சீனா-ஆப்பிரிக்கா மன்றத்தின் நடவடிக்கைகளை இந்தியா கண்காணிக்க வேண்டும் -அபிஷேக் மிஸ்ரா

 பெய்ஜிங்கில் நடைபெறும்  சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Forum on China-Africa Cooperation (FOCAC)) கூட்டத்தில் ஆப்பிரிக்க தலைவர்களின் கருத்துக்கள், ஆப்பிரிக்காவுடன் இந்தியா தனது சொந்த கூட்டாண்மையை வடிவமைக்க உதவும்.


சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான  மன்றத்தின் ஒன்பதாவது கூடுகை பெய்ஜிங்கில் செப்டம்பர் 4-6 தேதிகளில் வரை நடைபெறவுள்ளது. அதிக பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு, அதிக கடன், அரசியலமைப்பிற்கு முரணான இராணுவ கையகப்படுத்தல்கள், இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்கள் போன்ற புவிசார் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை ஆப்பிரிக்க நாடுகள் எதிர் கொண்டு நேரத்தில் இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. மேலும், மத்திய தரைக்கடலில் வணிக கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  


கூடுதலாக, துருக்கி, ரஷ்யா, தென் கொரியா மற்றும் அமெரிக்க-ஆப்பிரிக்க தலைவர்களின் உச்சிமாநாடு ஆகியவற்றுடன் சமீபத்திய பல ஆப்பிரிக்கா + 1 உச்சிமாநாடுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்கத் தலைவர்களும் "உச்சிமாநாட்டு சோர்வை" (summit fatigue) உணர்கிறார்கள். அனைத்து 54 தலைவர்களும் கலந்து கொள்வதற்குப் பதிலாக, 15 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையம் (African Union Commission (AUC)) ஆகியவற்றை உள்ளடக்கிய பன்ஜுல் மாதிரியைப் (Banjul format) பின்பற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

 

ஆப்பிரிக்காவிற்கான சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (Forum on China-Africa Cooperation (FOCAC)) பயனுள்ளதாக இருக்க, ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் சொந்த செயல்திட்டத்தை அமைத்து தங்கள் திட்டமிடலில் அதிக கட்டுப்பாட்டை எடுக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் சீன உத்திகள் பற்றிய பல அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் உள்ளன. ஆனால், ஆப்பிரிக்காவில் மிகக் குறைவாகவே உள்ளன.


 சீனாவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை (Communist Party of China (CCP)) புரிந்து கொள்வதற்கு ஆப்பிரிக்க நாடுகளில் போதுமான திறன், நிபுணத்துவம் அல்லது அரசியல் விருப்பம் இல்லாததால் இந்த தகவல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, ஆப்பிரிக்க அரசாங்கங்கள் கண்டத்தில் கிடைக்கும் சீனாவைப் பற்றிய கலாச்சார மற்றும் மொழி நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவில்லை. இதன் விளைவாக, ஆப்பிரிக்காவின் செல்வாக்கு குறைவாக உள்ளது. சீன தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது. இதன் விளைவாக, ஆப்பிரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர். 


 சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (Forum on China-Africa Cooperation (FOCAC)) 2024- இன் ஆப்பிரிக்க முன்னுரிமைகள் 


பொருளாதார ரீதியாக, 2022-ஆம் ஆண்டு மற்றும் 2024-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்யும் சீனா மிதமான முன்னேற்றத்தையே கண்டுள்ளது. சீனாவின் பொது சுங்க நிர்வாகத்தின் (China’s General Administration of Customs) தரவுகளின்படி, 2024-ஜனவரி முதல் ஜூலை வரை சீனா-ஆப்பிரிக்கா வர்த்தகம் 167 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. சீன ஏற்றுமதிகள் மொத்தம் $97 பில்லியன், ஆபிரிக்க ஏற்றுமதிகள் மொத்தம் $69 பில்லியன். இந்த வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது.

 

ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான மற்றும் வலுவான விவசாயத் துறையை உருவாக்குவது முக்கியமானது. தற்போது, மூல முந்திரி பருப்பை வறுத்தெடுப்பது போன்ற விவசாய பொருட்களை பதப்படுத்துவது ஒரு சவாலாக உள்ளது. சிறிய அளவிலான விவசாயத்தில் அனுபவம் வாய்ந்த சீனா, இந்தியா போன்ற நாடுகள், ஆப்பிரிக்க நிலைமைகளுக்கு ஏற்ற பயிர்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உருவாக்குவதன் மூலம் உதவ முடியும். 


ஆப்பிரிக்க விவசாயத்தை ஆதரிப்பதற்கும், காலநிலை மாற்றத்திற்கு மிகவும் நெகிழக்கூடியதாக மாற்றுவதற்கும் தேவையான நிபுணத்துவம் மற்றும் கருவிகள் அவர்களிடம் உள்ளன. வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த செயற்கைக்கோள் அமைப்புகளை உருவாக்குவது போன்ற ஆப்பிரிக்க விவசாயத்தை மேலும் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதற்கான கருவிகளும் உள்ளது. 


பசுமை எரிசக்தி மற்றும் தொழில் வளர்ச்சியும் முக்கியமானது. ஆப்பிரிக்க நாடுகள் சர்வதேச நட்புநாடுகளை, சுத்திகரிப்பு மற்றும் செயலாக்க மையங்களை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஜிம்பாப்வேயில், சீன நிறுவனங்கள் பேட்டரி தர லித்தியத்தை உற்பத்தி செய்வதற்கும் மதிப்பு சங்கிலியை மேலே கொண்டு செல்வதற்கும் அடிப்படை லித்தியம் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். 


இருப்பினும், நாள்பட்ட மின்சார பற்றாக்குறை, போதிய மின் உற்பத்தி மற்றும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (environmental, social, and governance (ESG)) செலவுகள் ஆகியவை சர்வதேச நிறுவனங்களுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மூல கனிமங்களைச் சுத்திகரிப்பதை கடினமாக்குகின்றன. 


சீனா மற்றும் ஆப்பிரிக்க கடன் -  இந்தியாவுக்கான படிப்பினைகள் 


ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன்  தருவதில் சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. பாஸ்டன் பல்கலைக்கழக உலக வளர்ச்சிக் கொள்கை மையத்தின் கூற்றுப்படி (Boston University Global Development Policy Center) 2000-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் ஆப்பிரிக்க அரசாங்கங்கள் மற்றும் பிராந்திய குழுக்களுக்கு சீனா சுமார் $170 பில்லியன் கடனை வழங்கியது.  சீனக் கடன்கள் ஆப்பிரிக்காவின் பொது மற்றும் தனியார் கடனில் 12% மட்டுமே. சீன “கடன் பொறி இராஜதந்திரம்” ( debt trap diplomacy) பற்றிய யோசனை விவாதிக்கப்படுகிறது. சீனாவின் கடன் வழங்கும்  சில  நடைமுறைகள் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். 


AidData-வின் 2022-ஆம் ஆண்டு ஆய்வில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவுக்கான சீனக் கடன்களில் பாதி இறையாண்மைக் கடன் பதிவுகளில் பட்டியலிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. இது கடன் அளவை துல்லியமாக மதிப்பிடுவதை கடினமாக்குகிறது. 


வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் வெளிப்படுத்தாதது பற்றிய கவலைகள் இருந்தாலும், சீனா கடன்களை மன்னிக்கவோ அல்லது ரத்து செய்யவோ வாய்ப்பில்லை. மாறாக, சீனா சிறிய, வட்டியில்லா கடன்களை தள்ளுபடி செய்யலாம்.


கடந்த காலத்தில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Forum on China-Africa Cooperation (FOCAC)) கூட்டங்களில் ஆப்பிரிக்காவின் அணுகுமுறை பெரும்பாலும் ஒழுங்கற்றதாக இருந்தது. இப்போது, ​​ஆப்பிரிக்க அரசாங்கங்கள் ஒரு தெளிவான ராஜதந்திரத்தை உருவாக்கி, அடுத்த FOCAC உச்சிமாநாட்டிற்கு முன் தங்கள் நிலைகளை ஒருங்கிணைக்க விரும்புகின்றன. வெறும் உதவிகளைப் பெறுவதை விட, வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவும்,  தங்கள் தயாரிப்புகளின் மதிப்பை மேம்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


ஆப்பிரிக்காவில் இந்தியாவின் தலையீடு சீனாவின் தலையீடு போன்றது என்று சிலர் கூறுகிறார்கள். இந்தியா சுதந்திரமாக இயங்குகிறது மற்றும் தொழில்நுட்பம், மனித வளம், விவசாயம் மற்றும் மருந்து போன்ற துறைகளில் அதிக வளர்ச்சியடைந்துள்ளது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தில் ஆப்பிரிக்கத் தலைவர்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விதம், ஆப்பிரிக்காவுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கான முக்கியமான பாடங்களை இந்தியாவுக்குக் கற்பிக்கக்கூடும்.


முதலில், இந்தியா ஆப்பிரிக்காவுடன் நிலையான ஈடுபாட்டை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு (India-Africa Forum Summit (IAFS)) 2015-ல் நடந்தது. CII-EXIM வங்கி கூடுகை மற்றும் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு போன்ற வழக்கமான கூட்டங்கள் நடந்தாலும், இந்தியா விரைவில் நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாட்டை நடத்த வேண்டும். 


ஆப்பிரிக்காவின் எட்டு பிராந்திய பொருளாதார சமூகங்களுடன் (recognised regional economic communities (RECs)) கலந்தாலோசித்து, பரஸ்பர நலன்களைப் பற்றி விவாதிக்க இந்தியா-ஆப்பிரிக்க யூனியன் டிராக் 1.5 பேச்சுவார்த்தை (India-African Union Track 1.5 Dialogue) அமைக்கப்படலாம்.  அடிஸ் அபாபா, எத்தியோப்பியா, ஆப்பிரிக்க ஒன்றியம் அடிப்படையாக கொண்டது. நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டை நடத்த வேண்டும். வழக்கமான ஆலோசனைகளை மேம்படுத்த புதுதில்லியில் ஒரு பிராந்திய ஆப்பிரிக்க ஒன்றியம் (African Union (AU)) அலுவலகத்தையும் நிறுவ முடியும்.


இரண்டாவதாக, ஆப்பிரிக்கப் பொருளாதாரங்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கவும், தொழில்மயமாக்கலை ஆதரிக்கவும் இந்தியா உதவ முடியும். இந்திய நிறுவனங்கள் விவசாயம், மருந்து மற்றும் உற்பத்தி போன்ற அதிக மதிப்புள்ள துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். 


ஆப்பிரிக்காவில் உற்பத்தித் தளங்களை அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் சந்தைகளுக்குச் சேவை செய்யலாம். பண்ணை இயந்திரமயமாக்கல், உணவு பதப்படுத்துதல், நீர்ப்பாசனம், குளிர்பதன சேமிப்பு மற்றும் 'டிரிபிள் ஏ' (மலிவு, பொருத்தமான மற்றும் தகவமைக்கக்கூடிய) தொழில்நுட்பங்களைப்  (‘Triple A’ (affordable, appropriate and adaptable) technologies) பயன்படுத்துவதில் முதலீடுகள் கவனம் செலுத்த வேண்டும்.


மூன்றாவதாக, இந்தியா அதிக தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் புதுமையான நிதி தீர்வுகளை ஆராய வேண்டும். COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஆப்பிரிக்க நாடுகள் புதிய கடன்களைப் பற்றி எச்சரிக்கையாக உள்ளன. எனவே, பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் கலப்பு நிதி ஆகியவற்றை இந்தியா பரிசீலிக்க வேண்டும். 

இந்திய வங்கிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு குறைந்த விலைக் கடன் வழங்குவது இந்திய நிறுவனங்களுக்கு வங்கித் திட்டங்களை உருவாக்க உதவும். EXIM வங்கியின் வர்த்தக உதவித் திட்டம் (Trade Assistance Programme) போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கவும் வங்கி உறவுகளை விரிவுபடுத்தவும் முடியும்.


தொழில்நுட்ப பயன்பாடு (Technology use)


பயோமெட்ரிக்ஸ், மொபைல் இணைப்பு மற்றும் ஜன் தன் தொழில்நுட்பம் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆப்பிரிக்காவுடனான டிஜிட்டல் மற்றும் உடல் தொடர்புகளை மேம்படுத்த முடியும். கென்யா, நமீபியா, கானா மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் ஆர்வத்துடன், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface (UPI)) மற்றும் RuPay சேவைகள் மொரிஷியஸில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. 


வங்கியை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி அபாயத்தைக் குறைக்கவும், இந்தியா டாலர் அடிப்படையிலான கடனுக்குப் பதிலாக ரூபாய் அடிப்படையிலான கடனைப் பயன்படுத்த வேண்டும். இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மாற்று விகித ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க உதவும்.


குடிமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஆப்பிரிக்க நாடுகள்  அதன் உத்திகளில் அதிக கட்டுப்பாட்டை எடுத்து வருகின்றன. ஆப்பிரிக்கா முதலீட்டிற்கான சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தில் (Forum on China-Africa Cooperation (FOCAC)) ஆப்பிரிக்கத் தலைவர்கள் சீனாவுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது, ஆப்பிரிக்காவுடனான தனது சொந்த கூட்டாண்மையை மேம்படுத்த இந்தியாவுக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்பிக்கும்.


அபிஷேக் மிஸ்ரா, மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (MP-IDSA)) இணை ஆய்வாளராக உள்ளார்.



Original article:

Share: