விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறைக்கு இஸ்ரேலின் சவால் -HT தலையங்கம்

 இஸ்ரேலிய விமானப்படைத் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். டெல் அவிவ் (Tel Aviv) உலகளாவிய விதிகளைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.


தெற்கு காசாவின் ரஃபாவில் உள்ள ஒரு கூடார முகாமில் 45 பேரைக் கொன்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court (ICC)) போன்ற உலகளாவிய விதிகள் மற்றும் அமைப்புகளை டெல் அவிவ் புறக்கணிப்பதைக் காட்டுகிறது. இந்த நடவடிக்கை இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பிளவை ஆழப்படுத்தும். அவற்றில் சில காசா பகுதியில் பொதுமக்களை குறிவைப்பதை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளன அல்லது பாலஸ்தீனிய அரசை முறையாக அங்கீகரிப்பதற்காக செயல்பட்டன. இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதலை ஒரு "துயரகரமான விபத்து" (“tragic mishap” ) என்று  அழைத்தார். ஆனால் காசாவில் மருத்துவமனைகள், ஐ.நா. ஊழியர்கள் மற்றும் சர்வதேச உதவிப் பணியாளர்களை இஸ்ரேலிய இராணுவம் மீண்டும் மீண்டும் தாக்கிவரும் நிலையில், இதுபோன்ற காரணங்கள் அர்த்தமற்றவை. இந்த சம்பவங்களை விசாரிக்க இஸ்ரேல் முன்வந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் கடுமையான விளைவுகளை  சந்திக்க நேரிடும்.


ரஃபாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. காசாவின் 85% மக்கள் தஞ்சமடைந்துள்ள ஒரு பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது என்பது இஸ்ரேலிய தலைமை பாலஸ்தீனியர்களின் உயிர்களை எவ்வளவு குறைவாக மதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. டெல் அவிவ் இனி விமர்சனத்தை "யூத எதிர்ப்பு" ("anti-Semitism") என்று அழைக்க முடியாது. குறிப்பாக இஸ்ரேலியக் குடிமக்கள் ஒரு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்ற நிலையில், போரைத் தொடர்வது பற்றி நெதன்யாகு தொடர்ந்து பேச முடியாது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court (ICC)) மற்றும் சர்வதேச நீதி மன்றம் போன்ற அமைப்புகளை பலவீனப்படுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஏற்கனவே கடுமையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ள மேற்கு ஆசியாவில் தீவிரமயமாக்கலை மோசமாக்கலாம். இந்த நியாயமற்ற மற்றும் தேவையற்ற போரை நெதன்யாகு முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது.




Original article:

Share: