இந்தியா வடிவமைக்க வேண்டிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை குறித்த விவாதம் -சுகன்யா தப்லியால்

 அமெரிக்காவும் சீனாவும் தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு விதிகள் குறித்த உரையாடலை வழி நடத்துகின்றன. இது உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளை தனிமைப்படுத்தக்கூடும். 


எதிர்கால உச்சி மாநாடு (Summit of the Future) செப்டம்பர் 22-23, 2024 உலகளாவிய இராஜதந்திரம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence (AI)) சர்வதேச விதிமுறைகளுக்கு ஒரு முக்கியமான தருணமாக இருக்கும். இந்த உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் ஒன்றிணைந்து உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தத்தை (Global Digital Compact (GDC)) மேம்படுத்துவதற்காக உலகத் தலைவர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் சந்திப்பார்கள். டிஜிட்டல் பிளவுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs)) முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கும் ஒரு கூட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதை உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அடிப்படை உரிமைகள் மற்றும் மதிப்புகளுடன் சீரமைப்பதை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் சர்வதேச நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 


டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நமது சமூகம் மற்றும் உலகளாவிய அரசியலை மாற்றுவதால், செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தைப் பற்றிய உலகளாவிய உரையாடலில் இந்தியா பங்கேற்று அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும். 


புவிசார் அரசியல் போட்டி (Geopolitical contestation)

 

உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தத்திற்கு இணையாக, ஐ.நா பொதுச் சபை செயற்கை நுண்ணறிவு பற்றிய இரண்டு முக்கிய தீர்மானங்களை அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைமையில் நிறைவேற்றியது. 'நிலையான வளர்ச்சிக்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு குறித்த அமெரிக்கா தலைமையிலான தீர்மானம், செயற்கை நுண்ணறிவு ஆளுகைக்கான இணக்கமான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. பகிரப்பட்ட நெறிமுறைக் கொள்கைகள், தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை தரநிலைகளை உருவாக்க உறுப்பு நாடுகளை இது ஊக்குவிக்கிறது. 


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதையும், உலகளாவிய வளர்ச்சி விதிமுறைகளை நிர்ணயிப்பதையும் அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, 'செயற்கை நுண்ணறிவின் திறன் வளர்ப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்' குறித்த சீனா தலைமையிலான தீர்மானம், செயற்கை நுண்ணறிவிலிருந்து சமமான நன்மைகள், டிஜிட்டல் பிளவுகளைக் குறைத்தல் மற்றும் திறந்த வணிகச் சூழலை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த தீர்மானம் உள்ளடக்கத்தை வலியுறுத்துகிறது. உலகளாவிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப தரங்களில் சீனாவை ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்துகிறது. இந்த தீர்மானங்கள் டிஜிட்டல் நிர்வாகத்தில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியை பிரதிபலிக்கின்றது. 


சந்தைகள் மற்றும் சமூகங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தரங்களை வடிவமைப்பதற்கான முக்கிய மன்றமாக ஐ.நா உருவாகி வருகிறது. சவால்களை எதிர்கொள்வதற்கும், தேசிய நலன்களை சமரசம் செய்வதற்கும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஐ.நா ஒரு தளத்தை வழங்குகிறது. 


G-20 மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence (GPAI)) ஆகியவற்றில் இந்தியா தீவிரமான ஈடுபாட்டிலுள்ளது. எனவே, உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் (Global Digital Compact (GDC)) அதன் வளர்ச்சி இலக்குகள் மற்றும் நெறிமுறை தரங்களை ஆதரிக்கிறது. உலகளாவிய டிஜிட்டல் பிளவுகளை குறைக்க  உதவுகிறது மற்றும் உலகளாவிய தெற்கின் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

 

சர்வதேச ராஜதந்திரத்தில் இந்தியாவின் (India’s diplomatic weight) செல்வாக்கு

 

ஐ.நா.வில் இந்தியா ஒரு வலுவான வரலாற்று இருப்பைக் கொண்டுள்ளது மற்றும் உலகளாவிய தெற்குப் பிரச்சினைகளை, குறிப்பாக சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, முதல் ஐ.நா. பருவநிலை மாறுபாடு (United nations Climate Change (UNFCCC)) மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் கடுமையான கோரிக்கைகளை எதிர்க்க 72 வளரும் நாடுகளை உள்ளடக்கிய பசுமைக் குழுவை இந்தியா (Green Group alliance) தொடங்கியது. பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியா பேசிக் குழுவை (Brazil, South Africa, China (BASIC Group)) உருவாக்கி, 2000-களில் அதன் வளர்ச்சி இலக்குகளைப் பாதுகாத்தது. பாரீஸ் ஒப்பந்தம் மற்றும் துபாய் உச்சிமாநாட்டில் காணப்பட்டபடி இந்தியா இந்த செயலில் உள்ள பங்கை தொடர்கிறது. அங்கு வளரும் நாடுகளின் பல்வேறு தேவைகள் மற்றும் திறன்களை பிரதிபலிக்கும் நியாயமான விதிமுறைகளுக்கு அழுத்தம் கொடுத்தது.

 

உலகளாவிய தெற்கு பேச்சுவார்த்தைகளை வழிநடத்துவதில் இந்தியாவின் அனுபவம் மற்றும் அதன் சொந்த சவால்கள் செயற்கை நுண்ணறிவு விவாதங்களில் முக்கியப் பங்கை வகிக்கிறது. உலகளாவிய தென் நாடாக, வரையறுக்கப்பட்ட கணினி வளங்கள், தரவு மற்றும் நிதி போன்ற சிக்கல்களை இந்தியா எதிர்கொள்கிறது. காலநிலை ஒப்பந்தங்களில் நியாயமான விதிமுறைகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது போல், செயற்கை நுண்ணறிவு ஆளுகை விவாதங்கள் சமத்துவம் மற்றும் தேவை  ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


G-20 மற்றும் செயற்கை நுண்ணறிவிற்கான உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence (GPAI))  போன்ற சர்வதேச மன்றங்களில் இந்தியா இந்தப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ், இந்தக் குழுக்கள் செயற்கை நுண்ணறிவு வளங்களுக்கான நியாயமான அணுகலை வலியுறுத்தியுள்ளன. நன்மைகளை சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும்போது அபாயங்களைக் குறைக்கின்றன. உலகளாவிய உறுப்பினர் மற்றும் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (Sustainable Development Goals (SDGs)) அடிப்படையில் வலுவான கட்டமைப்பைக் கொண்ட ஐ.நா.விடம் இந்தக் கவலைகளைக் கொண்டு செல்வது முக்கியம். இந்தியா கூட்டணிகளை அமைப்பதிலும், உலகளாவிய தெற்கு நலன்களில் கவனம் செலுத்துவதிலும் திறமை வாய்ந்தது. ஐநா தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியா தனது முயற்சிகளை விரிவுபடுத்தி, வளரும் நாடுகளின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிசெய்ய முடியும். 


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு மிகவும் சமமான அணுகல், தொழில்நுட்ப திறனை உருவாக்குதல் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வழிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றை இந்தியா ஆதரிக்க வேண்டும். உலகளாவிய தெற்கு மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் குரல்கள் உட்பட பல பங்குதாரர் மாதிரியை  மறுவரையறை செய்ய வேண்டும். சிறிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பிரதிநிதித்துவப்படுத்தப்படாத நிறுவனங்களுக்கு அணுகக்கூடிய தளங்களை உருவாக்குவது இதில் அடங்கும். கூடுதலாக, மனித உரிமைகளை பாதுகாக்கும், சர்வதேச சட்டங்கள், தரங்களுடன் ஒத்துப்போகும் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உள்ளடக்கியவை, மாறுபட்ட முன்னோக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்யும் ஒரு விரிவான செயற்கை நுண்ணறிவு ஆளுகை அணுகுமுறையை இந்தியா ஊக்குவிக்க வேண்டும். 


சவால்களை எதிர்கொள்ள வேண்டும் 

 

நியாயமான செயற்கை நுண்ணறிவு விதிகளுக்கான இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஏனெனில் அமெரிக்காவும் சீனாவும் தங்கள் சொந்த நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் விவாதத்தை நடத்துகின்றன. 

இது உலகளாவிய தெற்கின் தேவைகளை புறக்கணிக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி மிகவும் தெளிவாக உள்ளது.


வளர்ந்த நாடுகளில் வளங்கள் உடனடியாகக் கிடைக்கின்றன, அதே நேரத்தில் வளரும் நாடுகளில் பெரும்பாலும் அடிப்படை உள்கட்டமைப்பு இல்லை. இணைய வசதி மற்றும் மின்சாரம் ஆகியவை செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த சவால்களை எதிர்கொள்ள உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். இது வளரும் நாடுகளில் உள்ள மூல பிரச்சினைகளை தீர்க்காத, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தின் செயல்திறனைக் கட்டுப்படுத்தாத மற்றும் இருக்கும் சமத்துவமின்மைகளை மோசமாக்கும் கொள்கைகளுக்கு வழிவகுக்கும். 


  உலகளாவிய தெற்கை ஆதரிக்கும் இந்தியாவின் வரலாறு, சர்வதேசக் கூட்டங்களில் தீவிர ஈடுபாடு மற்றும் வளரும் நாடாக அதன் சொந்த அனுபவங்கள் ஆகியவை இந்த பிரச்சினைகளில் விவாதங்களை நடத்துவதற்கு வலுவான நாடாக ஆக்குகின்றது. விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், இந்தியா தனது சொந்த இலக்குகளை முன்னெடுத்து நிலையான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்க உதவும்.

 

சுகன்யா தப்லியால் புது தில்லியில் உள்ள கோன் ஆலோசனைக் குழுவில் செயற்கை நுண்ணறிவு கொள்கை நிபுணராக உள்ளார்.



Original article:

Share: