தனியார் சொத்து மற்றும் 'பொது நலன்' : உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து… -சிங்க கற்பூரம்

 சட்டப்பிரிவு 31C மற்றும் பிரிவு 39B-ன் விளக்கம் தொடர்பான இரண்டு முக்கிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. இது அரசின் தனியார் சொத்தை கையகப்படுத்துவதை நீதிமன்றப் பார்வையில் மாற்றத்தைக் குறிக்கிறது.


சொத்து உரிமையாளர்கள் சங்கம் & பிறர் எதிர். மகாராஷ்டிரா மாநிலம் (Property Owners Association & Ors vs State of Maharashtra) வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதில், இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் (ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெற்றார்) தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதிலளித்தது.


முதலாவதாக, சொத்துரிமை தொடர்பான முக்கிய அரசியலமைப்பு விதியான பிரிவு 31C இன் நிலை என்ன? இதில் உள்ள திருத்தங்கள் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டாலும் அது இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா?


இரண்டாவதாக, "சமூகத்திற்கு சொந்தமான வளங்கள்" (material resources of the community) என்று தனியார்ச் சொத்தை அரசு கையகப்படுத்துவதை சட்டப்பிரிவு  39(b) அனுமதிக்கிறதா?


உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு மகாராஷ்டிரா சட்டம் சம்பந்தப்பட்டது. இந்தச் சட்டம் மும்பையில் சில இடிந்து விழுந்த தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களைக் கையகப்படுத்த ஒரு பொது வீட்டு வசதி வாரியம் (public housing body) அனுமதித்தது. குறிப்பிடத்தக்க கேள்வியான, 1986-ம் ஆண்டு திருத்தம் அரசியலமைப்பின் 39(b) பிரிவை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் பிரிவானது, சமூகத்திற்கு சொந்தமான வளங்களின் உரிமையும், கட்டுப்பாடும் பொது நலனுக்குச் சிறப்பாகச் சேவை செய்யும் வகையில் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


1991-ம் ஆண்டில், மும்பை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டத்தை உறுதி செய்தது. இதில், சட்டப்பிரிவு 39(b)ஐ நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்பின் 31C பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும், 1971-ம் ஆண்டு அரசியலமைப்பு (இருபத்தி ஐந்தாவது) திருத்தச் சட்டத்தின் மூலம் 31C பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திரா காந்தி அரசாங்கத்தின் சோசலிச இலக்குகளை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட உண்மையான விதி இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது.


முதல் பகுதியானது, பிரிவு 39-ன் உட்பிரிவு (b) அல்லது பிரிவு (c) இல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான அரசின் கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எந்தச் சட்டமும் செல்லாததாகக் கருதப்படாது. மேலும், சட்டப்பிரிவு 14 [சமத்துவத்திற்கான உரிமை], பிரிவு 19 [பேச்சு சுதந்திரம் மற்றும் எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளும் சுதந்திரம் உள்ளிட்ட வகைப்படுத்தப்பட்ட உரிமைகள்] அல்லது பிரிவு 31 [சொத்துக்கான உரிமை, 1978-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, பிரிவு 300A-ல் இணைக்கப்பட்டது. 


இரண்டாம் பகுதியானது, அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அறிவிக்கும் எந்தச் சட்டமும் அத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்தாது என்ற அடிப்படையில் எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது. இதன் பொருள் 39(b) மற்றும் (c) சட்டங்களை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்டங்கள் நீதிமன்றத்தில் சவால் செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டன. இருப்பினும், 1973-ம் ஆண்டில் கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தப் பகுதியைத் தள்ளுபடி செய்தது. ஆனால், முதல் பகுதி நடைமுறையில் இருந்தது.


அரசியலமைப்பு, நாற்பத்தி இரண்டாவது திருத்தச் சட்டம் 1976, அரசியலமைப்பின் IV பகுதியில் (பிரிவு 36-51) உள்ள அனைத்துக் பிரிவுகளுக்கும் 31C-ன் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தியது. ஆனால், இந்தத் திருத்தம் 1980-ம் ஆண்டில் மினர்வா மில்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.


1992-ம் ஆண்டில், சொத்து உரிமையாளர்கள் சங்கம் (Property Owners Association) வழக்கில் மனுதாரர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, ​​மினர்வா மில்ஸ் தீர்ப்பு சட்டப்பிரிவு 31C-ஐ முற்றிலுமாக செல்லாததாக்கிவிட்டது என்று அவர்கள் வாதிட்டனர். இதன் விளைவாக, மகாராஷ்டிர சட்டம் 14-வது பிரிவை மீறுவதால் இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.


இப்போது, ​​42-வது திருத்தம், பிரிவு 31C இல் உள்ள "பிரிவு (b) அல்லது பிரிவு 39-ன் பிரிவு (c)-ல் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகள்" என்ற வார்த்தைகளை "பகுதி IV-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அல்லது ஏதேனும் கொள்கைகள்" என்று மாற்றியது.


சொத்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கில் நீதிமன்றமானது, மினர்வா மில் வழக்கில் மேற்கொண்ட திருத்தம், ​​"பாகம் IV-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அல்லது ஏதேனும் கொள்கைகளும்" சாதாரணமாக அகற்றப்படாது. ஏனெனில், இது பொருத்தமில்லாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது விதியை முழுவதுமாக  செயல்படுத்த முடியாததாக்கி விடும் என்று குறிப்பிட்டிருந்தது.


அதற்குப் பதிலாக, கேசவானந்த பாரதியில் உறுதிபடுத்தப்பட்ட பிரிவு 31C-ன் பதிப்பு உண்மையான விதியின் முதல் பகுதியாகும். இதில், அரசியலமைப்பில் உள்ள முந்தைய வார்த்தைகளை ரத்து செய்து புதியதை மாற்றுவதும் நாடாளுமன்றம் எடுத்த அதே நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஒருமித்த கருத்தை எழுதிய நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் ஒரேமாதிரியான   மறுப்பை வழங்கிய நீதிபதி சுதன்ஷு துலியா உட்பட முழு நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை ஏற்றுக்கொண்டது.


நீதிபதி கிருஷ்ண ஐயர், ரங்கநாத ரெட்டியில் (1977) தனது இணக்கமான கருத்தில், "சமூகத்திற்கு சொந்தமான வளம்" எது என்பதை கவனமாகக்  கையாண்டார். பொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் "இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான அனைத்து வளங்களும்" பிரிவு 39(b)-ல் பயன்படுத்தப்பட்டுள்ள "சமூகத்திற்கு சொந்தமான வளங்கள்" என்ற சொற்றொடரின் வரம்பிற்குள் அடங்கும் என்று அவர் கூறினார். 1983-ம் ஆண்டு, சஞ்சீவ் கோக் உற்பத்தி நிறுவனத்தில் சிறுபான்மையினரின் கருத்தை உச்சநீதிமன்றம் நம்பியுள்ளது. இந்த வழக்கில், கோக்கிங் நிலக்கரிச் சுரங்கங்கள் (தேசியமயமாக்கல்) சட்டம் (Coking Coal Mines (Nationalisation) Act), 1972ஐ நீதிமன்றம் சவால் செய்தது. இதில், மனுதாரர்களுக்குச் சொந்தமான கோக் உற்பத்தி ஆலைகளை (coke oven plants) தேசியமயமாக்கியதை சட்டப்பிரிவு 14ஐ மீறியதற்காக சவால் செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


எவ்வாறாயினும், சொத்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கில் நீதிமன்றம், தனியார் சொத்தை "சமூகத்திற்கு சொந்தமான வளங்கள்" என்று கருதலாமா என்பதையும், நீதிபதி கிருஷ்ண ஐயர் பரிந்துரைத்தப்படி, இந்த சொற்றொடரில் அனைத்து தனியார் சொத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் வேறுபடுத்தி காட்டியுள்ளது. சட்டப்பிரிவு 39(b) அனைத்து தனியார் சொத்துக்களையும் உள்ளடக்கியதாக இருந்தால், இதைத் தெளிவுபடுத்துவதற்கு வேறுவிதமாகக் குறிப்பிட்டிருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


நீதிபதி கிருஷ்ண ஐயர் குறிப்பிட்டதாவது, "அரசால் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பொருளாதார அமைப்பு தேசத்திற்கு நன்மை பயக்கும்" என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று நீதிமன்றம் கூறியது. நீதிமன்றம் இதை ஒரு "பிழை" என்று அழைத்தது. ஏனெனில், இது ஒரு "கடுமையான பொருளாதாரக் கோட்பாட்டை" அடிப்படையாகக் கொண்டது.


இன்று, இந்தியப் பொருளாதாரம் பொது முதலீட்டின் ஆதிக்கத்தில் இருந்து பொது மற்றும் தனியார் முதலீட்டிற்கு இடையே சமநிலைக்கு மாறியுள்ளது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், "அனைத்து தனியார் சொத்துக்களையும் உள்ளடக்கிய பிரிவு 39(பி)-ன் விளக்கம் தவறானது" என்றும் கூறியுள்ளது. ஆனால், நீதிபதி நாகரத்னா இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. சட்டப்பிரிவு 39(b)-ன் விளக்கத்தை "மாநிலத்தின் சமூக-பொருளாதாரக் கொள்கைகள் மாறிவிட்டதால் மட்டும் விமர்சிக்க முடியாது" என்று வாதிட்டார்.


சமூகத்திற்கான ஒரு பொருள் வளமாக தனியார் சொத்தை கருத முடியுமா என்பதை தீர்மானிக்க பெரும்பான்மையான கருத்து நான்கு காரணிகளை பட்டியலிட்டுள்ளது:


1. வளத்தின் தன்மை மற்றும் பண்புகள்.

2. சமூகத்தின் நல வளங்களின் தாக்கம்.

3. வளத்தின் பற்றாக்குறை.

4. தனி நபர்களுக்கு சொந்தமான வளத்தின் விளைவுகள்.


நீதிபதி துலியா தனது மறுப்பில், அனைத்து தனியார் வளங்களையும் சமூகத்தின் பொருள் வளங்களாகக் கருதலாம் என்ற கருத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஆதரவாக எழுதினார். வறுமை குறைந்திருந்தாலும், சமத்துவமின்மை குறைந்துவிட்டது என்று அர்த்தமில்லை என்றார். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் உள்ளது. இதை நிவர்த்தி செய்ய, பிரிவு 39(பி) மற்றும் (சி) கீழ் நலன்சார்ந்த நடவடிக்கைகள் தேவை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.




Original article:

Share: