புருனே தாருஸ்ஸலாம் பற்றிய 3 விஷயங்களும் பிரதமர் மோடியின் பயணமும்

 தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளரான புருனேயில் சுமார் 14,000 இந்தியர்கள் தற்போது வசித்து வருகின்றனர். 


பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 3, 2024-ல், புருனே தாருஸ்ஸலாமின் தலைநகரான பண்டார் செரி பெகவனுக்கு பயணம் மேற்கொண்டார். புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் இவர்தான். இந்தியாவும் புருனேயும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையும் அவரது பயணம் குறிக்கிறது. 


தனது பயணத்தின் போது, இந்திய தூதரகத்தின் புதிய சான்சரியை பிரதமர் திறந்து வைத்தார்.  உமர் அலி சைஃபுதீன் மசூதியையும் அவர் பார்வையிட்டார். 



 புருனே தாருஸ்ஸலாம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்:


1. புருனேயின் மக்கள் தொகை மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் 


2023-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, புருனேயில் 4,50,500 இலட்சம்  மக்கள் வசிக்கின்றனர்.  மக்கள் தொகையில் சுமார் 76% புருணை குடிமக்கள். ஏனையவர்கள் நிரந்தர அல்லது தற்காலிக குடியிருப்பாளர்கள். மக்கள்தொகையில் 80%க்கும் அதிகமானோர் இனரீதியாக மலாய் அல்லது சீனர்கள். 


எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 1920-ஆம் ஆண்டுகளில் இந்தியர்கள் புருனேவுக்கு வரத் தொடங்கினர் என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. தற்போது, புருனேயில் சுமார் 14,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். புருனேயின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் இந்திய மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். 


 2. புருனேயின் இராஜதந்திர முக்கியத்துவம் 


இந்தியாவின் 'கிழக்கே செயல்படும் (Act East) கொள்கை’ மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக புருனே உள்ளது. 


1990-ஆம் ஆண்டுகளில் இருந்து 'கிழக்கை நோக்கும் '(Look East) கொள்கைக்குப் பிறகு அடுத்த கட்டமாக 'கிழக்கே செயல்படும் (Act East) கொள்கை’ உருவாக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியா மற்ற நாடுகளுடன், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உறவுகளை வலுப்படுத்த விரும்பியது. தென்கிழக்கு ஆசியாவுக்கு அருகாமையில் இருப்பதால் வடகிழக்கு இந்திய அரசுகள் முக்கியப் பங்காற்றின. 


2014-ஆம் ஆண்டில், இந்த கொள்கை 'கிழக்கே செயல்படும் (Act East) கொள்கை’ என்று புதுப்பிக்கப்பட்டது. 10 உறுப்பினர்களைக் கொண்ட  ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் ASEAN (Association of Southeast Asian Nations) இந்த கொள்கையின் "மைய தூண்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். புருனே ஆசியான் அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது. 


பல தென்கிழக்கு ஆசிய நாடுகள் சமீபத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. இந்த உறவுகளில் வர்த்தகம் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். உதாரணமாக, புருனே இப்பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். 


சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கின் காரணமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் மீது கவனம் செலுத்துவதும் முக்கியம். அதிபர் ஜி ஜின்பிங்கின் கீழ், சீனா மிகவும் சர்வாதிகாரமாக மாறியுள்ளது. சீனாவின் பொருளாதார சக்தி பல திட்டங்களுக்கு நிதியளிக்கவும் கடன்களை வழங்கவும் அனுமதிக்கிறது. இதனால் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக தென் சீனக் கடலில் அதன் நடவடிக்கைகள் குறித்து. சீனாவின் செல்வாக்கை சமப்படுத்த இந்தியா உதவ முடியும். 


3. உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் 


14 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், புருனே தாருஸ்ஸலாம் ஒரு சக்திவாய்ந்த சுல்தானகத்தால் ஆளப்பட்டது. தற்போதைய சுல்தான் உலகின் பழமையான தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் வம்சங்களில் ஒன்றாகும். சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா ஆகஸ்ட் 1, 1968-ஆம் ஆண்டில் புருனேயின் 29-வது சுல்தானாக ஆனார். அவர் தற்போது உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் ஆவார். 


சுல்தான் தனது பரந்த செல்வத்திற்கும் பெயர் பெற்றவர். 2015-ஆம் ஆண்டு டைம் இதழில் வெளியான ஒரு கட்டுரையில், அவர் 600க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கிறார் என்று தெரிவித்தது. அவரது இல்லம், இஸ்தானா நூருல் இமான், உலகின் மிகப்பெரிய அரண்மனை மற்றும் $350 மில்லியனுக்கும் அதிகமான செலவாகும். 


பிபிசியின் கூற்றுப்படி, சுல்தான் உலகின் பணக்காரர்களில் ஒருவர். வாழ்க்கைத் தரம் உயர்ந்த புருனேயில், அவர் தனது குடிமக்களிடையே பிரபலமாக உள்ளார். இருப்பினும், நாட்டில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக அவர் சமீபத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.



Original article:

Share: