ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface (ULI)) என்றால் என்ன? - லாலதேந்து மிஸ்ரா

 ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface (ULI)) விவசாயிகள் கடன் பெறுவதை எவ்வாறு எளிதாக்கும்? கடன் வழங்குபவர்களுக்கு இது எவ்வாறு உதவும்?


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (digital public infrastructure) உருவாக்கி வருகிறது. ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (என்ற புதிய தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளம், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் கடன் பெறுவதை எளிதாக்கும்.

 

ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் (Unified Lending Interface (ULI)) என்றால் என்ன? 


 ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் என்பது பல்வேறு ஆதாரங்களில் இருந்து வாடிக்கையாளரின் டிஜிட்டல் நிதி மற்றும் நிதி அல்லாத தரவை எளிதாக அணுக கடன் வழங்குபவர்களுக்கு உதவும் தளமாகும். பல்வேறு வகையான கடன் வாங்குபவர்களுக்கு ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் கடன் செயல்முறையை எளிதாக்குகிறது  என்கிறார் ரிசர்வ் வங்கியின்  தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் பன்சால் (Rajesh Bansal). பல்வேறு மாநிலங்களின் நிலப் பதிவுகள் உட்பட டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்கிறது மற்றும் கடன் சோதனைகளை விரைவுபடுத்துகிறது. குறிப்பாக கடன் வரலாறு இல்லாத சிறு மற்றும் கிராமப்புற கடன் வாங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.


 ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் 'பிளக் அண்ட் ப்ளே' (‘plug and play’) அணுகுமுறைக்கு தரப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களை (Application Programming Interfaces (API)) பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பு தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகளை எளிதாக்குகிறது. பல்வேறு மூலங்களிலிருந்து தகவல்களை எளிதாக அணுக அனுமதிக்கிறது. விரைவாக கடன் வழங்குவதன்   மூலம் கடன் வாங்குபவர்கள்  விரைவாக பயனடைவார்கள். 


தரப்படுத்தப்பட்ட, பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (standardised Application Programming Interfaces (APIs)) மூலம் அரசாங்க பதிவுகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வாடிக்கையாளர் தரவை கடன் வழங்குபவர்கள் பெற முடியும். பெரு நிதி (FinTech) நிறுவனங்கள் பல கடன் வழங்குபவர்களுடன் இணைவதற்கும் வாடிக்கையாளர்களைப் பற்றிய சிறந்த நுண்ணறிவைப் பெறுவதற்கும் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.


அது எப்படி வேலை செய்யும்? 


  கடன் வரலாறு (credit history) அல்லது தேவையான ஆவணங்கள் இல்லாத முதல் முறையாக கடன் கோருபவர்களுக்கு, வங்கிக் கடன் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 

ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் மூலம், டிஜிட்டல் கடன் தகவல்களை இப்போது ஒரே தளத்தின் மூலம் அணுக முடியும். இந்த தளம் தரவு வழங்குநர்கள் மற்றும் கடன் வழங்குநர்களை இணைக்கிறது. வருங்கால கடன் வாங்குபவர்களுக்கு கடன்களைப் பெறுவதை எளிதாக்குகிறது. 


ஒருங்கிணைந்த கடன் இடைமுகமானது கடன் விண்ணப்பதாரரின் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய தரவை அணுகுவதற்கு வசதியாக இருக்கும் அதே வேளையில், நிதித் துறையைச் சேர்ந்த வீரர்களை 'பிளக் அண்ட் ப்ளே' (‘plug and play’) மாதிரியின் மூலம் தளத்துடன் இணைப்பதன் மூலம் தரவை அணுக அனுமதிக்கிறது. எனவே, கடன் விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைத் தேடிப் பாதுகாக்க வாரங்கள் செலவிட வேண்டியதில்லை. 


அதற்கு பதிலாக வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company (NBFC)) அல்லது நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்த கடன் இடைமுக இயங்குதளத்தில் கிடைக்கும் ஆதாரங்களில் இருந்து விண்ணப்பதாரரைப் பற்றிய தரவைப் பெறும்.


ஒருங்கிணைந்த கடன் இடைமுகம், விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைச் சேகரிக்கத் தேவையில்லாமல், கடன் விண்ணப்பதாரர்களின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தரவை நிதி நிறுவனங்கள் அணுக முடியும். எடுத்துக்காட்டாக, பால் கூட்டுறவு சங்கங்கள், நிலப் பதிவுகள் மற்றும் விவசாய முறைகள் ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் ஒரு பால் பண்ணையாளர் தங்கள் கடன் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யலாம். இதன் பொருள் கடன் வழங்குபவர்கள் விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் கடன் தகுதியை விரைவாகக் காணலாம், கடன் ஒப்புதல்கள் மற்றும் விநியோகங்களை சில நிமிடங்களுக்கு விரைவுபடுத்தலாம்.

 

நில உரிமை இல்லாததால் விவசாயக் கடனைப் பெற அடிக்கடி போராடும் குத்தகை விவசாயிகளும் கடன்களைப் பெறலாம். ஒருங்கிணைந்த கடன் இடைமுக இயங்குதளம் விவசாய உள்ளீடுகளுக்கான நிதிகளின் பயன்பாட்டைக் கண்காணிக்க முடியும், நில உரிமையைக் காட்டிலும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் விவசாயிகளின் அடையாளத்தை வங்கிகள் சரிபார்க்க அனுமதிக்கிறது. 

இது எப்படி தொடங்கியது? 


ஆகஸ்ட் 10, 2023 அன்று, கடன் வழங்குவதை எளிமையாக்குவதற்காக (Frictionless Credit) பொது தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்போது ஒருங்கிணைந்த கடன் இடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. விரைவான டிஜிட்டல் முன்னேற்றத்துடன், டிஜிட்டல் கடன் வழங்கலுக்கு கடன் மதிப்பீட்டு தரவு ஒரு இடத்தில் கிடைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. 

 

இதற்கு தீர்வு காண, ₹1.6 லட்சத்திற்கும் குறைவான கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card (KCC)) கடன்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு முன்னோடி திட்டம் செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் சோதிக்கப்பட்டது. முடிவுகள் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தன. இம்முறையின் மூலம், கடன் வாங்குபவரின் வீட்டு வாசலில், உதவி அல்லது சுய சேவை முறையில், எந்த ஆவணமும் இல்லாமல் கடன்களை வழங்க முடிந்தது. 



Original article:

Share: