கடலும் உயர்கிறது : இந்தியப் பெருங்கடலின் உள்ளூர் தாக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்

 வெப்பமயமாதல் குறித்த தரவு சேகரிப்பில் முதலீடு செய்ய இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும். 


இந்தியாவில், தற்போது கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. இருப்பினும், பருவமழை இயல்பான அளவைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் என்று கணித்துள்ளது. இந்த கணிப்புகள்  சில உளவியல் நிவாரணங்களை அளிக்கலாம். இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க நீண்ட கால கவலைகள் உள்ளன.


புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology, Pune) மற்றும் பிற உலகளாவிய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளனர். இது உலகளாவிய கார்பன் உமிழ்வில் (global carbon emission) எதிர்பார்க்கப்படும் போக்குகள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் அவற்றின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியப் பெருங்கடல் ஏற்கனவே 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.  2020 முதல் 2100 வரை 1.7 டிகிரி செல்சியஸ் முதல் 3.8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடல் வெப்ப அலைகளின் அதிகரிப்பை  இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இவை புயல்கள் வேகமாக உருவாகுவதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கடல் வெப்ப அலைகளின் அளவு வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அவை ஆண்டுக்கு சராசரியாக 20 நாட்களில் இருந்து 220-250 நாட்களாக அதிகரிக்கக்கூடும். இந்த கடல் வெப்ப அலைகள் (marine heatwaves) அடிக்கடி ஏற்படும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. 


வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் நீண்ட காலத்திற்கு பிறகு அதிக வெப்பமாக மாறும். இதனால் பவளப்பாறை வெளுத்து, மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்.  கடலின் வெப்பம் மேற்பரப்பில் மட்டும் தங்காது. அது ஆழமாக பரவும். இது கடலின் ஆழத்தில் வெப்பத்தின் அளவை அதிகரிக்கிறது. மேற்பரப்பில் இருந்து 2,000 மீட்டர் வரை உயரும் என்று ஆய்வு முடிவு காட்டுகிறது. கடலின் வெப்ப திறன் பத்தாண்டிற்கு ஒருமுறை 4.5 ஜெட்டா-ஜூல்கள் (zetta-joules) அதிகரித்து வருகிறது. இந்த விகிதம் எதிர்காலத்தில் பத்தாண்டிற்கு ஒருமுறை 16 முதல் 22 zetta-jouleகளுக்கு இடையில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு zetta-joule என்பது ஒரு பில்லியன்-டிரில்லியன் ஜூல்களுக்கு (10^21 ஜூல்கள்) சமமான ஆற்றலின் அலகு ஆகும்.


இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவது இந்தியாவின் நிலப்பரப்பை கடுமையாக பாதிக்கிறது. கடுமையான புயல்கள் அடிக்கடி உருவாகின்றன. மேலும் பருவமழை முறைகளும் மாறி வருகிறது. சில நேரங்களில் நீண்ட வறட்சியைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. புவி வெப்பமடைதல் இதற்குக் காரணம், முக்கியமாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் (fossil fuel burning) ஏற்படுகிறது. பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் கடலில் உள்ள தற்போதைய, பிரச்சினைகளை விரைவாக தீர்க்காது. ஏனெனில், பெருங்கடல்கள் நிலத்தை விட மெதுவாக மாறிவருகிறது. 


எனவே, இந்தியப் பெருங்கடல் இந்தியாவை எவ்வாறு சிறப்பாக பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே சிறந்த வழியாகும். இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும். அவர்கள் தரவு சேகரிப்பதில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது, ​​இந்தியப் பெருங்கடலில் உள்ள தரவு சேகரிப்பு பசிபிக் பகுதியில் உள்ள அளவுக்கு முன்னேறவில்லை. அவர்கள் கணிப்புகளை மேம்படுத்த வேண்டும். இவை உள்கட்டமைப்பு மற்றும் மக்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும்.




Original article:

Share: