மிகவும் ஏழ்மை நிலையில் மேல் (above antyodaya) உள்ளவர்கள் உணவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) பாதியையாவது செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசு பணத்தை சேமித்து, மீண்டும் விவசாயத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கலாம்.
பொதுவாக, நன்கு அறியப்பட்ட ஒன்றான, "ஒரு மனிதனுக்கு ஒரு மீன் கொடுங்கள், அதன்மூலம் அவருக்கு ஒரு நாள் உணவளிக்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதன் மூலம், அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள் என்ற ஒரு பழமொழி உள்ளது. முந்தைய தலையங்கத்தில் ('இலவச உணவின் பிரச்சனைப் பற்றி', இந்திய எக்ஸ்பிரஸ், அக்டோபர் 18), உணவு மானியத்தின் ஒரு பகுதியை, 2023-ம் நிதியாண்டில் ரூ.2.7 லட்சம் கோடியை விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன், கிராமப்புற சாலைகள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பகுதிகள் உணவு மானியங்களை விட அதிக வருமானத்தை ஈட்ட முடியும். பதிலுக்கு மிலிந்த் முருகர் ஒரு கட்டுரையில், (‘ஒரு முதலீடு வீணாகாது’, IE, அக்டோபர் 25) உணவு மானியங்களை வீணாக்காமல் முதலீடுகளாகவே பார்க்க வேண்டும் என்று வாதிட்டார். இவருடைய கருத்தை ஆதரிக்கிறோம். இச்சூழலில், மூன்று முக்கிய விஷயங்களை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்.
முதலாவது, வீட்டு வருமானத்தை ஆதரிப்பதே குறிக்கோள் என்றால், இலவச உணவு விநியோகத்தின் பெரிய தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிலிந்த் முருகர் பரிந்துரைக்கிறார். தற்போது, கிட்டத்தட்ட 57 சதவீத மக்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளனர். மக்கள்தொகையில் இவ்வளவு பெரிய தொகுதியை நாம் உண்மையிலேயே ஆதரிக்க வேண்டும் என்றால், வறுமையைக் குறைப்பது பற்றிய கோரிக்கைகளை நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 248 மில்லியன் மக்களின் வறுமையைக் குறைப்பது பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக, ஏறத்தாழ 28 சதவீத இலவச உணவுவானது, தேவைப்படும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்று தெரிந்தால், முருகர் இந்த பொது விநியோக முறையை (Public Distribution System (PDS)) ஆதரிப்பாரா? மேலும், பொது விநியோக முறையில் (PDS) இன்னும் சட்டவிரோத வெளியேற்றத் தீர்வு தொடர்பான முக்கிய சிக்கல்கள் உள்ளன. ஆனால், இதைப் பற்றி பின்னர் விவாதிப்போம். இந்த இழப்புகளைத் தடுக்க ஒரு சிறந்த வழியாக பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றங்களை அவர் ஆதரிக்க மாட்டார் அல்லவா? மூன்றாவதாக, இலவச அரிசி மற்றும் கோதுமை ஊட்டச்சத்து தொடர்பான பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்க முடியுமா? 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் அவர்கள் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
2022-ம் ஆண்டு, உலக வங்கியின் தரவுகள், 12.9 சதவீத இந்தியர்கள் ஒரு நாளைக்கு $2.15 (வாங்கும் திறன் சமநிலை (PPP)) டாலருக்கும் குறைவான அளவாகவே வாழ்கின்றனர். இது ஒரு தீவிர வறுமை நிலையாகக் கருதப்படுகிறது. 2013-14 முதல் 2022-23 வரை பல பரிமாண வறுமைக் குறியீடு (multidimensional poverty index (MDPI)) 29.17 சதவீதத்திலிருந்து 11.28 சதவீதமாகக் குறைந்து, கடந்த 9 ஆண்டுகளில் 248 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீண்டதாக 2024-ம் ஆண்டு NITI ஆயோக் அறிக்கை குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, மிகவும் வறுமையில் வாடும் 15% மக்களுக்கு அரசாங்கம் இலவச உணவு வழங்க விரும்பினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் தற்போதைய பாதுகாப்பான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY)) கீழ் மக்கள் தொகையில் சுமார் 57 சதவீதத்தை உள்ளடக்கியது.
1997-1998-ஆம் ஆண்டில் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் தொடங்கப்பட்ட இலக்கு பொது விநியோகத் திட்டத்தின் (Targeted PDS) கீழ் மேற்கொள்ளப்பட்டது போல், தீவிர வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (minimum support price (MSP)) பாதி வசூலிக்க வேண்டாமா? இது உணவு மானியச் செலவைக் கட்டுப்படுத்தவும், காலநிலையை எதிர்க்கும் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கான வளங்களை விடுவிக்கவும் உதவும்.
சட்டவிரோத வெளியேற்றத்தால், பொது விநியோக முறையின் (PDS) பிரச்சனை இந்தக் கட்டுரையின் முக்கிய அம்சமாகும். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey (HCES)) நிலை அளவிலான தரவை பகுப்பாய்வு செய்ததில், இந்தத் தரவு, மாநில அரசுகளிடமிருந்து கூடுதல் விநியோகம் உட்பட, பொது விநியோக முறை (PDS) மூலம் மக்கள் பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் அளவைக் காட்டுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) வழங்கிய அரிசி மற்றும் கோதுமையின் அளவுடன், மாநில அளவிலான ஒதுக்கீடுகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தோம்.
இந்த ஒப்பீடு ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான குறிப்பிட்டக் காலத்துடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிடத்தக்க முரண்பாட்டை வெளிப்படுத்துகின்றன. ஒதுக்கப்பட்ட தானியங்களில் 28 சதவீதம், சுமார் 19.69 மில்லியன் மெட்ரிக் டன் (million metric tonnes (MMT)) அரிசி மற்றும் கோதுமை, வரையறுக்கப்பட்ட பயனாளரைச் சென்றடையவில்லை. இதன் காரணமாக, அரிசி மற்றும் கோதுமையின் சட்டவிரோத வெளியேற்றத்தால் சுமார் ரூ.69,108 கோடி நஷ்டம் ஏற்படுத்துகிறது. மேலும், இது ஒரு வருடாந்திர இழப்பு, இது செலவுகள் அதிகரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும், ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்றாகும்!
சாந்த குமாரின் கீழ் தானிய மேலாண்மை குறித்த உயர் அதிகாரக் குழுவின் 2015-ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொது விநியோக அமைப்பில் (PDS) பெரிய அளவில் சட்டவிரோத வெளியேற்றம் இருப்பதை இந்திய அரசாங்கம் அறிந்திருந்தது. அந்த நேரத்தில், 2011-12-ன் குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு (HCES) அடிப்படையில், இந்த வெளியேற்றங்கள் சுமார் 46 சதவீதம் என மதிப்பிடப்பட்டது. 2016-ம் ஆண்டில், அரசாங்கமானது நியாய விலைக் கடைகளில் (Fair Price Shops (FPS)) பாயின்ட்-ஆஃப்-சேல் (Point-of-Sale (PoS)) எனும் விற்பனை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த இயந்திரங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் நிகழ்நேர பரிவர்த்தனை கண்காணிப்பு மூலம் இந்த வெளியேற்றங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இன்று, நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் (FPS) கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பாயின்ட்-ஆஃப்-சேல் (PoS) இயந்திரங்களைக் கொண்டுள்ளன. இந்த மாற்றம் சட்டவிரோத வெளியேற்றத்தை 46 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைக்க உதவியது. ஆனால், இந்த விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. மாநிலங்களில் சட்டவிரோத வெளியேற்றம் கடுமையாக வேறுபடுகின்றன என்பதை விளக்கப்படம் காட்டுகிறது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் குஜராத் ஆகியவை பொது விநியோக அமைப்பில், சட்டவிரோத வெளியேற்றத்தின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களில் உள்ளன. இருப்பினும் அகில இந்திய அளவில், இந்த வெளியேற்றம் 28 சதவீதமாக உள்ளது. இது PDS-ஐ சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை இவை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
இப்போது ஊட்டச்சத்து பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம். 2011-12ஆம் ஆண்டை விட 2022-23ஆம் ஆண்டில் பருப்பு மற்றும் காய்கறிகளுக்கான செலவு குறைந்துள்ளதாக குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பின் (HCES) தரவு காட்டுகிறது. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (2019-21) தரவுகள்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5 சதவீதம் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 19.3 சதவீதம் பேர் வீண்விரயமடைந்தவர்களாகவும், 32.1 சதவீதம் பேர் எடை குறைவாகவும் உள்ளனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, சில நியாய விலைக் கடைகளை (FPS) "ஊட்டச்சத்து மையங்களாக" (nutrition hubs) மாற்ற வேண்டும். இந்த மையங்கள் தானியங்களுக்கு கூடுதலாக முட்டை, பருப்பு வகைகள், தினை மற்றும் பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வழங்க முடியும். டிஜிட்டல் உணவு கூப்பன் அமைப்பு (coupon system) பயனாளிகள் இந்த கூப்பன்களை மையங்களில் பரந்த அளவிலான சத்தான உணவுக்காக மீட்டெடுக்க அனுமதிக்கும்.
சுருக்கமாக, பொது விநியோக அமைப்பில் (PDS) சீர்திருத்தம் தேவை. 57% மக்களுக்கு இலவச உணவு வழங்குவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மிகவும் ஏழ்மை நிலையில் மேல் (above antyodaya) உள்ளவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price (MSP)) பாதியையாவது செலுத்த வேண்டும். இதில் கிடைக்கும் சேமிப்பை மீண்டும் விவசாயத்தில் முதலீடு செய்யலாம். சட்டவிரோத வெளியேற்றத்தை குறைக்க, பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதைக் கருத்தில் கொள்ளலாம். நியாய விலைக் கடைகளில் (FPS) ஊட்டச்சத்து மையங்கள் மூலம் ஆரோக்கியமான உணவுக்கான டிஜிட்டல் கூப்பன்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
குலாட்டி புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும் தாஸ் ICRIER இல் ஒரு ஆராய்ச்சி பணியாளர் ஆவார்.