பாரதிய பாஷா உத்சவ் என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்


• நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் ஆங்கிலம் அல்லாத, சொந்த மொழிகளைப் பேசுகிறார்கள். ஆழ்ந்த கற்றலுக்கு (deep learning) தாய்மொழி முக்கியம். நமது மொழிகள் தொடர்பு கொள்வதற்கான கருவிகள் மட்டுமல்ல அவை வரலாறு, பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் களஞ்சியங்கள், தலைமுறைகளின் கூட்டு ஞானத்தைப் பாதுகாத்து தனித்துவமான உலகக் கண்ணோட்டத்தை வழங்குகின்றன.


• படைப்பாற்றல் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு நிறைந்த குழந்தைகள், தங்கள் தாய்மொழியில் கல்வியைத் தொடங்கும் போது செழித்து வளர்கின்றனர்.


• அவர்களின் தாய்மொழியின் தொடக்கம் வீட்டிற்கும் வகுப்பறைக்கும் இடையே ஒரு மென்மையான இணைப்பை உருவாக்குகிறது. இது குழந்தைகள் பேசுவதில் இருந்து எழுதுவதற்கு உதவுகிறது. இது சொற்களஞ்சியத்திலிருந்து அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கும், மொழியிலிருந்து பொருள் புரிதலுக்கும் வழிகாட்டுகிறது. "ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்வது பாடப்புத்தகங்களிலிருந்து அல்ல. ஆனால், அவரது தாயிடமிருந்து" என்று ரவீந்திரநாத் தாகூர் கூறினார்.


• தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகள் அடிப்படை புரிதலில் இருந்து சிக்கலான சிந்தனைகளுக்கு ஏற்றவாறு வளர உதவுகிறது. பாரதத்தின் பல மொழிகள் அறிவு மற்றும் கலாச்சாரத்தின் வளமான ஆதாரம். காஷ்மீரின் பனி மலைகள் முதல் கன்னியாகுமரியின் வெயிலில் நனைந்த கடற்கரைகள் (sun-drenched shores) வரை, மற்றும் வறண்ட நிலமான கச்சிலிருந்து கோஹிமாவின் பச்சை மலைகள் வரை, நம் மொழிகள் மக்களின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கின்றன.


• குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பது அவர்களின் பாரம்பரியத்துடன் இணைந்திருக்க உதவுகிறது மற்றும் எதிர்காலத்திற்கு அவர்களை தயார்படுத்துகிறது. குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் வலுவான அடித்தளத்தை வைத்திருந்தால், அவர்கள் மற்ற மொழிகளையும் பாடங்களையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.


உங்களுக்குத் தெரியுமா?:


• அக்டோபர் 3 அன்று, ஒன்றிய அமைச்சரவை மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கி வரலாறு படைத்தது. ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஆறு மொழிகளின் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டது.


• பிப்ரவரி 2, 1835 அன்று, தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்தியாவின் ஆங்கிலேய ஆளுநருக்கு “இந்தியக் கல்வி குறித்த மெக்காலேயின் குறிப்புகள்” (‘Macaulay’s Minute on Indian Education’) என்ற குறிப்பை வழங்கினார். இது தாய்மொழிகளுக்கு மேல் ஆங்கிலத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது. ஆங்கிலேய நலன்களுக்கு விசுவாசமான இந்தியர்களின் வகுப்பை உருவாக்குவதையும் அவர்களின் கலாச்சார மற்றும் மொழியியல் வேர்களிலிருந்து அவர்களை விலக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.


• 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (National Policy on Education) கற்றல் விளைவுகளை மேம்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உயர்தர கற்பித்தல் பொருட்களுக்கு சமமான அணுகலை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. கல்வியுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும். இந்திய மொழிகளை ஆதரிப்பதற்கும் கல்வியை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கும் வலுவான அமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


.  பாஷா சங்கத் திட்டம், 

. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் இயந்திர மொழிபெயர்ப்பு மையம்;


. அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் பல இந்திய மொழிகளில் உள்ள தொழில்நுட்ப புத்தகங்கள் உட்பட புத்தகங்களின் அனுவாதினி செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு;


  • பல்கலைக்கழக மானியக் குழுவின் மொழிபெயர்ப்பு மற்றும் கல்வி எழுத்து (அஸ்மிதா) முயற்சியின் மூலம் இந்திய மொழிகளில் படிப்புப் பொருட்களைப் பெருக்குதல்


  • பாரதிய பாஷா சமிதி.




Original article:

Share: