ஜனநாயக நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தேர்தல் ஆணையம் அனைத்தையும் செய்ய வேண்டும்
கடந்த சனிக்கிழமையன்று, 2024 மக்களவை தேர்தலின் ஆறாவது கட்டமாக எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் 105 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 57 இடங்களுக்கு ஜூன் 1-ம் தேதி கடைசி வாக்குப்பதிவும், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். மேற்கு வங்கத்தில் 79.47% வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்ததாகவும், அதிகபட்சமாக 79.47% வாக்குகள் பதிவாகின. ஜம்மு-காஷ்மீரில், அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 54.30% வாக்குகள் பதிவாகின. இருப்பினும், டெல்லியில் நகர்புறத்தில் தகுதியான வாக்காளர்களில் 57.67% மட்டுமே ஏழு இடங்களில் வாக்களித்தனர். வட இந்தியாவில் சுட்டெரிக்கும் வெப்ப அலை வாக்குபதிவிற்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.
முதல் ஐந்து கட்ட தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக இந்த தகவல் கிடைத்தது. வாக்குச்சாவடி மட்டத்தில் இந்தத் தரவுகளைக் கொண்ட மற்றும் வேட்பாளர்களின் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் விநியோகிக்கப்படும் படிவம் 17-சி (Form 17-C) விவரங்களை வெளியிடுமாறு ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்க சில கட்சிகள் தவறான தகவல்களை பரப்புவதாக இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல்கள் குறித்து பல்வேறு குழுக்களால் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையை மேற்பார்வையிடும் அமைப்பு என்ற வகையில், தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஆணைய செயல்பாட்டின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகங்களைத் தீர்க்க முடியும்.
படிவம் 17-சி வெளியிடப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கும் செயல் என சுட்டிக்காட்டியது. இருப்பினும், வலுவான ஜனநாயகத்திற்கு ஏற்ற வகையில் புகார்களை தேர்தல் ஆணையம் கையாள வேண்டியது அவசியம். தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும் இதைச் செய்வதற்கான சிறந்த வழி வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகும். வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்தத் தரவை வெளியிடுவதன் மூலம், தேர்தல் ஆணையம் ஒரு நேர்மறையான நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இது தேர்தல் செயல்முறை மற்றும் அதன் நம்பகத்தன்மையில் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான கூடுதல் வழிகளை ஆராய முடியும்.