நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டு -அபூர்வா விஸ்வநாத் , அஜோய் சின்ஹா ​​கற்பூரம்

 அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுக்க தயாராகி வருகின்றன. எந்த அடிப்படையில் ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம், அதற்கான செயல்முறைகள் என்ன?


அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணிக் கட்சிகள் நோட்டீஸ் கொடுக்க தயாராகி வருகின்றன. கடந்த வாரம் விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையானது.


2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற சேகர் குமார் யாதவ், தனது உரையின்போது சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அவர் ஒரே மாதிரியான பொது உரிமையியல் சட்டத்திற்கு (Uniform civil code) வாதிட்டார்.


அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆற்றிய உரையை உச்சநீதிமன்றம் கவனித்தது. உயர்நீதிமன்றத்திடம் விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.


புதன்கிழமை மாலைக்குள், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டனர். ராஜ்யசபாவில் இந்திய கூட்டணிக்கு 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேவையான 50 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டால் மனுவை வியாழக்கிழமை மாற்றலாம்.


பதவிநீக்க செயல்முறை


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124(4)வது பிரிவில் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்று பிரிவு 218 கூறுகிறது.


பிரிவு 124(4)-ன் கீழ், ஒரு குறிப்பிட்ட செயல்முறை மூலம் ஒரு நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்கிறது. "நிரூபித்த தவறான நடத்தை" அல்லது "இயலாமை" போன்ற இரண்டு காரணகளின் அடிப்படையில்  மட்டுமே  ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்யமுடியும். 


குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில்தான் உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது நடக்கும்.


ஒப்புதலுக்கு, ஒவ்வொரு அவையிலும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை. இதற்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பு முடிவுகள் அதே அமர்வில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும். பதவிநீக்கம் "நிரூபித்த தவறான நடத்தை" அல்லது "இயலாமை" அடிப்படையில் இருக்க வேண்டும்


வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய, இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:


1. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.


2. தீர்மானத்திற்கு ஆதரவான வாக்குகள் ஒவ்வொரு சபையின் மொத்த உறுப்பினர்களில் 50% க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.


இந்த நிபந்தனைகளை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.


குற்றச்சாட்டுக்கான காரணங்களும் செயல்முறைகளும் கடுமையானவை. இதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. பதவி நீக்கம் என்பதும் ஒரு அரசியல் செயல்முறைதான். அதற்கு பரந்த அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இது எந்த சபை தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தது.


நடைமுறை: ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு (impeaching a judge) பின்பற்ற வேண்டிய நடைமுறை நீதிபதிகள் விசாரணை சட்டம் (Judges Inquiry Act), 1968இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ், ஒரு குற்றச்சாட்டுத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமானால், கீழ் மக்களவையில் 100 உறுப்பினர்களுக்குக் குறையாமல், மாநிலங்கவையில் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவும் இருக்க வேண்டும்.


பதவி நீக்க நடவடிக்கையின் முதல் படி தேவையான கையொப்பங்களை சேகரிப்பதாகும். தேசியவாத கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Aga Syed Ruhullah Mehdi செயல்முறையை தொடங்கினார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரான சுயேச்சை  நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் முயற்சி எடுத்தார்.


குழு: தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டதும், சபாநாயகர் அல்லது மாநிலங்கவை தலைவர்  மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்தியத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் இருக்கும் இந்தக் குழு, ஒரு நபர் சபாநாயகர் அல்லது தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் "புகழ்பெற்ற நீதிபதி" (‘distinguished jurist’) என்று கருதப்படுகிறார். உதாரணமாக, 2011ல் நீதிபதி சௌமித்ரா சென்க்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, ​​புகழ்பெற்ற நீதிபதியாக  ஃபாலி நாரிமன் இருந்தார்.


நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை குழு ஆராய்கிறது. மன இயலாமை காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டால், மருத்துவ பரிசோதனைக்கு குழு கேட்கலாம். குழு அதன் செயல்முறையை கட்டுப்படுத்தவும். ஆதாரங்களை சேகரிக்கவும், சாட்சிகள் கேள்வி கேட்கும் செயல்முறை போன்ற அதிகாரங்கள் குழுவிற்கு உள்ளன.


முந்தைய வழக்குகளில், விசாரணையை வழிநடத்த ஒரு வழக்கறிஞரை குழு நியமித்தது. நீதிபதி ராமஸ்வாமி வழக்கில் (1993), இந்திரா ஜெய்சிங் என்ற மூத்த வழக்கறிஞர் குழுவால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞராக இருந்தார்.


குழுவின் கண்டுபிடிப்புகள்: விசாரணைக்குப் பிறகு, குழு தனது கண்டுபிடிப்புகளுடன் கூடிய அறிக்கையை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரிடம் சமர்ப்பிக்கிறது. சபாநாயகர்/தலைவர் அறிக்கையை மக்களவை /மாநிலங்களவையில்  கூடிய விரைவில் சமர்ப்பிக்கிறார்.


நீதிபதி தவறான நடத்தை அல்லது இயலாமை ஆகியவற்றில் குற்றவாளி இல்லை என்று அறிக்கை கண்டறிந்தால், பதவி நீக்க செயல்முறை முடிவடைகிறது.


நீதிபதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்ட சபை அறிக்கையை ஏற்றுக்கொள்கிறது. பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே அமர்வில் குடியரசுத் தலைவரிடம் நீதிபதியை நீக்கக் கோருகின்றன.


குற்றச்சாட்டு நிகழ்வுகள்


சுதந்திரம் பெற்றதில் இருந்து நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான ஆறு முயற்சிகளில் எதுவும் வெற்றி பெறவில்லை. நீதிபதிகள் ராமஸ்வாமி மற்றும் சென் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் மட்டுமே விசாரணைக் குழுக்கள் நீதிபதிகளைக் குற்றவாளிகளாகக் கண்டறிந்தன.


ஆறு வழக்குகளில் ஐந்தில், நிதி முறைகேடு குற்றச்சாட்டு, மீதமுள்ளவை பாலியல் தவறான நடத்தை குற்றச்சாட்டு ஆகும். 


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசாமிக்கு எதிராக 1993-ம் ஆண்டு முதல் பதவி நீக்க நடவடிக்கை தொடங்கியது. நிதி முறைகேடு அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு முன், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிபதிக்கு ஆதரவாக வாதாடினார்.  


அந்த தீர்மானம் தோல்வியடைந்து, ஒரு வருடம் கழித்து நீதிபதி ராமசாமி ஓய்வு பெற்றார்.


2011ஆம் ஆண்டு கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மாநிலங்கவை அவரை பதவி நீக்கம் செய்தது. ஆனால், மக்களவையில் தீர்மானம் விவாதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார். நீதிபதி சென் ராஜினாமா செய்ததன் மூலம் நடவடிக்கைகள் காலாவதியானது.


2015ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ் கே கங்கேலே பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மீண்டும்,  ஒரு குழு விசாரித்து 2017-ல் அவரை விடுவித்தது.


2015ஆம் ஆண்டு, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜஸ்டிஸ் ஜே பி பர்திவாலா, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்டார். நாடு சரியாக முன்னேறாததற்கு இடஒதுக்கீடும் ஒரு காரணம் என்று அவர் ஒரு தீர்ப்பில் கூறிய கருத்துகளின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டது.


நீதிபதி தனது தீர்ப்பில் இருந்து கருத்துக்களை நீக்கிய பின்னர் பதவி நீக்க தீர்மானம் அப்போதைய மாநிலங்கவைத் தலைவர் ஹமீத் அன்சாரியால் கைவிடப்பட்டது.


ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி வி நாகார்ஜுனா 2017 இல் பதவி நீக்கம் செய்ய முயன்றனர். அவர் ஒரு தலித் நீதிபதியை ஏமாற்றியதாகவும் (victimising) நிதி முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.


இரண்டு குற்றச்சாட்டுத் தீர்மானங்களும் தோல்வியடைந்தன. தீர்மானங்களில் கையெழுத்திட்ட மாநிலங்கவை உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் இது நடந்தது. இதனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை.


2018இல் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மிக சமீபத்திய பதவி நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய, மாநிலங்கவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு, ஆரம்ப கட்டத்திலேயே இந்த தீர்மானத்தை நிராகரித்தார்.




Original article:

Share: