சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) வரிச்சுமையை எளிதாக்குவது எப்படி ? -அரவிந்த் பி தாதர் , கே வைத்தீஸ்வரன்

 ஒன்றிய பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தகராறு தீர்வுக்கான திட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.  சர்ச்சைக்குரிய தொகையில் 33 சதவீதத்தை வட்டி மற்றும் அபராதம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.


 சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஜூலையுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த சில ஆண்டுகளில்  அறிவிப்புகள் மற்றும் பிற மீட்பு நடவடிக்கைகளினால் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்டர்கள் வழங்குவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக காலக்கெடு முடிவடைவதற்கு சற்று முன்பு ஆர்டர்கள் அதிகரித்தன. இது எளிமையான சமரசம், திரும்ப செலுத்துதல் பொருந்தாத தன்மை (return mismatches), விநியோகஸ்தர்களின் இயல்புநிலை காரணமாக உள்ளீட்டு வரிக் கடன் (input tax credit (ITC)) மறுப்பு, நேர-தடை செய்யப்பட்ட உள்ளீட்டு வரிக் கடன் (time-barred ITC claims) கோரிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட கடன் தொடர்பான உள்ளீட்டு வரிக் கடன் (ITC on account of blocked credit) போன்ற பல்வேறு சிக்கல்களில் பல கோரிக்கைகளுக்கு வழிவகுத்தது. மற்றவை தடை செய்யப்பட்ட கடன் (blocked credit) மீதான உள்ளீட்டு வரிக் கடன் (input tax credit (ITC)) பல அறிவிப்புகள் காரணமாக வரி விகித சர்ச்சைகளும் உள்ளன. இந்த அறிவிப்புகள் எப்போதும் சுங்க கட்டணத்துடன் பொருந்தாது. உள்ளீட்டு வரிக் கடன் (input tax credit (ITC)) மறுக்கப்படுவது பற்றிய பல கோரிக்கைகள் GSTR-3பி மற்றும் GSTR-2ஏ ஆகியவற்றை ஒப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டவை. சட்டப்பூர்வமாக, இந்த ஒப்பீடு ஜனவரி 1, 2022 க்கு முன்னர் அனுமதிக்கப்படவில்லை. புதிய விதிகள் மற்றும் நடைமுறைகளை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாததால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இணைய தளத்தில் உள்ள விதிகள் மற்றும் சிக்கல்களில் பல மாற்றங்களால் இந்த குழப்பம் மோசமடைகிறது.


பெரும்பாலும், முதல் மேல்முறையீட்டு ஆணையம் (First Appellate Authority) முந்தைய முடிவுடன் உடன்படுகிறது. நிவாரணம் வழங்க சரக்கு மற்றும் சேவை வரி (GST) மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இதுவரை இல்லை. இந்த நடுவர் மன்றம் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதை அமைப்பதற்கான சட்டங்கள் எவ்வாறு எழுதப்பட்டன என்பதில் உள்ள சிக்கல்கள் பல சட்ட சவால்களுக்கு வழிவகுத்தது. இந்த விவகாரம் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இந்த சட்டங்களில் பல மாற்றங்கள் இருந்தாலும், தீர்ப்பாயம் அமைக்க கால அவகாசம் தேவைப்படும். உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தேவையான வசதிகளை உருவாக்குவது இதில் அடங்கும். தற்போதுள்ள சுங்க, கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (Customs, Excise and Service Tax Appellate Tribunal (CESTAT)) உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒரு எளிய தீர்வாக இருந்தது. ஆனால், இந்த யோசனை முன்னெடுக்கப்படவில்லை.


பல வரி சம்மந்தப்பட்ட தகராறுகள் முன்கூட்டிய தீர்ப்பிற்கான ஆணையத்திற்கு (Authority for Advance Ruling) பரிந்துரைக்கப்பட்டன மற்றும் மேல்முறையீடுகள் முன்கூட்டிய தீர்ப்பிற்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் (Appellate Authority for Advance Ruling) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில் பெரும்பாலானவை வரி செலுத்துவோருக்கு எதிரானவை. அதிகாரிகள் மட்டுமே இந்த செயல்முறையை நிர்வகிக்கிறார்கள் என்பதால், இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


இந்த சூழ்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) தீர்வுத் திட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இத்திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய வரிகளின் சதவீதம் அதிகமாக இல்லாதபோதும், வட்டி மற்றும் அபராதம் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்போதுதான் சமாதானம் அல்லது தகராறு தீர்வு திட்டங்கள் (dispute settlement schemes) வெற்றியடைகின்றன என்பதை அனுபவம் காட்டுகிறது. 2016 நேரடி வரி தீர்வு திட்டம் (Direct Tax Settlement Scheme) மிகவும் வெற்றிகரமாக இல்லை. வரி செலுத்துவோர் முழு சர்ச்சைக்குரிய வரியையும் சில வட்டி மற்றும் அபராதத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், 2019 இல் மரபு தகராறு தீர்வு (Sabka Vishwas) திட்டம் நன்றாக வேலை செய்தது. இது பழைய கலால் மற்றும் சேவை வரிச் சட்டங்களின் (erstwhile excise and service tax laws) கீழ் சச்சரவுகளைத் தீர்த்தது. வரி செலுத்துவோர் தாங்கள் சர்ச்சைக்குரிய வரிகளில் ஒரு நியாயமான பகுதியைச் செலுத்த வேண்டியிருந்தது. இந்த திட்டத்தில் கூடுதல் கட்டணங்கள் மற்றும் அபராதங்களும் கைவிடப்பட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனுப்பப்படுவதற்கு முன்பு போல, ஆரம்ப கட்டத்தில் இருந்த வழக்குகளுக்கும் இது பொருந்தும்.


மரபு தகராறு தீர்வு (Sabka Vishwas) திட்டத்தின் வெற்றி 2020 இல் நேரடி வரி விவாட் சே விஸ்வாஸ் சட்டத்தை (Vivad Se Viswas Act) உருவாக்க வழிவகுத்தது. இந்த சட்டம் மறைமுக வரி தீர்வு திட்டத்தை விட சிக்கலானது. இதில் வரி மட்டுமல்ல, வட்டி, அபராதம் மற்றும் கட்டணங்களும் அடங்கும். வரி செலுத்துவோர் சர்ச்சைக்குரிய முழு வரியையும் செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் சர்ச்சைக்குரிய வட்டி, அபராதம் அல்லது கட்டணங்களில் கூடுதலாக 25% முதல் 30% வரை செலுத்த வேண்டியிருந்தது.


இந்தத் திட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையும் அவற்றின் கலவையான வெற்றியையும் மனதில் வைத்து, ஒன்றிய பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) தகராறு தீர்வு திட்டத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். சர்ச்சைக்குரிய வரித் தொகையில் 33% செலுத்துமாறு இந்த திட்டம் கேட்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. கூடுதல் வட்டி மற்றும் அபராதங்களையும் முழுமையாக நீக்க வேண்டும். இந்த அணுகுமுறையானது பல சர்ச்சைகளைத் தீர்க்கும். இது வரவிருக்கும் தீர்ப்பாயத்தின் முன் தாக்கல் செய்யக்கூடிய மேல்முறையீடுகளின் எண்ணிக்கையையும் கணிசமாகக் குறைக்கும்.


முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி தகராறு தீர்வு திட்டம் (GST dispute settlement scheme) தற்போதைய மேல்முறையீடுகளை மட்டுமல்ல, முந்தைய சில நிபந்தனைகளையிம் தீர்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்ட அல்லது அறிவிப்பு நிலைக்கு முன்னர் கோரப்பட்ட வழக்குகள் இதில் அடங்கும். அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பை இந்த திட்டம் உறுதி செய்ய வேண்டும்.


சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு அதன் சட்டங்கள் மற்றும் விதிகளில் பல பின்னோக்கி மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்கள் முந்தைய ஆண்டுகளுக்கான வரி கோரிக்கைகளுக்கு வழிவகுத்தன. சர்ச்சைக்குரிய முழு வரியையும் செலுத்த வேண்டிய 2016 விதிகளைப் போலன்றி, புதிய சரக்கு மற்றும் சேவை வரி  திட்டம் முன்தேதியிட்டு வரி பொறுப்புகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தைக் கேட்க வேண்டும். முன்தேதியிட்டு மாற்றம் காரணமாக கடந்த காலத்திற்கு வரி கோரிக்கை இருந்தால், வரி செலுத்துவோருக்கு சர்ச்சையை தீர்க்க விருப்பம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் தொகையில் 25% செலுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். 


இந்த கட்டுரையின் ஆசிரியர்கள் வழக்கறிஞர்களாகவும், ஜிஎஸ்டி தொடர்பான தமிழ்நாடு ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.




Original article:

Share: