முஸ்லிம்களுக்கான ஓபிசி இடஒதுக்கீடு குறித்த கொல்கத்தா உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏன் கேள்விகளை எழுப்புகிறது? -ஃபைசன் முஸ்தபா

 பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயல்பாடுகளை உயர்நீதிமன்றம் ஆராய்ந்ததால், முஸ்லீம் அல்லாத சாதியினருக்கான அதன் பரிந்துரைகளையும் அது பார்த்திருக்க வேண்டும். பொது விசாரணைகள் நடத்தப்பட்டதா மற்றும் பிரதிநிதித்துவம் போதுமானதா என சரிபார்ப்பதும் இதில் அடங்கும்.


இந்திய அரசியலமைப்பு சமூக நீதியை உறுதியளிக்கிறது மற்றும் சமத்துவத்தை அடைய பின்தங்கியவர்களுக்கு உதவ சிறப்பு விதிகளை உருவாக்க அரசாங்கத்தை அனுமதிக்கிறது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், தேர்தல் வெற்றிபெற, இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளன. 


முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அல்லது பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசும்போது "திருப்திப்படுத்துதல்" (“appeasement”) என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பட்டிதார், குஜ்ஜார், ஜாட், மராத்தியர்கள் அல்லது பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்  (Economically Weaker Section (EWS))  போன்ற குழுக்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் போது பயன்படுத்தவில்லை. இதேபோல், பல்வேறு சாதிகள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படும்போது அல்லது பட்டியல் வகுப்பினர்களாக (Scheduled Caste (SC)) பட்டியலுக்கு மாற்றப்படும் போது, ​​அது பொதுவாக ஒரே மாதிரியின் ஒரு பகுதியாகும். அகிலேஷ் யாதவ் மற்றும் யோகி ஆதித்யநாத் இருவரும் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது, ​​17-இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை பட்டியல்  வகுப்பினர்களாக ((Scheduled Caste (SC))  சேர்த்தனர்.


இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு நீதித்துறை அளித்த பதில் இரண்டு போக்குகளைக் காட்டுகிறது. முதலாவதாக, நீதித்துறை இந்த கொள்கைகளுக்கு நீதிமன்றங்கள் மிகவும் ஆதரவாக இல்லை. பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டை எதிர்த்தல் மற்றும் "பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர்" (“creamy layer”) விலக்களிக்கப்பட்டு (இந்திரா சஹானி, 1992), எம்.ஆர்.பாலாஜி, 1963  வழக்கில்  50% உச்ச வரம்பு கொண்டுவரப்பட்டது மற்றும் (பி.என்.திவாரி, 1964) வழக்கில் "முன்னோக்கி எடுத்துச் செல்லுதல்" (“carry forward”) விதியை நீக்கியது.  நீதித்துறை பொது வேட்பாளர்களுக்கு அதிக அனுதாபம் காட்டுகிறது. "செயல்திறனை" அதிகரிக்க வலியுறுத்துகிறது.


முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பல வழக்குகளில், நீதிமன்றம் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு இந்தக் கொள்கைகளை மிக நெருக்கமாக ஆராய்கிறது. 2008-ஆம் ஆண்டு அசோக் தாக்குரின் வழக்கில் உறுதியான நடவடிக்கையின் பிற வழக்குகளில் இது  போன்ற அணுகுமுறைகளை நீதிமன்றம் நிராகரித்திருந்தாலும், இந்தக் கொள்கைகளை உன்னிப்பாக ஆராய்கிறது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தபபிரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோரின் 211 பக்க தீர்ப்பில், சில முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர் சேர்க்கப்பட்டதை ரத்து செய்ததுடன், மேற்கு வங்க மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளை விமர்சித்தனர்.


இந்த முடிவை முதலில் எடுத்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மம்தா பானர்ஜி அல்ல. 2010 மார்ச் 5-முதல் செப்டம்பர் 24 வரை 42 முஸ்லிம் சாதிகளில் 41 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மம்தா பானர்ஜி 2011 மே-20, அன்று முதல்வரானார். மே 11, 2012 அன்று, 35 சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அவற்றில் 34 முஸ்லிம் சாதிகள். 2012-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் 77 OBC சாதிகளை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தியது. இந்த முடிவுகளை நான்கு காரணங்களுக்காக  அமர்வு ரத்து செய்தது: 


முதலாவதாக, நிர்வாக உத்தரவுகள் மூலம் சாதிகள் சேர்க்கப்பட்டன.


இரண்டாவதாக, மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் துணை வகைப்பாடு குறித்து ஆலோசிக்கவில்லை.


மூன்றாவதாக, பரிந்துரைகள் ஆழமான அனுபவக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இல்லை.


நான்காவதாக, மாநில அரசுப் பணிகளில் "பிரதிநிதித்துவத்தின் போதாமை" (“inadequacy of representation”) முழுமையாக ஆராயப்படவில்லை.


மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையச் சட்டம், 1993 (Backward Classes Act, 1993) பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின்  பரிந்துரைகளை கட்டாயமாக்கியது. என்பதை உயர்நீதிமன்றம் சரியாகச் சுட்டிக்காட்டியது. இருப்பினும், 2012-ஆம் ஆண்டு  சட்டம் இந்த தேவையை பலவீனமடைய செய்தது. அனைத்து வழக்குகளிலும் இது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


இருப்பினும், நீதிபதி சக்ரவர்த்தியின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின்  அறிக்கைகளை ஆய்வு செய்தது வழக்கமான நீதித்துறை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது. இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்வாக உத்தரவு மூலம் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறியதை நீதிமன்றம் புறக்கணித்தது, இது "சட்டமன்றக் கடமைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு" என்ற முடிவை சர்ச்சைக்குரியதாக்கியது. 


இந்தியக் குடியரசுத் தலைவர், ஆளுநருடன் கலந்தாலோசித்த பிறகு, சட்டப்பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் பட்டியல் சாதிகள் (Scheduled Castes (SC)) அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) பட்டியலில் எந்த சாதி அல்லது பழங்குடியினரையும் சேர்க்கலாம்.


2006-ஆம் ஆண்டின் தரவுகள் 2010-ஆம் ஆண்டளவில் காலாவதியானவை என்ற அடிப்படையில் சச்சார் குழுவின் (Sachar Committee) கண்டுபிடிப்புகளை உயர்நீதிமன்றம் நிராகரித்திருப்பது விசித்திரமானது. ஏனெனில், தரவு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுவதில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு கூட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். எடுத்துக்காட்டாக, 1991-ல், 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் OBC-களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க 1980-ஆம் ஆண்டு மண்டல் ஆணையத்தின் அறிக்கை (Mandal Commission's Report) பயன்படுத்தப்பட்டது. அப்படியென்றால், நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான பழமையான சச்சார் குழு அறிக்கையை உயர்நீதிமன்றம் ஏன் கவனிக்கவில்லை?


 மக்கள் தொகையில் 5% மட்டுமே கணக்கெடுப்பு நடத்தியதாக ஆணையத்தை  உயர் நீதிமன்றம் விமர்சித்தது. 406 மாவட்டங்களில் 405-ல் உள்ள இரண்டு கிராமங்கள் மற்றும் ஒரு தொகுதியில் மட்டுமே மண்டல் ஆணையம் ஆய்வு நடத்தியது ஆச்சரியமாக உள்ளது. மேலும், சச்சார் கமிட்டி "முஸ்லிம்களுக்கு" மட்டுமே சமவாய்ப்பு ஆணையத்தை பரிந்துரைத்ததாக உயர்நீதிமன்றம்  பத்தி 106-ல்   கூறுவது தவறு.

 

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயல்பாடுகளை உயர்நீதிமன்றம் ஆராய்ந்ததால், பொது விசாரணைகள் நடத்தப்பட்டதா மற்றும் பிரதிநிதித்துவ குறைபாடுகள் ஆராயப்பட்டனவா என்பதைப் பார்க்க முஸ்லிம் அல்லாத சாதிகளுக்கும் இதைச் செய்திருக்க வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் மண்டல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசால் பல முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது இந்த தீர்ப்பை சர்ச்சைக்குரியதாக ஆக்கியது.

 

சில இந்து வகுப்பினர் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் என்று தீர்ப்பு ஒப்புக்கொண்டது. பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு வேறுபட்டது என்று கூறியது. பல முஸ்லீம் வகுப்பினர், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் இருந்து மதம் மாறியவர்கள் என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. 2018-ஆம் ஆண்டு ஜர்னைல் சிங்கில் (Jarnail Singh) உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தொழில்சார் வகுப்பினர்களை பட்டியலிடப்பட்ட வகுப்பினர்களுக்குள் சேர்ப்பது அவர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதை நிரூபிக்கிறது. அவர்கள் மதம் மாறிய நேரம் மற்றும் நோக்கம் குறித்து இந்தத் தீர்ப்பு பொருத்தமற்றக் கேள்வியை எழுப்பியது. இந்த மாற்றங்கள் சுமார் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தன. மதம் மாறுவது தனிப்பட்ட விருப்பம் என்பதால், மதமாற்றத்தின் நோக்கத்தை பிற்படுத்தப்பட்ட ஆணையம் சரியாக விசாரிக்கவில்லை.


2000-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாக "பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் அவர்களது சந்ததியினரிடமிருந்து கிறிஸ்தவ மதம் மாறியவர்கள்" அங்கீகரிக்கப்பட்டதை அந்தத் தீர்ப்பு கவனிக்கவில்லை. பிராமணர்கள் உட்பட பல உயர்சாதி இந்துக்கள் மத்திய மற்றும் மாநிலப் பட்டியல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 


இந்த வழக்கில், முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மத அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இருப்பினும், முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் இந்த இடஒதுக்கீட்டைப் பெறுவது அவர்களின் பிற்படுத்தப்பட்டதன் காரணமாகவே தவிர, அவர்களின் மதம் அல்ல. "பிற்படுத்தப்பட்ட" (backaward”) முஸ்லீம்களும் அவர்களது முஸ்லிமல்லாத நபர்களுக்கு கிடைக்கும் சலுகைகளைப் பெறட்டும்.




Original article:

Share: