைச் சேர்க்க பரிந்துரைத்தது.


இந்த குழுக்களின் தலைவரை ராஜ்ய தர்மிகா பரிஷத் தேர்வு செய்யவும் இந்த மசோதா அனுமதித்தது. இது பல்வேறு மத விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு. சர்ச்சைகளைத் தீர்ப்பது, ஒரு கோயில் இந்து மதத்தைத் தவிர மதங்களிலிருந்து வழிபாட்டை அனுமதிக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது மற்றும் யாராவது ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலரா என்பதை தீர்மானிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

 

கூடுதலாக, ஆண்டுக்கு ரூ.25 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களுக்கான அணுகலை மேம்படுத்தும் திட்டங்களை மேற்பார்வையிட மாவட்ட அளவிலான மற்றும் மாநில உயர்மட்ட குழுக்களை மாநில அரசு அமைக்க வேண்டும் என்று மசோதா கோரியது.


மற்ற மாநிலங்களில் கோவில் வருவாய் எவ்வாறு கையாளப்படுகிறது?


தெலுங்கானாவின் அணுகுமுறை கர்நாடக மாதிரியுடன் ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறது. தெலுங்கானா தொண்டு மற்றும் இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சட்டம், 1987 (Hindu Religious Institutions and Endowments Act, 1987) இன்  சட்ட  பிரிவு 70 இன் படி, மத நிறுவனங்களை மேற்பார்வையிடும் ஆணையர்  பொது நல நிதியத்தை  (Common Good Fund) நிறுவ முடியும்.


ஆண்டுக்கு ரூ.50,000க்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 1.5% மாநில அரசுக்கு வழங்க வேண்டும். தெலுங்கானா சட்டத்தின் கீழ் அரசாங்கம் அதன் செலவுகளை ஈடுகட்டிய பிறகு, ஆணையர் மீதமுள்ள பணத்தை பொது நல நிதிக்கு பயன்படுத்தலாம். இந்த நிதி கோவில் பராமரிப்பு, மத பள்ளிகளுக்கு நிதி மற்றும் புதிய கோவில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.


கேரளா ஒரு வித்தியாசமான அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது, கோயில்கள் பெரும்பாலும் அரசு நடத்தும் தேவஸ்வம் வாரியங்களால் (state-run Devaswom temple Boards) நிர்வகிக்கப்படுகின்றன.


மாநிலத்தில் ஐந்து சுயாதீன தேவஸ்வம் வாரியங்கள் autonomous Devaswom Boards) உள்ளன, அவை 3,000க்கும் மேற்பட்ட கோயில்களை மேற்பார்வையிடுகின்றன. இந்த வாரியங்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களால் வழிநடத்தப்படுகின்றன, அவர்கள் பொதுவாக அரசியல்வாதிகளாக உள்ளனர்.


ஒவ்வொரு தேவஸ்வம் வாரியமும் (Devaswom Board) மாநில அரசிடமிருந்து ஒரு நிதியைப் பெறுகின்றன, மேலும் அவற்றின் வருவாயை வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை. கூடுதலாக, கேரளாவில், திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் தவிர, ஒவ்வொரு தேவஸ்வம் வாரியத்திற்கும் குறிப்பிட்ட சட்டங்கள் உள்ளன.  இந்த சட்டங்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள கோயில்களின் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தை கட்டுப்படுத்துகின்றன.




Original article:

Share: