ஐந்து நாட்களில் கேரளாவைத் தாக்கும் பருவமழை : 'பருவமழையின் தொடக்கம்' (onset of monsoon) என்றால் என்ன?

 கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. பருவமழையின் தொடக்கமானது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாத மழைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது நாட்டின் வருடாந்திர மழைப்பொழிவில் 70%-க்கும் அதிகமாகக் மழைபொழிவை  கொண்டு வருகிறது.


தென்மேற்கு பருவமழை முன்னேறி வருவதாகவும், அடுத்த ஐந்து நாட்களில் கேரள கடற்கரையில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


இந்த சாதகமான சூழல், இறுதியில் வெப்ப அலையிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெப்பநிலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்தில் சில நாட்களுக்குப் பிறகு இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.



'பருவமழையின் தொடக்கம்' (‘onset of monsoon’) என்றால் என்ன?


கேரளாவில் பருவமழை தொடங்குவது இந்தியாவில் ஜூன்-செப்டம்பர் தென்மேற்கு பருவமழை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது நாட்டின் வருடாந்திர மழையில் 70%-க்கும் அதிகமான மழைப் பொழிவைக் கொண்டுவருகிறது. இந்தியாவின் பொருளாதார நாட்காட்டியில் (India’s economic calendar) இது ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பருவமழையின் தொடக்கம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெரிய அளவிலான வளிமண்டல மற்றும் கடல் சுழற்சிகளில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. 2016-ல் அமைக்கப்பட்ட சில குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால் மட்டுமே பருவமழைத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிக்கிறது. பொதுவாக, ஒரு குறிப்பிட்டப் பகுதியில் எவ்வளவு மழை பெய்கிறது, எவ்வளவு கனமாக இருக்கிறது, காற்று எவ்வளவு வேகமாக வீசுகிறது என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் சரிபார்க்கிறது.


மழைப்பொழிவு:


மே 10-க்குப் பிறகு, கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள 14 வானிலை நிலையங்களில் குறைந்தது 60% 2.5 மிமீ மழை பெய்தால், பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இது நடந்தால், குறிப்பிட்ட காற்று மற்றும் வெப்பநிலை நிலைமைகள் பூர்த்தி செய்யப்பட்டால், இரண்டாவது நாளில் கேரளாவில் பருவமழை தொடங்கியது என்று அறிவிக்கப்படும். 14 வானிலை நிலையங்கள் என்பது மினிகாய், அமினி, திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், காசர்கோடு மற்றும் மங்களூரு ஆகியவற்றைக் குறிக்கும்.


காற்றுப் புலம் ( Wind field):


பூமியின் நடுவில் மேற்கிலிருந்து வீசும் வலுவான காற்று பூமத்திய ரேகையிலிருந்து 10 டிகிரி வடக்கு அட்சரேகை வரையிலான பகுதியில் 55 முதல் 80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை வரை சுமார் 600 ஹெக்டோபாஸ்கல்களை எட்ட வேண்டும். மற்றொரு பகுதியில், 5 முதல் 10 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 70 முதல் 80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை வரை, காற்றின் வேகம் 925 ஹெக்டோபாஸ்கல்ஸ் அழுத்தத்தில் 15 முதல் 20 நாட்ஸ் (28-37 கிமீ) வரை இருக்க வேண்டும்.


வெப்பம் (Heat):


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுபடி, INSAT-பெறப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலைக் கதிர்வீச்சு (Outgoing Longwave Radiation (OLR)) மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு 200 வாட்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும். வெளிச்செல்லும் நீண்ட அலைக் கதிர்வீச்சானது பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தால் விண்வெளிக்கு உமிழப்படும் ஆற்றலை அளவிடுகிறது. இந்த வழிகாட்டுதல் 5 முதல் 10 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 70 முதல் 75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதிக்கு பொருந்தும்.


பொதுவாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒவ்வொரு ஆண்டும் மே 15 முதல் மே 20-ற்குள் பருவமழை தொடங்கும். வழக்கமாக மே கடைசி வாரத்தில் கேரள கடற்கரையில் பருவமழை தொடங்கும். இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை தொடக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாது.




Original article:

Share: