தொலைத்தொடர்பு சட்டம் 'பல ஆண்டுகளுக்கு' செல்லுபடியாகும் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வைஷ்ணவ் -அரூன் தீப்

 உலகளவில், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சில பதிவுகளுக்கு பொறுப்புடைமை இருக்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்து வருவதாக ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வைஷ்ணவ் கூறுகிறார். மேலும், இணைய தளத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தை அனுமதிப்பது இப்போதெல்லாம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். குறிப்பாக 6ஜி போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டிஜிட்டல் இணைப்பை (digital connectivity) இந்தியா கணிசமாக அதிகரிக்க வேண்டும்.


நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டம் (The Telecommunications Act, 2023), முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தொகுப்பாக பார்க்கப்படுகிறது. உரிமங்கள் மற்றும் அனுமதிகளின் விதிமுறையிலிருந்து மிகவும் மதிப்பிடப்பட்ட அங்கீகார முறைக்கு நகர்கிறார்கள். இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார். இந்த சட்டம் தகராறுகளைத் தீர்ப்பதற்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீறல்களை தாமாக முன்வந்து புகாரளிப்பதற்கான நான்கு அடுக்கு கட்டமைப்பையும் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.


இந்த சட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு அலைக்கற்றையின் (Telecom spectrum) வழக்கானது உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஏலம் விடப்படும் எனவும், இவற்றில் சில பாதுகாப்பு போன்ற சில நிபந்தனைகளைத் தவிர, அலைக்கற்றையானது நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும். மேலும், பயன்படுத்தப்படாத அலைக்கற்றையைப் பகிர்வதற்கும், கைவிடுவதற்கும் வெவ்வேறு அலைவரிசைகளை ஒத்திசைப்பதற்கும் பல விதிகள் உள்ளன.


புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்க கல்வித்துறையில் புதுமைகளுக்கான 'சாண்ட்பாக்ஸ்' (sandbox) நம்மிடம் உள்ளது. மற்றொரு முக்கியமான சீர்திருத்தம்  வழித்தட உரிமை (Right of way): இதில், மாநிலங்கள் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக்கான நிலையை நிர்வகிக்கின்றன. மேலும் தகராறு ஏற்பட்டால் இந்த வழக்குகளில் இழப்பீடு தீர்மானிக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது. 

 

இந்தியாவில் மின்னணு இணைப்பின் அளவை நாம் மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். இதனை, 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்கனவே நான்கு மடங்கு அதிகரித்துள்ளோம். ஆனால் 6G போன்ற புதிய தொழில்நுட்பங்களைச் சமாளிக்க இன்னும் அதிகமாக்க வேண்டும். நம்மிடம், நான்கு அடுக்கு தகராறு தீர்ப்பு அமைப்பு (structure for dispute resolution) மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் (telecom companies) மீறல்களை சுயமாக புகாரளிக்கவும் மற்றும் நுகர்வோர் குறைகளைத் தீர்க்க ஆன்லைன் வழிமுறையும் உள்ளது.  


உலகளாவிய சேவைகள் பொறுப்பு கொள்கைக்கான நிதி (The Universal Services Obligation Fund) இப்போது டிஜிட்டல் பாரத் நிதியாக (Digital Bharat Nidhi) மாற்றப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிக்கும் வகையில் பின்தங்கிய பகுதிகளில் இதற்கான மின்னணு இணைப்பை மேம்படுத்துகிறது. உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் (global marketplace for telecommunications) இந்தியாவை வலிமையானதாக மாற்றுவதை நோக்கமாக உள்ளது. 

 

தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள் (telecommunications networks) மீது அரசாங்க கட்டுப்பாட்டை அனுமதிக்கும் தேசிய பாதுகாப்பு விதிகளைப் பொறுத்தவரை, இது உலகளவில் ஒரு பொதுவான நடைமுறையாகும். மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகள் முதன்மை இலக்குகளாக இருப்பதையும், அவை தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை என்பதையும் சமீபத்திய மோதல்கள் சுட்டிகாட்டியுள்ளன. 


தொலைபேசி இணைப்புகளை குறுக்கீடுவது (interception [of phone connections])  பற்றி 1996 முதல் உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு காலப்போக்கில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 1996ல் தொலைபேசிகள் இல்லாத போதிலும், மூத்த அரசாங்க அதிகாரிகள் நீதிமன்ற ஆய்வு இல்லாமல் தொலைபேசி ஒட்டுக்கேட்பை அங்கீகரிக்க முடியும். இது சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் vs இந்திய ஒன்றியம் (People’s Union for Civil Liberties v. Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட தொழில்நுட்ப-யதார்த்தமான கட்டமைப்பைப் பின்பற்றுகிறது. 


தொலைத் தொடர்புச் சட்டத்தின் (Telecom Act) பல விதிகள் தொலைத் தொடர்புத் துறையால் அறிவிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே இது தொடங்கும். இதற்கு என்ன காலக்கெடுவை நாம் எதிர்பார்க்க முடியும்?


எந்த இடையூறுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்த சட்டத்தை வடிவமைத்துள்ளோம். பழைய தந்தி சட்டத்தின் (Telegraph Act) கீழ் உரிமம் பெற்றவர்கள் புதிய முறைக்கு மாற தேர்வு செய்யாவிட்டால் பழைய உரிமங்களால் நிர்வகிக்கப்படுவார்கள். அலைக்கற்றை ஒதுக்கீடுகள் (Spectrum allocations) தற்போதுள்ள விதிமுறைகளின்படியே தொடரும் எனவும், தொலைத் தொடர்புத் துறையின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கும் தற்போதைய விதிகளை, புதிய விதிகள் மாற்றாவிட்டால் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


புதிய விதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு இடையூறும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முறையான அணுகுமுறையைப் பின்பற்றி, படிப்படியாக அவற்றை வெளியேற்றப்படும்.


வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ஓடிடி செயலிகளை (OTT apps) ஒழுங்குபடுத்த எந்த ஏற்பாடும் இல்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள், ஆனால்  சட்டத்திலுள்ள வழிமுறைகள் எதிர்காலத்தில் அதை அனுமதிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் பார்வையில் இந்த சட்டம் அரசுக்கு இந்த அதிகாரத்தை வழங்குகிறதா?


அரசு எவ்வாறு செயல்படுகிறது? ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட பணியை ஒதுக்குவதன் மூலம் அரசாங்கம் செயல்படுகிறது. மின்னணு உலகில் நிதி தொழில்நுட்பம் (Fintech) இரண்டு அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது: அவை, நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவையாகும். இது, மருத்துவ மின்னணுவியல் (Medical electronics),  சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் வருகிறது.  அதே நேரத்தில் ஒளிப்பாய்வு சேவைகளின் (streaming services) உள்ளடக்கம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் (Ministry of Information and Broadcasting) கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு மற்றும் டிஜிட்டல் விஷயங்கள் இந்த அமைச்சகங்களால் வணிக விதிகளின் ஒதுக்கீடு (Allocation of Business Rules (ABR)) படி நிர்வகிக்கப்படுகின்றன.  தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப வணிக விதிகளின் ஒதுக்கீடு தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.


கேள்வி என்னவென்றால், வேலையை எப்படி வரையறுப்பீர்கள்? எதிர்காலத்தில் மின்னணு தொடர்பான அனைத்து பணிகளையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இது மாற்றங்களைக் கொண்டுவரும், ஆனால் இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லாமே மின்னணு என்பதால் இது சவாலாக பார்க்கப்படுகிறது. 


சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க சட்டம் திறம்பட உள்ளதா?

இந்த சட்டத்தில், தொலைத்தொடர்பு சேவையைப் பெறும் எந்தவொரு நபரும் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு சேவைகளுக்கு இந்த பயோமெட்ரிக் அங்கீகாரம் என்பது மிக அவசியம். ஏனெனில், ’உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ (Know Your Client (KYC)) என்பது தொலைத்தொடர்பு சேவைக்கு மிகவும் முக்கியமானது. இப்போதெல்லாம், வங்கி, காப்பீடு, நிதி மற்றும் பொழுதுபோக்குக்கு தொலைபேசி முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஒரு நபர் ஒன்பது இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.


மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த பொருளாதாரங்களில், தொலைபேசி இணைப்புகளைப் பெறுவதற்கு கடுமையான விதிகள் மேற்கொண்டுள்ளன. அடையாளச் சான்றாக உங்கள் பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் அல்லது ஒத்த ஆவணங்களை பொதுவாக வழங்க வேண்டும்.


டாவோஸில் (Davos) நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில், செய்தித்தாள்களிலிருந்து மின்னணு உலகத்திற்கு பரிணாம வளர்ச்சி என்ன மாறிவிட்டது என்பது குறித்து நீங்கள் பேசினீர்கள். அதைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?


இன்று, இணையம் வளர்ச்சியடைந்தபோது 1990 களில் நிறுவப்பட்ட பாதுகாப்பான துறைமுகம் (Safe harbour) என்ற கருத்து குறித்த கவலை அதிகரித்து வருகிறது (பாதுகாப்பான துறைமுகம் (Safe harbour) என்பது மூன்றாம் தரப்பு பயனர்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்திற்கு இணையதளங்கள் முழுப் பொறுப்பாகாது என்பதாகும்).  இப்போது, பரவலான இணைய அணுகல் மற்றும் சமூக ஊடகங்களுடன், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடக தளங்களை குறிக்கீடுவதற்கு பொறுப்பேற்க வைப்பது பற்றி யோசிக்கிறார்கள்.


ஒரு சமூக ஊடக தளத்தில் ஏதாவது குறிக்கிடப்படும்போது, யார் பொறுப்பு என்பதை தீர்மானிப்பது முக்கியம். இணைய தளம் அல்லது அதை குறுக்கிடும் நபரின் மீறலை, பொறுப்பேற்க ஜனநாயக செயல்முறைகள் சரியான முறையில் பாதுகாக்க உதவுகிறது. 


இந்தியாவில் இந்துக்களுக்கான மனித உரிமைகளுக்கான (Hindus for Human Rights) ’எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) வலைதளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் இந்தியாவில் இந்துத்துவா கண்காணிப்பு (Hindutva Watch) ஆகியவற்றின் கணக்குகள்  நிறுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள் நடந்துள்ளன. 


அமெரிக்க-சீன பதட்டங்கள் மற்றும் இரண்டு தனித்தனி மின்னணு உலகங்களின் யோசனை குறித்து, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) உலகளாவிய தகவல்தொடர்பு தரங்களை நிர்வகிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய தொலைத்தொடர்புகளில் சீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை மட்டுப்படுத்தியிருந்தாலும், சீனா, கொரியா, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து தொலைத்தொடர்பு உபகரணங்கள் வரலாம். நிஜ உலக நிலைமைகளில் 2,000 க்கும் மேற்பட்ட கோபுரங்களை தீவிரமாக சோதித்து வருகிறோம்.


பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited (BSNL)) தனது 4 ஜி வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியம் உள்ளது. தற்போது, மொபைல் போன்கள் தவிர்த்து, தொலைத்தொடர்பு பொருட்களுக்கான ஏற்றுமதி ரூ.9,000 கோடியை நெருங்குகிறது.


ஆதார் போன்ற இந்தியா ஸ்டாக் தொழில்நுட்பங்களை உலகம் முழுவதும் பரப்புவதற்காக பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த ஏற்பாடுகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன?


இதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்துள்ளது, மேலும் நமது பிரதமரின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை தெளிவான நீதித்துறை செயல்முறைகள் மற்றும் வெளிப்படையான தரநிலைகளை கொண்ட நம்பகமான ஜனநாயகமாக மாற்றியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு அடுக்கு (telecom stack) உட்பட இந்தியாவில் இருந்து தயாரிப்புகளை வாங்க பிற நாடுகள் விரும்புகிறார்கள்.


எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் உங்களின் முதன்மையான இராஜதந்திர இலக்குகள் என்ன? தைவானின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி அவர்களுக்கு ஒரு ‘சிலிக்கான் கவசம்’ கொடுக்கிறது, இது சீனாவைத் தாக்குவதைத் தடுக்கிறது. நம்மிடம் இதே போன்ற இராஜதந்திர இலக்குகள் உள்ளதா அல்லது பொருளாதார அல்லது நுகர்வோர் காரணங்களுக்காக உற்பத்தியில் கவனம் செலுத்துகிறதா?


முதலாவதாக, இது ஒரு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் துறையில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரிகின்றனர். இரண்டாவதாக, இது வலுவான கட்டமைப்பு திறன்களை பூர்த்தி செய்கிறது. பல சிக்கலான தயாரிப்புகளுக்கான உலகளாவிய திறன் மையங்களுடன், தயாரிப்பு வடிவமைப்புக்கான முக்கிய மையமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா ஒரு பின் அலுவலகம் (back office) என்பதை தாண்டி நகர்ந்துள்ளது. அதேசமயம், முதிர்ச்சியடைந்த தயாரிப்பு வடிவமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளதுடன், உற்பத்தி அதை மேலும் ஆதரிக்கிறது.


தைவான் மற்றும் தென் கொரியாவைப் போலல்லாமல், உற்பத்தியுடன் வலுவான வடிவமைப்பு திறன்களையும் ஏற்கனவே கொண்டுள்ளோம். இந்த மாற்றம் நமக்கு இயற்கையான ஒரு படியாகும்.


உலகின் அதிவேக 5ஜி வெளியீடு இந்தியாவில்தான் உள்ளது. தனியார் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் (Private telecom operators), ஆன்லைன் சேவை வழங்குநர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த கோரிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?


இந்த பிரச்சினைகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகின்றன. உலகம் எந்த திசையில் பயணிக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. இது விவாதத்தில் உள்ள ஒரு தலைப்பு, இந்த கட்டத்தில் நான் எந்த சார்புநிலையையும் எடுக்க விரும்பவில்லை. 


செயற்கை நுண்ணறிவு டீப்ஃபேக்குகள் (Artificial Intelligence deepfakes) குறித்து, சமூக ஊடக தளங்களுடன் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கான திட்டம் என்ன? 

தற்போது, தேர்தல் நெருங்கி வருவதால், தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறோம். டீப்ஃபேக்குகளைக் (deepfakes) கண்டறிந்து அகற்றுவதாக சமூக ஊடக தளங்கள் உறுதியளித்துள்ளன. டீப்ஃபேக்குகளைக் (deepfakes) கண்டறிவதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே இருப்பதால், சமூக ஊடக தளங்கள் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதால் அவர்களை மிகவும் செயலூக்கத்துடன் செயல்படத் தூண்டுகிறோம்.




Original article:

Share: