வளர்ச்சியடைந்து வரும் பிராந்திய வர்த்தக சூழல், ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை (ASEAN-India Trade in Goods Agreement (AITIGA)) மதிப்பாய்வு செய்வதற்கான முதன்மையான வழிகாட்டும் காரணியாக இருக்க வேண்டும்.
ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் (ASEAN-India Trade in Goods Agreement (AITIGA)) மறுஆய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இது இந்திய தொழில்துறையின் நீண்டகால கோரிக்கையாகும். இது ஒப்பந்தத்தின் விதிகளை மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது மற்றும் ஆசியானுக்கு ஆதரவாக வர்த்தகத்தை சமநிலையை குறைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ இந்த ஒப்பந்தத்தின் விதிகளை மாற்ற வேண்டும். நவம்பரில் மறுஆய்வு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்திய தொழில்துறையின் அறிக்கைகள், ஆசியானில் இருந்து சில இறக்குமதிகளின் அதிகரிப்பை எடுத்துக்காட்டுகின்றன. எவ்வாறாயினும், இந்திய பேச்சுவார்த்தைகள் இந்த கவலைகளால் மட்டுமே வழிநடத்தப்படாமல், மாறிவரும் உலகளாவிய மற்றும் பிராந்திய வர்த்தக சூழலைக் கருத்தில் கொள்வது அவசியம்.
2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (ASEAN-India Trade in Goods Agreement (AITIGA)), 80 சதவீதத்திற்கும் குறைவான கட்டண தாராளமயமாக்கலுடன் ஒரு வரையறுக்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும் (free-trade agreement (FTA)). இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (free-trade agreement (FTA)) சில ஆசியான் பொருளாதாரங்களுக்கு ஒப்புமையில் பெரிய எதிர்மறை பட்டியலுடன் கூடுதலான நன்மைகளைக் கொடுத்தது. சிங்கப்பூர் போன்ற பொருளாதாரங்களுடன் இந்தியாவின் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுடன் ஒப்பிடும்போது தோற்ற விதிகள் (rules of origin (RoO)) குறைந்த மதிப்பு கூட்டப்பட்ட உள்ளடக்கத்தைக் குறிப்பிட்டன. இதில், சேவை தாராளமயமாக்கலில் எதிர்பார்க்கப்பட்ட ஈடுசெய்யும் ஆதாயங்களும், நீட்டிக்கப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் மற்றும் ஆசியானின் வரையறுக்கப்பட்ட உள் சேவைத் துறை தாராளமயமாக்கலாலும் செயல்படவில்லை.
ஆசியானுடன் அதிகரித்து வரும் பற்றாக்குறை முக்கியமாக இந்தியாவின் அதிக கட்டணங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஏற்றுமதியானது போட்டித்தன்மையின் காரணமாகும். இந்த காரணிகள் இந்தியாவின் பல்வேறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தகளில் (free-trade agreement (FTA)) ஒத்துப்போகின்றன. ஏனெனில் இந்தியா ஒப்பீட்டளவில் அதிக கட்டணங்களை பராமரிக்கிறது. இதை நிவர்த்தி செய்ய, அடுத்த மாதம் வரவிருக்கும் திருத்த செயல்முறைக்கு முன்னர் இந்தியா தனது இறக்குமதி கட்டணங்களை குறைப்பது நன்மை பயக்கும். பிப்ரவரி 1 ஆம் தேதி வரவிருக்கும் பட்ஜெட் இந்த வர்த்தக சீர்திருத்தத்திற்கு ஒரு சரியான நேரமாக இருக்கலாம். ஆசியானின் கட்டணமற்ற நடவடிக்கைகளால் உயர் பாதுகாப்புக்கான எடுத்துக்காட்டுகளாக இந்தியாவால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் விவசாயம் மற்றும் ஜவுளி, பொதுவாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தகளில் (free-trade agreement (FTA)) முன்னுரிமை சந்தை அணுகலில் சேர்க்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிராந்திய மதிப்பு சங்கிலி (regional value chain(RVC)) மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் (global value chain(GVC)) ஒருங்கிணைக்க இந்தியாவுக்கு உதவுவதில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (free-trade agreement (FTA)) மதிப்பாய்வு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. ஆசியான் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை திருத்துவது, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) சேராததை ஈடுசெய்யவும், அருகிலுள்ள பிராந்திய உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் (global value chain(GVC)) மையத்துடன் இணைக்கவும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. "சீனா பிளஸ் ஒன்" (China plus one) இராஜதந்திரத்தின் காரணமாக பிராந்திய மதிப்பு சங்கிலி (regional value chain(RVC)) மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகலில் (global value chain(GVC)) ஆசியானின் முக்கியத்துவம் வலுவடைந்து வருகிறது. ஆசியான் பொருளாதாரங்கள், அவற்றின் நடுநிலை புவிசார் அரசியல் நிலைப்பாடு, பொருளாதார பின்னடைவு, வலுவான ஏற்றுமதி கவனம் மற்றும் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் பங்கேற்பு ஆகியவற்றுடன், சீனாவிலிருந்து இடம்பெயரும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுக்கு (global value chain (GVC)) முக்கியமானவை. இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற ஆசியான் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான், கொரியா போன்ற பிராந்திய நாடுகள் தீவிரமாக ஆதரவு அளித்து வருகின்றன. உதாரணமாக, வியட்நாம், அமெரிக்காவிற்கு குறைக்கடத்தி (semiconductor) உற்பத்திக்கான முக்கிய இடமாக மாறி வருகிறது. உலகளாவிய மதிப்புச் சங்கிலி முதலீடுகளின் அதிகரித்து வரும் தீவிரம் மற்றும் இந்த சூழலிலுள்ள பயனாளிகள் ஆசியா பொருளாதாரங்களின் வளர்ந்து வரும் பட்டியல் ஆகியவை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (free-trade agreement (FTA)) மறுஆய்வு செயல்முறையில் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (AITIGA) மதிப்பாய்வுக்கான மூன்று முக்கிய உள்ளீடுகள் கீழே விவாதிக்கப்படுகின்றன.
முதன்மை கவனம் பொருத்தமான தோற்ற விதிகளை ((rules of origin (RoO))) உருவாக்குவதில் இருக்க வேண்டும். இந்தியா மிகவும் சிக்கலான, இரட்டை அளவுகோல்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை நெறிப்படுத்த வேண்டும். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) ஆசிய நாடுகள் ஏற்றுக்கொண்ட பிராந்திய அளவிலான திரள் சூத்திரத்தையும் (cumulation formula) கருத்தில் கொள்ள வேண்டும். அதன் 40 சதவீத பிராந்திய உள்ளடக்க விதி பிராந்திய மதிப்புச் சங்கிலிகளுக்கு (regional value chain (RVC)) பயனளிக்கும் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை (global value chain (GVC)) இடமாற்றம் செய்கிறது. ஆசியாவானது, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையை (RCEP) ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (AITIGA) மதிப்பாய்வுக்கான ஒரு முன்வடிவாகப் பயன்படுத்தலாம். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையின் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) ஒரு பகுதியாக இல்லாத வரம்பை சமாளிக்கவும், பிராந்திய மதிப்புச் சங்கிலிகள் / உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கவும் இந்தியா உதவும். தயாரிப்பு-குறிப்பிட்ட தோற்ற விதிகளைப் பொறுத்தவரை, 6 இலக்க மட்டத்தில் "கட்டண துணைத் தலைப்பில் மாற்றம்" (change in tariff sub-heading) என்ற அளவுகோலைக் குறிப்பிடுவதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுக்கு முக்கியமான பாகங்கள் மற்றும் கூறுகளின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தக்கூடும்.
இரண்டாவது முக்கியமான அம்சம் முதலீட்டு அத்தியாயத்தை உள்ளடக்கியது. இந்தியா அதன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் சவால்களை எதிர்கொண்ட ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆசியாவின் எதிர்பார்ப்புகள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்துடனான அதன் மேம்படுத்தப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் பாதிக்கப்படலாம். இதில் தகராறு தீர்வு, முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான நாடு என்ற முன்னுரிமை போன்றவற்றை தவிர, உள்நாட்டு உள்ளடக்கம் மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி தேவைகள் போன்ற செயல்திறன் நிலைமைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான திருத்தங்கள் போன்ற முன்னோக்கிய கூறுகள் அடங்கும். இந்த மாற்றங்கள் பிராந்திய பொருளாதாரங்களின் முதலீடுகளுக்கான முறையீட்டை மேம்படுத்துகின்றன. எனவே, 2016 ஆம் ஆண்டின் கட்டுப்படுத்தப்பட்ட மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு அப்பால் இந்தியா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம்.
மூன்றாவதாக, ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்த (AITIGA) மறுஆய்வு பேச்சுவார்த்தைகள் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் மற்றும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கூறுகளையும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது குறுக்கு-துறை (cross-sectoral) பேரங்கள் மற்றும் பரிமாற்றங்களைச் செய்வதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் பேச்சுவார்த்தை கட்சிகளின் லட்சியத்தை கட்டுப்படுத்துகிறது. சேவைகள் தாராளமயமாக்கலில், இந்தியா பயன்முறை-4 (mode-4)க்கு அப்பாற்பட்ட துறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். இது இந்தியாவின் ஒப்பீட்டு நன்மைகளுடன் ஒத்துப்போகிறது மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு பங்களிக்கிறது. பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதற்கான ஆசியான் தொலைநோக்கில் இந்த துறைகள் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
கடைசியாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்த விதி புத்தகம் (FTA rulebook) பின்பற்றப்படும் கிழக்கு பிராந்தியத்தில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, வட அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக பாதுகாப்புவாதம் மற்றும் உள்நோக்கிய பிராந்தியவாதத்தை ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தக கொள்கை மன்ற பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கான பொதுவான முன்னுரிமை முறையை மீட்டெடுப்பதைக் குறிக்கவில்லை. கூடுதலாக, உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுக்கு (global value chains (GVCs)) முக்கியமான, இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் வர்த்தக தூணில் உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் இதுவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு முன் இந்தியா போதுமான அளவு தயாராக இருக்க வேண்டும் மற்றும் சாதகமான முடிவுகளுக்காக ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (AITIGA) மறுஆய்வை உடனடியாக முடிக்க வேண்டும்.
எழுத்தாளர், ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின், சமூக மற்றும் சர்வதேச துறையின் (School of International Studies) மூத்த ஆய்வறிஞர்.