இந்தியாவும் மாலத்தீவும் உறவுகளை மீட்டெடுக்க அமைதியான இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா-மாலத்தீவு இடையே பதற்றம் நிலவியது. மாலத்தீவு அமைச்சர்களின் மரியாதைக் குறைவான கருத்துகளே இதற்குக் காரணம். மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் சமூக வலைதளங்களில் அறைகூவல் விடுத்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினர் குறித்தும் தகராறு ஏற்பட்டது. இப்போது, டெல்லி மற்றும் மாலே ஒரு புதிய பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இதில் சீன "ஆராய்ச்சி" கப்பல் சியாங் யாங் ஹாங் 03 (Xiang Yang Hong 03) அடங்கும். இந்த கப்பல் பிப்ரவரி மாதம் மாலேவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. சீன "ஆராய்ச்சி" கப்பல்கள் இலங்கைக்கு வருவதை இந்தியா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, 2024 முதல் அனைத்து வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களையும் நிறுத்த இலங்கை முடிவு செய்தது. இந்த கப்பல்கள் இராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தரவுகளை சேகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் பதற்றம் மற்றும் வலுவான தேசியவாத கருத்துக்கள் இருந்தபோதிலும், புது டெல்லி மாலேவில் உள்ள முய்ஸு அரசாங்கத்துடன் தொடர்ந்து நட்புறவில் ஈடுபடுகிறது. டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி, திரு.முய்ஸுவை சந்தித்தார். கடினமான இருதரப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் உயர்மட்டக் குழுவை உருவாக்கினர். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அண்மையில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.
இரு நாடுகளும் தங்களின் பிரச்சினைகள் வளரக்கூடும் என்பதை உணர்ந்துள்ளன. இந்தியா உலக வல்லரசாக இருக்க விரும்புகிறது. மாலத்தீவு அதன் பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்காக மற்றவர்களை நம்பியுள்ளது. ஒவ்வொரு தேசத்திற்கும் இறையாண்மை முக்கியமானது. இருப்பினும், ஒருவரையொருவர் எதிர்கொள்வதை விட இருவரும் இணைந்து செயல்படுவது நல்லது. இந்தியா தனது அண்டை நாடுகளின் தேவைகளின் அடிப்படையில் உதவ விரும்புகிறது. மனிதாபிமான காரணங்களுக்காக கூட மாலத்தீவு மீது இந்தியா தனது இராணுவத்தை திணிப்பது நல்லதல்ல. மாலத்தீவில் உள்ள முய்ஸு அரசாங்கமும் கவலைப்பட வேண்டும். இந்தியாவுடனான பதற்றம் அதன் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலைப் பாதிக்கலாம்.
மாலத்தீவுகள் சியாங் யாங் ஹாங் 03 (Xiang Yang Hong 03) கப்பலின் வருகைக்கு அனுமதித்தது. ஆனால் அதை ரகசியமாக வைத்திருந்தது. இது அமைதியான இராஜதந்திரத்திற்க்கு உதவுகிறது என்பதை காட்டலாம். அமைதியான மற்றும் விவேகமான அணுகுமுறை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவுகளை மேம்படுத்த உதவும்.