அதிகாரச் சுமை : இந்தியாவின் விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளிக் கொள்கை பற்றி . . . -EDITORIAL

 இந்தியாவின் விண்வெளித் திட்டம் வல்லரசு அந்தஸ்தைப் பின்தொடர்வதைக் காட்டிலும் அறிவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் வழிநடத்தப்பட வேண்டும். 


பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தில் (Gaganyaan mission) விண்வெளிக்குப் பயணம் செய்யவுள்ளதாக,  பிரதமர் நரேந்திர மோடி தனது கேரள பயணத்தின் போது வெளிப்படுத்தினார். இந்திய ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation (ISRO)) 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் ஏவுகணை வாகனம் மார்க்-3  (Launch Vehicle Mark-3) ராக்கெட்டின் இரண்டு சோதனை விமானங்களை மேற்கொள்ள உத்தேசித்து, 2025 ஆம் ஆண்டில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, ககன்யான் திட்டத்திற்கு ₹10,000 கோடி  மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 2018 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. இது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இஸ்ரோவின் வணிகக் கடமைகளால் ஏற்பட்ட பின்னடைவுகள் இருந்தபோதிலும், இந்த திட்டத்தின் கூறுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், விண்வெளி வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருப்பது, இந்தியா இப்போது ககன்யான் திட்ட தயாரிப்பின் கடைசி கட்டத்தில் இருப்பதைக் குறிக்கிறது. 


இந்த அளவிலான முயற்சியானது அரசியல் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம்பத்தகாததாக இருக்கலாம். ஆனால் ககன்யான் திட்டம் அரசியல் நோக்கங்களால் மட்டுமே இயக்கப்படக்கூடாது. இந்த, இந்திய விண்வெளிக் கொள்கை (Indian Space Policy) 2023, மனித விண்வெளிப் பயணத்தில் இந்தியாவின் தலைமையை நிலைநிறுத்த, மேம்பட்ட அமைப்புகளின் பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட இஸ்ரோவை கட்டாயப்படுத்துகிறது. கூடுதலாக, விண்வெளியில் மனிதனின் தொடர்ச்சியான இருப்புக்கான நீண்ட கால திட்டத்தை உருவாக்குவதற்கு இது அழைப்பு விடுக்கிறது. இஸ்ரோ பல தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் வணிகப் பணிகளை மேற்கொள்ள, ஒன்றியத்தின் கணிசமான ஆதரவை அனுபவித்து வருகிறது. இது அவர்களை அரசியலில் போதுமான அதிகாரத்திடம் இருந்து பாதுகாக்கிறது. ககன்யான் திட்டமும் இதே முறையைப் பின்பற்றுகிறது. எவ்வாறாயினும், எதிர்காலத்தில், பொது ஆய்வுகளைத் தாங்கும் மற்றும் வெளிப்படையான விவாதத்தை ஊக்குவிக்கும் நியாயத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றம் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையானது, புவிசார் அரசியல் விருப்பங்களால் தூண்டப்படும் உந்துதல்களைத் தவிர்த்து, ஜனநாயகமான விண்வெளி ஆய்வுக் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் திட்டமிடும் போது, 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவில் தரையிறங்க வேண்டும் என்ற மோடியின் உத்தரவை இஸ்ரோ பின்பற்றுகிறது. அறிவியல் மற்றும் சமூக நன்மைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதே இந்த ககன்யான் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். உண்மையான காரணமின்றி இந்தியாவை முன்னணியில் வைத்திருக்க முயற்சிப்பதை விட இந்த கவனம் சிறந்தது. சீனா உட்பட மற்ற நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக முன்னணியில் இருந்தாலும், இந்தியா 'விண்வெளி வல்லரசு' (space superpower) அந்தஸ்தைப் பெறுவதற்குப் பதிலாக அறிவியல் ஆய்வு மற்றும் மனித எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.




Original article:

Share: