வரி முறையை (tax regime) மேம்படுத்த சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தினால் சிறப்பாகச் செயல்பட முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆணையம் ஏழு வருட மறைமுக வரி முறையை பகுபாய்வு செய்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தின் செப்டம்பர் 9-ஆம் தேதி நடக்கவுள்ளது. ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் இந்த கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. வரி செலுத்துவதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், கொள்கை வழிகாட்டுதல்களை அமைப்பதற்கும், ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் தலைமையில் நடைபெறும் கூட்டம் முக்கியமானது. இந்த ஆணையத்தின் கூட்டம் தவறாமல் நடக்க வேண்டும். நடக்கவிருக்கும் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பு சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தின் சிக்கலான கட்டமைப்பை ஆராய்வதாகும்.
சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம், ஜூன் மாதத்தில் 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (ministerial group (GoM)) செய்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யமுடிவு செய்தது. இருப்பினும், மாநில அமைச்சர்களின் சமீபத்திய கருத்து முன்னேற்றம் மிகவும் சவாலாக இருக்கலாம் என்று கூறுகிறது. வருவாய் நிலையானதாக இருக்கும்போது பெரும்பாலான உறுப்பினர்கள் மாற்றங்களைச் செய்ய தயங்குகிறார்கள். குறைந்தபட்சம் குழுவின் விவாதங்களுக்கு ஒரு காலக்கெடுவை அமைக்க வேண்டும் மற்றும் ஒருமித்த கருத்தை எட்டுவது டினமாக இருந்தால், புதிய விகிதக் கட்டமைப்பிற்கான (revamped rate structure) சில விருப்பங்களை பரிந்துரைக்க ஊக்குவிக்க வேண்டும்.
பின்னர், ஆணையம் மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்கலாம். முக்கிய மாற்றங்களைத் தவிர, ஆரோக்கியக் காப்பீடு (health insurance) மற்றும் ஆயுள் காப்பீடு (life cover) போன்ற சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான 18% சரக்கு மற்றும் சேவை வரியை சரிசெய்ய வேண்டுமா? என்பதையும் சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யலாம். சமீபகாலமாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தியும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் மதுபானம் போன்ற பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியில் சேர்ப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதை பல ஆண்டுகளாக சேர்க்க விரும்பினர். ஆனால், மாநிலங்கள் இந்த முடிவை எதிர்க்கலாம். அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரிக்காக தங்கள் வரி அதிகாரத்தை அதிகம் விட்டுக் கொடுத்தனர். மேலும் பல மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு இடையேயான உறவு மோசமாகிவிட்டதாக (“acrimonious”), முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினைகளை ஆணையம் எவ்வாறு கையாள்கிறது என்பதைக் கவனிப்பது முக்கியம் என்றாலும், சரக்கு மற்றும் சேவை வரி ஆணையத்தின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஆண்டு வருவாய் சுமார் 10% அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மூன்று மாதங்களில் நிகர சரக்கு மற்றும் சேவை வரி(Net GST) வரவுகள் 7-%க்கும் குறைவாகவே அதிகரித்துள்ளன. இருப்பினும், பணத்தைத் திரும்பப்பெறுதல் கணிசமாகக் குறைவாக இருந்த மாதங்களில் அவை சுமார் 15%அதிகரித்தது.
இந்த தரவுகள் குறைவாக இருந்தாலும், ஆணையம் அதை நிராகரிக்கக் கூடாது. தொழில்களுக்கான பதிவுசெய்தல், பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரிய வரிக் கோரிக்கைகளால் ஏற்படும் குழப்பங்கள் போன்ற தவறான திருப்பங்களைத் தடுக்க உதவும்.