முக்கிய அம்சங்கள்:
• இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (LFPR)) உலகின் மிகக் குறைந்த அளவில் உள்ளது. 2000 மற்றும் 2019-க்கு இடையில் பெண் LFPR 14.4 சதவீத புள்ளிகள் ஆண்களுக்கான 8.1 சதவீத புள்ளிகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அதன்பிறகு இந்த போக்கு தலைகீழாக மாறியது. பெண்களின் LFPR 8.3 சதவீத புள்ளிகளால் ஆண்களுக்கு 1.7 சதவீத புள்ளிகளுடன் ஒப்பிடும்போது 20129 வரை உயர்ந்துள்ளது.
• கணிசமான அளவு பாலின இடைவெளி உள்ளது. 2022 இல் பெண்களின் LFPR (32.8%) ஆண்களை விட (77.2%) 2.3 மடங்கு குறைவாக இருந்தது.
• இந்தியாவின் குறைந்த LFPRக்கு பெரும்பாலும் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் காரணம் என்று கூறப்படுகிறது. இது 2022 இல் உலக சராசரியான 47.3%-ஐ விட மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) தரவுகளின்படி தெற்காசிய சராசரியான 24.8% ஐ விட அதிகமாக இருந்தது.
• 2018-19க்குப் பிறகு விவசாயம் அல்லாத வேலைகளை நோக்கிய மாற்றம் குறைந்துவிட்டது. 2019ஆம் ஆண்டில், மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு சுமார் 42% ஆக குறைந்தது, 2000-ல் 60% ஆக இருந்தது.
• கட்டுமானம் மற்றும் சேவைகள் இந்த மாற்றத்தின் பெரும்பகுதியை உள்வாங்கின. மொத்த வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கு 2000-ல் 23% ஆக இருந்த 2019-ல் 32% ஆக அதிகரித்துள்ளது.
• வேலைவாய்ப்பில், உற்பத்தித் துறையின் பங்கு 12-14% ஆக இருந்தது. 2018-19 முதல், இந்த மாற்றம் தேக்கமடைந்துள்ளது அல்லது தலைகீழாக மாறியுள்ளது. விவசாயத்தில் வேலை வாய்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
• இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், வேலைகளின் தரம் இன்னும் கவலையாக உள்ளது. குறிப்பாக, தகுதிகள் கொண்ட இளம் தொழிலாளர்களுக்கு வேலைகளின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை.
உங்களுக்குத் தெரியுமா?
• இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 இன் படி, மோசமான வேலை நிலைமைகள் பற்றிய கவலைகள் உள்ளன. விவசாயம் சாராத வேலைக்கான மாற்றம் தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு பெண்கள் பெரும்பாலும் சுயதொழில் அதிகரிப்பதற்கும், ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளுக்கு செல்வதும் காரணமாகிறது. வயது வந்தோருக்கான வேலைவாய்ப்புடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் வேலைவாய்ப்பு தரம் குறைவாக உள்ளது. ஊதியம் மற்றும் வருமானம் தேக்கநிலையில் உள்ளது அல்லது தலைகிழாக மாறிவருகிறது.
• 2004-05 முதல் 2021-22 வரை “வேலைவாய்ப்பு நிலைக் குறியீடு” (employment condition index) மேம்பட்டது. இருப்பினும், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரபிரேதசம் போன்ற சில மாநிலங்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் அடையாமல் உள்ளன. மறுபுறம், டெல்லி, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன.
. குறியீடு ஏழு தொழிலாளர் சந்தை குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது:
வழக்கமான முறையான வேலையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம்
சாதாரண தொழிலாளர்களின் சதவீதம்
வறுமைக் கோட்டிற்குக் கீழே சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் சதவீதம்
வேலை பங்கேற்பு விகிதம்
சாதாரண தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம்
இடைநிலைக் கல்வி மற்றும் அதற்கு மேல் உள்ள இளைஞர்களின் வேலையின்மை விகிதம்
இளைஞர்கள் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லை
. முறைசாரா வேலைவாய்ப்பு (Informal employment) அதிகரித்துள்ளது. முறையான வேலைவாய்ப்பு துறையில் பாதி வேலைகள் முறைசாரா வேலைகள். குறிப்பாக, பெண்களுக்கு சுயதொழில் மற்றும் ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளும் வளர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 82% தொழிலாளர்கள் முறைசாரா துறையில் உள்ளனர். மேலும், 90% பேர் முறைசாரா வேலையில் உள்ளனர். 2022-ல் 55.8% வேலைவாய்ப்பில் சுயதொழில் முக்கிய ஆதாரமாக உள்ளது. சாதாரண மற்றும் வழக்கமான வேலைவாய்ப்பு முறையே 22.7% மற்றும் 21.5% ஆகும்.
. 2000 மற்றும் 2019க்கு இடையில், சுய வேலைவாய்ப்பு 52% நிலையானதாக இருந்தது. இருப்பினும், வழக்கமான வேலைவாய்ப்பு 10 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 14.2% இலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. 2022-ல், இது தலைகீழாக மாறியது. சுய வேலைவாய்ப்பு 55.8% ஆகவும், வழக்கமான வேலைவாய்ப்பு 21.5% ஆகவும் குறைந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் 33.3% ஆக இருந்த சாதாரண வேலை வாய்ப்பும் 2022-ல் 22.7% ஆகக் குறைந்துள்ளது.
. வழக்கமான வேலைவாய்ப்பு சிறந்த வேலைகளை வழங்குவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது நிலையான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு பலன்களை வழங்குகிறது. மறுபுறம், சாதாரண வேலை, தரம் குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு ஒழுங்கற்ற தன்மை மற்றும் குறைந்த தினசரி வருவாய் காரணமாகும்.