மே தினம்: மே 1 உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்படுவது ஏன்? -Explained Desk

 தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது தொழிலாளர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. இது தொழிலாளர் சங்க இயக்கத்துடன், குறிப்பாக எட்டு மணி நேர நாள் இயக்கத்துடன் (eight-hour day movement) தொடங்கியது.


உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் மே 1ம் நாளை,  "மே தினம்" (May Day) அல்லது "சர்வதேச தொழிலாளர் தினம்" (International Workers Day) அல்லது "தொழிலாளர் தினம்" (Labour Day) என்று அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகளை நினைவுகூரும் நாளாக மதிக்கப்படுகிறது.


ஹேமார்க்கெட் விவகாரம் (Haymarket Affair)


மே 1 முதன்முதலில் உலகின் வடதிசை பாதியில்  (northern hemisphere) நீண்ட காலத்திற்கு முன்பு வசந்த விழாவாக இருந்தது. பின்னர், 1800களின் பிற்பகுதியில், அது தொழிலாளர் இயக்கத்துடன் (Labour Movement) இணைக்கப்பட்டது. 


சிகாகோவின் ஹேமார்க்கெட் விவகாரத்தின் (Chicago’s Haymarket Affair) நினைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது மே 4, 1886 அன்று காவல்துறைக்கும், தொழிலாளர் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல் வெடித்தது. இதில், சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் (Haymarket Square in Chicago) அமைதிப் பேரணியின் போது வெடிகுண்டு வெடித்ததன் அடிப்படையில், பேரணியை தடுக்க காவல் துறையினர் வந்தனர். இதில், வன்முறை நிறுத்தப்படுவதற்குள் ஏழு காவல் அதிகாரிகள் இறந்தனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர். சுமார் நான்கு முதல் எட்டு பொதுமக்கள் இறந்ததாகவும் 30 முதல் 40 பேர் காயமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


தொழிலாளர்களின் உரிமை மீறல்கள், நீண்ட வேலை நேரம், மோசமான வேலை நிலைமைகள், குறைந்த ஊதியம் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு, சிலருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் பங்கெடுத்தவர்கள் "ஹேமார்க்கெட் தியாகிகள்" (Haymarket Martyrs) என்று அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் உலகம் முழுவதும் சிறந்த வேலை நிலைமைகளுக்கான கோரிக்கைகளை முன்வைக்க உதவியது.


உலகம் முழுவதும் தொழிலாளர் தினம்


1894 இல் தொழிலாளர் தினத்தை ஒரு கூட்டாட்சி விடுமுறையாக அமெரிக்கா முறையாக அங்கீகரித்ததுடன், இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக விரைவில், கனடாவும் இதைப் பின்பற்றியது. இருப்பினும், எட்டு மணி நேர வேலை நாட்களை அங்கீகரிக்க அமெரிக்காவிற்கு மேலும் 22 ஆண்டுகள் மற்றும் பல போராட்டங்கள் தேவைப்பட்டன.


அமெரிக்காவும் கனடாவும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினத்தைக் (Labor Day) கொண்டாடியபோது, மற்றவர்கள் வேறு தேதியைத் தேர்ந்தெடுத்தனர். 1889 ஆம் ஆண்டில், தி செகண்ட் இன்டர்நேஷனல் என்ற குழு மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக (International Workers’ Day) இருக்கும் என்று கூறியது. 1889 ஆம் ஆண்டில், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, ஆம்ஸ்டர்டாமில் உள்ள சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ், மே 1 அன்று 8 மணி நேர வேலை, தொழிலாளர் உரிமைகள் மற்றும் உலகளாவிய அமைதிக்கு வலுவாக ஆதரவளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து சமூக ஜனநாயகக் கட்சி குழுக்களையும் தொழிற்சங்கங்களையும் வலியுறுத்தியது. அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர் அமைப்புகள் மே 1 அன்று தொழிலாளர்களுக்கு பாதிப்பு  ஏற்படாமல் எங்கு முடியுமோ அங்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.


1917 இல் ரஷ்யப் புரட்சிக்குப் Russian Revolution) பிறகு, சர்வதேச தொழிலாளர் தினம் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு முகாம் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேசிய விடுமுறையாக மாறியது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Moscow’s Red Square) நடந்ததைப் போன்ற அணிவகுப்புகள், இராணுவ வலிமையை வெளிப்படுத்தின மற்றும் உயர்மட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


இந்தியாவில்


இந்தியாவில், மே தினம் முதன்முதலில் மே 1, 1923 அன்று, ஹிந்துஸ்தானின் லேபர் கிசான் கட்சி (Labour Kisan Party) தொடங்கப்பட்ட பிறகு, தோழர் சிங்காரவேலர் மே தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார். சுயமரியாதை இயக்கத்தில் ஒரு தலைவராகவும் மற்றும் சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்காக போராடினார். திருவல்லிக்கேணி கடற்கரையிலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையிலும் நடந்த இரண்டு கூட்டங்களில் தோழர் சிங்காரவேலர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். தொழிலாளர் தினத்தன்று அனைவருக்கும் அரசு தேசிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




Original article:

Share: