கல்வித்துறைக்கு ஓர் அவமரியாதை -அனாமிகா, நவ்னீத் சர்மா

 ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உயர் கல்விக்கான நிதியை 16.8% குறைத்துள்ளது கல்வி நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் பொருளாதார சுமையை அதிகரிக்கும்.


இடைக்கால பட்ஜெட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான (University Grants Commission (UGC)) 60 சதவீத நிதி குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு, கடந்த ஆண்டை விட ₹ 9,600 கோடி குறைவு, இது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institutes of Technology) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (Indian Institutes of Management) போன்ற நிறுவனங்களுக்கான உயர் கல்வி மானியங்களை பாதிக்கிறது.


 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4-6% செலவழித்து அனைவருக்கும் நியாயமான மற்றும் நல்ல கல்வியை இலக்காகக் கொண்ட 'கல்வி 2023: இன்சியான் பிரகடனத்தில்' ('Education 2023: Incheon Declaration) இந்தியாவின் இலக்குகளை ஆதரிக்கிறதா என்று பட்ஜெட் போக்கு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8% மட்டுமே ஒதுக்கியுள்ளதால், இடைக்கால பட்ஜெட் இந்த இலக்குகளுடன் பொருந்தவில்லை.  


இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு, 0.73 சதவீதம் உயர்த்தப்பட்டாலும், உயர்கல்விக்கான நிதி 16.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது கல்வி நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் நிதிச்சுமையை அதிகரிக்கும். மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 28% அதிகரிப்பு என்று கூறினாலும், பட்ஜெட்டில் அதை உயர் கல்வி நிதி முகமைக்கு (Higher Education Financing Agency (HEFA)) ஒதுக்குகிறது, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (University Grants Commission (UGC)) அல்ல. கனரா வங்கி மற்றும் கல்வி அமைச்சகத்தின் கூட்டாண்மையான உயர் கல்வி நிதி முகமை (HEFA), கல்வி உள்கட்டமைப்புக்கு கடன்களை வழங்குகிறது. இந்த மாற்றம் பல்கலைக்கழக மானியக் குழுவை (University Grants Commission (UGC))யை, கார்ப்பரேட் மதிப்புகளை மையமாகக் கொண்ட வெறும் ஒழுங்குமுறை அமைப்பாக குறைக்கிறது. இந்த நிதிக்குறைப்பின் மூலம், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அதிக சுயநிதி படிப்புகளை வழங்க வேண்டியிருக்கலாம், இது மாணவர்களின் நிதி அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த மாற்றம் உயர் கல்வி நிதி முகமையின் கடன்களையும் நம்பியுள்ளது. இது, மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் கல்வியில் கவனம் செலுத்திய பல்கலைக்கழகங்கள், இப்போது கல்வியிலிருந்து கவனத்தை திசை திருப்பி, நிதிகளை நிர்வகிக்க வேண்டும். கல்வி வாங்கக்கூடிய ஒரு வியாபார பொருளாகி, மாணவர்களிடம் அதிக கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.


இந்தச் சூழல் விளிம்பு நிலைக் குழுக்களுக்கான உயர்க்கல்விக்கான அணுகலை  இன்னும் மோசமாக்கும். அவர்களின் மொத்த பதிவு விகிதம் (Gross Enrolment Ratio (GER)) தேசிய சராசரியான 27.3% ஐ விட மிகவும் குறைவாக உள்ளது. பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் முறையே 24.9%, 23.1% மற்றும் 18.9% மொத்த பதிவு விகிதத்தைக் (GER) கொண்டுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பில் (All India Survey on Higher Education 2020-21) இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. 2021-22 பள்ளிக் கல்வித் துறை மற்றும் எழுத்தறிவுத் துறையின் (Department of School Education and Literacy Survey 2021-22) அறிக்கையின் படி, தொடக்க நிலையில் மொத்த பதிவு விகிதம் (GER) கிட்டத்தட்ட 100% ஆக இருந்தாலும், ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. 72% க்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வியை விட்டு வெளியேறுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடம் பணப் பற்றாக்குறையே இதற்கு முக்கியக் காரணம்.


பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு வழங்கப்படும் சிறிய தொகை கூட சிக்கலில் உள்ளது. மொத்த ஒதுக்கீடான ₹73,000 கோடியில், ₹6,050 கோடி ரைசிங் இந்தியாவுக்கான PM ஸ்ரீ (Rising India (PM-SHRI))  6,448 பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், ₹6,399 கோடி புதிய ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளை (Eklavya Model Residential Schools (EMRS)) கட்டுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், மொத்த பள்ளிக் கல்விக்கான பட்ஜெட்டில் 8.3 சதவீதத்தில் 0.7 சதவீதம் பள்ளிகளுக்கு மட்டுமே செல்கிறது. இது ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கான நிதியை கணிசமாகக் குறைக்கிறது.


PM-SHRI பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) 2020ன் விதிகளைப் பின்பற்றுகின்றன. அந்த பள்ளிகளுக்கு அதிகப் பணம் கொடுப்பது மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையை  முழுமையாக ஏற்கும்படி அழுத்தம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020, பல்வேறு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பது பற்றிய ஆழமான விசாரணை உள்ளது. ஏற்கனவே இருக்கும் கல்விச் சிக்கல்களை மேலும் மோசமாக்குகிறது. பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு உதவுவதற்கு தேசிய கல்விக் கொள்கை பொறுப்பு அல்லது பொறுப்புக்கூறலை ஏற்காது. இந்த விவகாரம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமல்ல, இதைப் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்கும் அனைவருக்கும் கவலை அளிக்கிறது.

அனாமிகா ஐஐடி பாம்பே-மோனாஷ் பல்கலைக்கழகத்தில் (IIT Bombay-Monash University) கல்வியில் முனைவர் பட்டம் பயில்கிறார்; நவ்நீத் ஷர்மா, இமாச்சலப் பிரதேசம், தர்மசாலா மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேரசிரியராகப் பணியாற்றுகிறார்.




Original article:

Share: