டிப்ராய் குழு (Debroy committee)

 முக்கிய அம்சங்களானவை :


1. சில பரிந்துரைகள் டிப்ராய் குழுவில் ஏற்பட்டவை : தனிப்பட்ட-இரயில்வே நிதிநிலை அறிக்கையை படிப்படியாக நீக்குதல், இரயில்வே வாரியத்தின் தலைவரை தலைமை நிர்வாக அதிகாரியாக (Chief Executive Officer (CEO)) மறு நியமனம் செய்தல் மற்றும் பொது மேலாளர்கள் (General Managers (GM)) மற்றும் கோட்ட இரயில்வே மேலாளர்களுக்கு (Divisional General Managers (DRM)) அதிக முடிவெடுக்கும் அதிகாரங்களை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், இந்திய இரயில்வேயை "தாராளமயமாக்குவதன்" (liberalize) முக்கிய பரிந்துரை இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று பரிந்துரைக்கப்பட்டது.


2. இரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அதிகாரப் பரவலாக்கத்திற்கான பரிந்துரையில் அரசாங்கம் ஓரளவு செயல்பட்டுள்ளதாகவும், மேலும் பெரிய அமைப்பின் பிரிவு நிலைக்கு பரவலாக்குவது இதில் அடங்கும்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைப்பின் பிரிவுகள் சுதந்திரமான வணிக அலகுகளாகக் (business units) கருதப்படும். கூடுதலாக, அந்தந்த பிரிவுகளுக்கான அனைத்து வகையான டெண்டர்களையும் கையாள கோட்ட இரயில்வே மேலாளர்களுக்கு (DRMs) அதிகாரம் வழங்கப்படும்.


3. டெப்ராய் குழு கள அதிகாரிகளான, பொது மேலாளர்கள் (GM), கோட்ட இரயில்வே மேலாளர்கள் (DRM) மற்றும் கிளை அதிகாரிகளுக்கு  அதிகாரம் அளிக்க ஒரு முக்கிய பரிந்துரையை அளித்தது. இரயில்வேயில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க இந்தக் குழு பரிந்துரைத்தது. இதன் மூலம், வந்தே பாரத் இரயில்கள் மற்றும் கவாச் அமைப்புகள் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. டெப்ராய் நிபுணர் குழுவின் ஆலோசனையைப் பின்பற்றி, கதி சக்தி விஸ்வவித்யாலயா நிறுவப்பட்டது என்று இதைப்பற்றி வைஷ்ணவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்துள்ளார்.


4. இந்திய இரயில்வேயின் தாராளமயமாக்கலை இந்தப் பரிந்துரை முன்னிலைப்படுத்தியது. இதில், "தாராளமயமாக்கல்" என்பது "தனியார்மயமாக்கல்" என்று அர்த்தமல்ல என்று இந்தக்குழு தெளிவுபடுத்தியது. இரயில்வே துறையில் புதிய ஆபரேட்டர்களை அனுமதிப்பது, வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சேவைகளை மேம்படுத்தவும் உதவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


டிப்ராய் குறித்த தகவல்கள் :  


1. டெப்ராய் குழு செப்டம்பர் 22, 2014 அன்று அமைக்கப்பட்டது. இது ஜூன் 2015-ம் ஆண்டில் அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், இந்தக்குழு மொத்தம் 40 பரிந்துரைகளை வழங்கியது. அவற்றில் 19 பரிந்துரை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7 பரிந்துரை பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்பட்டன மற்றும் 14 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.


2. இந்தக் குழு இந்திய இரயில்வே தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்தது. இதில், முடிவெடுக்கும் அமைப்பு (decision-making structure), கணக்கியல் முறை (accounting system), மனித வள மேலாண்மை (human resource management) மற்றும் பணியாளர் செலவுகள், இந்திய இரயிவேக்குள் நுழைவதற்கான பல்வேறு வழிகள், அதிக வருவாய் செலவினம் மற்றும் குறைந்த மூலதனச் செலவு, நிதி நிலை போன்ற பல்வேறு சிக்கல்களைக் குழு கையாண்டது. மேலும், இந்தக் குழு ஒரு சுதந்திரமான ஒழுங்கமைப்பாளர் (Independent Regulator) அமைப்பதன் அவசியத்தை ஆய்வு செய்தது.


3. கவாச், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு ஆகும். இது, பிப்ரவரி 2024-ம் ஆண்டு நிலவரப்படி, தெற்கு மத்திய இரயில்வே வழித்தடம் 1,465கிமீ மற்றும் 139 இன்ஜின்களில் (locomotives) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, பல ஆயிரம் வழித்தடக் கிலோமீட்டர்களுக்கு கவாச்சிற்கான டெண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.




Original article:

Share: