இந்தியாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை செய்வதற்கான உரிமைகளில் சமத்துவம் பெற, காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குடிமக்களை சூழ்ந்துள்ள தடைகளை அகற்ற வேண்டும்.
2024-ஆம் ஆண்டு தேர்தல் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) மார்ச் மாதம் தேர்தலை அறிவித்தபோது, சமூக ஊடகங்களில் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நீண்ட வீடியோவில் ஒரு சைகை மொழி பெயர்ப்பாளர்கள் (sign language interpreters) இல்லை. இது இந்தியாவில், அன்றாட வாழ்க்கை காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள (Deaf and Hard of Hearing (DHH)) குடிமக்களை எவ்வாறு விலக்கிவைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
உள்ளடக்கம்:
இந்தியா கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளில் நேர்மையை விரும்புகிறது. ஆனால், காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள நபர்களை விலக்கும் தடைகளை அகற்றாமல் அதை செயல்படுத்த முடியாது.
தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாடுத் திட்டம், செவித்திறன் குறைபாட்டைத் தடுத்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் மருத்துவ மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. இது திரையிடல் மற்றும் செவிப்புலன் கருவிகளைப் (screening and hearing aids) பற்றி பேசுகிறது. ஆனால், காது கேளாதோர் தொடர்புகொள்வதற்கு தேவையான இந்திய சைகை மொழியைக் (Indian Sign Language (ISL)) குறிப்பிடவில்லை. 2015-ல் சமூக நீதி அமைச்சகம் (Social Justice Ministry) இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை (Indian Sign Language Research and Training Center (ISLRTC)) நிறுவியது. ஆனால், இந்திய சைகை மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy 2020) படி, பள்ளிகளில் ISL கற்பிக்க பரிந்துரைக்கிறது. ஆனால், காதுகேளாதவர்களுக்கான பள்ளிகளில் கூட அதன் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது.
சைகைமொழி மற்றும் வாய்மொழி (Sign language versus oralism)
இந்தியக் கல்வி முறை இன்னும் "வாய்மொழி" (“oralism”) மீது கவனம் செலுத்தி வருகிறது. இந்த அணுகுமுறையில், காது கேளாதவர்கள் தொடர்புகொள்வதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் குரலைப் பயன்படுத்துகிறார்கள் உதடுகளைப் படிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.
காதுகேளாதோர் பள்ளிகளில் உள்ள பெரும்பாலான கல்வியாளர்கள் இந்திய சைகைமொழி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெறவில்லை. தற்போதைய காது கேளாதோர் கல்வி முறை "மறுவாழ்வு" (“rehabilitation”) மீது கவனம் செலுத்துகிறது. காது கேளாதோர் சமூகத் தடைகளை அகற்றுவதற்குப் பதிலாக தங்கள் சுற்றுப்புறங்களுடன் சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். பேசுவதில் மட்டுமே கவனம் செலுத்துவது, குறைபாடுகள் இல்லாதவர்களுக்கு ஆதரவாக இருக்கும் உலகில் காது கேளாதவர்களை தனிமைப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், சைகைமொழியைப் பயன்படுத்துவது காது கேளாத குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் மொழி சிக்கல்களைத் தவிர்க்கிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகள் சைகை மொழிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. காதுகேளாத குடிமக்களுக்கு கல்வி மற்றும் முக்கியமான தகவல்களை எளிதில் அணுகக்கூடியதாக ஆக்குகிறது.
இந்தியாவில் ஒரு தலை எண்ணிக்கை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 50 லட்சம் செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருந்தனர். தேசிய காதுகேளாதோர் சங்கம் (National Association of the Deaf) செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 18 மில்லியன் என்று கூறுகிறது. உலக சுகாதார அமைப்பு 63 மில்லியன் இந்தியர்களுக்கு குறிப்பிடத்தக்க செவித்திறன் குறைபாடு இருப்பதாக கருதுகிறது. ஆனால், அவர்கள் பெரும்பாலும் நம் சமூகத்தை விட்டு வெளியேறுகிறார்கள். காதுகேளாத குழந்தைகளில் 5% மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். வாய்மொழி பாட அமைப்பு காரணமாக அவர்கள் பட்டம் பெற அதிக நேரம் எடுக்கும்.
காதுகேளாதவர்களுக்கு அரசாங்கம் வேலை பெற்றுத்தர முயற்சிகள் எடுத்தாலும், அவர்கள் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 40%-க்கும் குறைவான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆட்சேர்ப்பு காரணமாக 2020-ல் போராட்டங்கள் வெடித்தன. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act,2016-(RPDA)) மொழியைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் போதுமானதாக இருப்பதாக மேற்கோள் காட்டி, இந்திய சைகைமொழியை அங்கீகரிக்க பல கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோல்வி, எதிர்ப்புகள் இருந்தபோதிலும், காதுகேளாதவர்கள் இன்னும் எப்படி ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
காது கேளாதவர்களுக்கு அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? பொதுப் போக்குவரத்து அறிவிப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது கட்டமைப்புகளுக்குள் திசைகள் மற்றும் உதவி எண்களை அழைப்பது கூட அணுகல் இல்லாததால் தீர்க்க முடியாத பணிகளாக மாறும். மற்றவர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் அன்றாட விஷயங்கள் பல ஆண்டுகளாக போர்களாக மாறுகின்றன. 1987-ஆம் ஆண்டில் தூர்தர்ஷன் ஐ.எஸ்.எல்லில் வாராந்திர செய்திப் பிரிவில் முன்னோடியாக இருந்தபோதிலும், தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் இதைப் பின்பற்றவில்லை. திரைப்படங்கள், இந்தியன் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டிகள் மற்றும் OTT நிகழ்ச்சிகளை அணுகலாம். ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
காது கேளாதோர் சமூகத்திற்கான வாய்ப்புகள் வீட்டு பராமரிப்பு வேலைகள், காத்திருப்பு ஊழியர்கள் மற்றும் தரவு உள்ளீடு போன்ற வேலைகளைப் பெறுகிறார்கள். தனியார் நிறுவனங்கள் தலைப்பு மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற உதவிகளை வழங்குகின்றன. ஆனால், அரசாங்கம் அதிகம் செய்யவேண்டும். காது கேளாதோர் சிறந்த கல்வி மற்றும் வேலைக்காக மாநில மற்றும் தேசிய அளவில் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்கள் பெரும்பாலும் வெற்று வாக்குறுதிகளை எதிர்கொள்கின்றனர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities Act,(RPDA)) கூட, கொள்கை மாற்றங்கள் மற்றும் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், அவை சரியாக செயல்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால் காதுகேளாதோர் சமூகம் சுகாதார சேவையைப் பெறுவதில் சவால்களையும் கூடுதல் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறது. சைகைமொழியில் போதிய மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால், மனநலப் பராமரிப்பைப் பெறுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. 2017-ஆம் ஆண்டின் மனநலப் பாதுகாப்புச் சட்டம் (Mental Healthcare Act, 2017) அனைவருக்கும் மனநலப் பாதுகாப்பை உறுதியளிக்கிறது என்றாலும், அது சரியாகச் செயல்படவில்லை. 250 சான்றளிக்கப்பட்ட சைகைமொழி மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், எத்தனை மனநல நிபுணர்கள் சைகைமொழியில் பயிற்சிபெற்ற மனநல நிபுணர்கள் என்பது குறித்த தெளிவானத் தரவு இல்லை.
என்ன செய்ய வேண்டும்
தற்போதைய சூழ்நிலை மாற வேண்டும் விஷயங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும். இந்திய சைகை மொழி அதிகாரப்பூர்வமாக ஒரு மொழியாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செவித்திறன் மற்றும் காது கேளாதோர் மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். இது அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஒவ்வொருவரும் இந்திய சைகைமொழியை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி மொழியில் சரளமாக இருக்க வேண்டும்.
அனைத்து மட்டங்களிலும் காது கேளாதவர்களுக்கான தகவல்தொடர்புகளை சுகாதார அமைப்புகள் மேம்படுத்த வேண்டும். காதுகேளாதோர் மற்றும் காதுகேளாத நோயாளிகள் தங்கள் மொழியைப் புரிந்துகொள்ளும் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ஆனால், மருத்துவ பல் மற்றும் செவிலியர் ஆணைய விதிகள் காது கேளாதோர் நபர்கள் சுகாதார நிபுணர்களாக மாறுவதை கடினமாக்குகின்றது. அவர்களை சுகாதாரப் பணிகளில் அமர்த்துவது அவர்களை மாற்றுவது மட்டுமல்லாமல் இந்திய சைகைமொழி மொழிப்பெயர்ப்பாளர்களை பிரதான பணிகளில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கும்.
காதுகேளாதோர் நிகழ்ச்சிகள் எல்லா ஊடக சேனல்களிலும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆங்கிலமொழி தொலைகாட்சிகளில் பொதுவாக வசன வரிகள் இருக்கும். ஆனால், இந்தி மற்றும் பிற பிராந்திய சேனல்களுக்கு இந்திய சைகை மொழி விளக்கம் அல்லது வசன வரிகள் இல்லை. அரசாங்க நிகழ்வுகள் பல நாடுகளைப் போலவே நேரடி இந்திய சைகை மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். சரியான திசையில் சரியான நேரத்தில் தலையீடுகள் மூலம், தேர்தல் ஆணையத்தால் கட்டளையிடப்பட்ட அடுத்த தேர்தலில் நிகழ்நேர இந்திய சைகை மொழி பெயர்ப்பாளர்களின் விளக்கங்களை நாம் காணலாம்.
அனுக்ரதி நிகம் ஒரு தரவு விஞ்ஞானி மற்றும் புனேவில் உள்ள சமூக பயன்பாட்டு ஆராய்ச்சி சங்கத்தில் ஆராய்ச்சி தன்னார்வலர் (Association of Socially Applicable Research) ஆவார். ராதிகா சர்மா புனேவில் உள்ள சமூகப் பயன்பாட்டு ஆராய்ச்சி சங்கத்தில் ஆராய்ச்சி தன்னார்வலராக உள்ளார். டாக்டர் சதேந்திர சிங் ஒரு ஊனமுற்றோர் உரிமைகள் பாதுகாவலர் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியில் இயக்குநர் பேராசிரியர் ஆவார்.