விருபாக்ஷா கோயில் (Virupaksha temple) தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமாகும். அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் பற்றி அறிந்து கொள்வோம்.
கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை மே 21 அன்று பெய்த கனமழையால் விருபாக்ஷா கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இக்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹம்பியில் உள்ளது. சேதமடைந்த பகுதி பெவிலியன் அல்லது சாலு மண்டபம் ஆகும். சில பாதுகாவலர்கள் இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)) அதிகாரிகள் கோவிலை போதுமான அளவு பாதுகாக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
ஆனால், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், மழையால் கோயில் இடிந்து விழும் நிலையில் ஏற்கனவே பந்தல் உள்ளிட்டவற்றை சரி செய்து கொண்டிருந்தோம். இந்தக் கோவில் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்டு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியமாக உள்ளது. இது 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இப்போது நடக்கும் மறுசீரமைப்புப் பணிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
விருபாக்ஷா கோயிலின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?
தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான விருபாக்ஷா கோயில் கர்நாடகாவின் ஹம்பியில் அமைந்துள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆனால், 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் (Vijayanagara Empire) போது (1336-1646) முக்கியத்துவம் பெற்றது. சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலாம் ஹரிஹரரால் நிறுவப்பட்ட விஜயநகரப் பேரரசு துங்கபத்திரை ஆற்றின் கரையிலிருந்து ஒரு சக்திவாய்ந்த பகுதியாக விரிவடைந்தது. விஜயநகர ஆட்சியாளர்களின்கீழ் செழித்து வளர்ந்த இந்தக் கோயில் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான மையமாக மாறியது. இது திராவிட கோயில் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இதில் பிரமாண்டமான கோபுரங்கள் (உயர்ந்த நுழைவாயில்கள்), கருவறைக்கு மேல் ஒரு ஷிகாரா, சிக்கலான சிற்பங்கள் மற்றும் தூண்கள் கொண்ட மண்டபங்கள் உள்ளன. கருவறையில் வழிபாட்டின் முக்கிய பொருளான சிவலிங்கம் உள்ளது.
பல கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் கொண்ட ஹம்பி ஒரு பேரரசின் தலைநகராக இருந்தது. இது தென்னிந்தியாவின் கடைசி 'பெரிய இந்து சாம்ராஜ்யத்தைக்' (‘great Hindu empire’) காட்டுகிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அதன் சிறப்பை உணர்ந்து ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்தது.
விருபாக்ஷா கோவில் பந்தல் இடிந்து விழுந்ததற்கு காரணம் என்ன?
பந்தலில் கல் தூண்கள் (stone pillars) இருந்தன. நீண்ட நாட்களாக மழை பெய்து வருவதால் தூண்கள் மோசமாகிவிட்டதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஹம்பியில் இந்திய தொல்லியல் துறைக்காக பணிபுரியும் நிஹில் தாஸ் கூறுகையில், "19 மீட்டர் நீளமுள்ள பந்தலில், நான்கு தூண்களுடன், மூன்று மீட்டர் மட்டுமே பலத்த மழையால் சேதமடைந்தது. முழு கூடாரத்தையும் சரிசெய்ய வேண்டும். மேலும், இதில் தூண்கள் இல்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவை இன்னும் நான்கு முதல் ஐந்து வருடங்கள் நீடிக்கும் என்று நாங்கள் நினைத்தோம், அதற்குமுன் பலத்த மழை பெய்தது. மேலும் காலப்போக்கில், கூடாரத்தின் அடித்தளம் பலவீனமடைந்தது.
விருபாக்ஷா கோவிலை எப்படி மீட்டெடுக்கிறார்கள் ?
ஹம்பியில் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட 95 நினைவுச்சின்னங்களில் 57-க்கு மேற்பட்ட சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறையின் பொறுப்பாகும். மீதமுள்ளவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மறுசீரமைப்பு பணிகள் 2019-ல் தொடங்கி, முதல் கட்டம் 2020-ஆம் ஆண்டிலும், இரண்டாம் கட்டம் 2022-ஆம் ஆண்டிலும் நிறைவடைந்தன. பெவிலியனும் சீரமைக்க அமைக்கப்பட்டது. இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பெவிலியனின் மறுசீரமைப்புக்கு இந்தியத் தொல்லியல் துறை முன்னுரிமை அளித்து வருகிறது. சேதத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்த மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மறுசீரமைப்பு பணிகள் பெரிய அல்லது சிறிய பழுதுபார்ப்புகளாக வகைப்படுத்தப்படும். நினைவுச்சின்னத்தின் மதிப்பீடு மற்றும் தேவையான நிதி குறித்த இறுதி அறிக்கை இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படும்.
மறுசீரமைப்பில் உள்ள சவால்கள்
இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் நிதி, தளவாடங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு போதுமான ஆட்கள் இல்லததால் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். விஜயநகர் முதல் பிதார் வரையிலான கல்யாண் கர்நாடகா பகுதியில் (Kalyan Karnataka region) உள்ள நினைவுச்சின்னங்களை அமைக்க ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ரூ.8 கோடி வழங்கியதாக தாஸ் (Das) கூறினார்.
கல் தூண்களை மறுசீரமைக்க அவை முதலில் செய்யப்பட்ட அதே வகையான கல் தேவை, மேலும் இது பழைய நடைமுறையில் செய்யப்படுகிறது. இதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. உடைந்த பந்தலை சரிசெய்ய சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், மூன்று முதல் நான்கு மாதங்களில் செய்து முடிக்க வேண்டும் என்றும் தாஸ் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளம் பாரம்பரியத் தளத்தைப் பாதுகாப்பது குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுகிறது. விருபாக்ஷா கோவில் எப்போதும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுருக்கமாக, விருபாக்ஷா கோயிலின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டிடக்கலை மகத்துவம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெவிலியனின் சமீபத்திய சரிவு அத்தகைய பண்டைய கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு கோயிலின் பாரம்பரியத்தைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.