மார்ச் 4, 2024, ஒரு முக்கியமான நாளாகும். பிரான்ஸ் தனது அரசியலமைப்பில் "தானாக முன்வந்து கருவைக் கலைக்கும் பெண்களின் சுதந்திரம்" (freedom of women to voluntarily terminate a pregnancy) என்பதை அரசியலமைப்பில் சேர்த்தது. இதன்மூலம், கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டு 49 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை அரசியலமைப்பு உரிமையாக அறிவித்த முதல் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. பல இடங்களில் பெண்களின் உரிமைகள் ஆபத்தில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த முடிவு பெண்களுடன் உலகளாவிய ஒற்றுமையைக் காட்டுகிறது.
புதுமையான செயல்
பிரான்சில், பெண்களின் உரிமைகள் பற்றிய வரலாற்றைப் புரிந்து கொள்ள, குறிப்பாக உடல் சுயாட்சியைப் (bodily autonomy) பற்றி, நாம் 1949 க்கு திரும்பிப் பார்க்க வேண்டும். பிரெஞ்சு பெண்ணியவாதி சைமன் டி பியூவோயர் (Simone de Beauvoir) எழுதிய ’தி செகண்ட் செக்ஸ்’ (The Second Sex) என்ற புத்தகத்திலிருந்து தொடங்குகிறது.
"ஒருவர் பிறக்கவில்லை, மாறாக ஒரு பெண்ணாக மாறுகிறார்" (One is not born, but rather becomes, a woman) என்ற அறிக்கையுடன் தொடங்கும் இந்த மிக நீண்ட புத்தகத்தின் இரண்டாவது தொகுதியில், தாய்மை பற்றிய அத்தியாயத்தில் கருக்கலைப்புக்கான முழு பகுதியையும் பியூவோயர் (Beauvoir) அர்ப்பணிக்கிறார். இந்த, அற்புதமான தத்துவப் படைப்பில், எழுத்தாளர் பெண்ணியக் கருத்துக்களை இருத்தலியல் கோட்பாடுகளுடன் (existential theories) இணைக்கிறார். தேர்வு சார்பு இயக்கத்தை (pro-choice movement) ஆதரிப்பதற்கான தத்துவார்த்தமான அடித்தளத்தை இவர் நிறுவுகிறார். பெண்களை வெறும் தாய்மார்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் என்ற எளிமையான பார்வையை கேள்விக்குட்படுத்துவதன் மூலம், இருத்தலியல்வாதத்தின் முக்கிய கருத்தாக்கமான பெண்களின் தேர்வு சுதந்திரத்திற்காக என்று இவர் வாதிடுகிறார். ஒரு பெண் தனது உயிரியல் விதியைக் கட்டுப்படுத்தவும், தன் சொந்த விதிமுறைகளின்படி உயிரைக் கொடுப்பதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும், பெண்களுக்கு கருத்தடைக்கான அணுகல் மற்றும் இலவச, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்பு சேவை தேவை என்று பியூவோயர் (Beauvoir) நம்புகிறார்.
எண்ணிலடங்கா பெண்கள் கருக்கலைப்பை நாடினாலும், மறைமுகமாக அதைச் செய்ய வேண்டிய காலகட்டத்தின் ஏமாற்றுத்தனத்தை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். பியூவோயர் காலத்தில் கருக்கலைப்பு பெரும்பாலும் நடைமுறையில் இருந்தபோதிலும், ஒரு பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கருக்கலைப்பு உரிமைகள் இல்லாதது ஆணாதிக்கத்தால் பெண்கள் பரந்த ஒடுக்குமுறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் இலவச, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான அணுகலைப் பெற வேண்டும் என்று பியூவோயர் (Beauvoir) வாதிடுகிறார். கருக்கலைப்பு சட்டப்பூர்வ விருப்பங்கள் இல்லாமல் இருந்தால், பெண்கள் பாதுகாப்பற்ற பின் தெரு கருக்கலைப்புகளை (backstreet abortion) நாடலாம். இது இரத்தக்கசிவு (haemorrhaging), செப்டிசீமியா (septicaemia) மற்றும் மரணம் போன்ற கடுமையான உடல்நல அபாயங்களுக்கு இது வழிவகுக்கும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற அன்னி எர்னாக்ஸ், ’L'évènement’ என்ற நூலில் 1963 இல் தனது சட்டவிரோத கருக்கலைப்பு கதையைப் பற்றி விவரிக்கிறார்.
1949 இல் வெளியிடப்பட்ட, ’தி செகண்ட் செக்ஸ்’ (The Second Sex) உடனடி வெற்றியைப் பெற்றதுடன், உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பிரான்சில், கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்படுவதில் அதன் செல்வாக்கு முக்கிய பங்கு வகித்தது. பியூவோயர் (Beauvoir) பிரெஞ்சு தத்துவஞானி ஜீன்-பால் சார்த்தருடன் (Jean-Paul Sartre) அவரது தத்துவ நம்பிக்கைகளுக்கு ஏற்ப வெளிப்படையான உறவில் (open relationship) வாழ்ந்தார். ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை அல்லது குழந்தைகளைப் பெறவில்லை. இது அவரது வழக்கத்திற்கு மாறான கருத்துக்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
ஒரு சக்திவாய்ந்த வேண்டுகோள்
1971 இல், பியூவோயர் "343 இன் அறிக்கையை" (Manifesto of the 343) எழுதினார். கருக்கலைப்பு செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட 343 பெண்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர். பிரெஞ்சு சமூக ஜனநாயக இதழான Le Nouvel Observateur இல் வெளியிடப்பட்ட மனு, ஒரு சக்திவாய்ந்த அறிக்கையுடன் தொடங்கியது: "பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் பெண்கள் கருக்கலைப்பு செய்கிறார்கள்" (One million women in France have abortions every year). பொதுவாக, கருகலைப்புக்காக பெண்கள் ரகசியமாக வைத்து ஆபத்தான சூழ்நிலைகளில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது மருத்துவ மேற்பார்வையின் கீழ், செய்யப்படும் ஒரு அடிப்படை செயல்முறையாகும். நான், உட்பட பல பெண்கள் சமூக அமைதியை எதிர்கொள்கிறோம். நான் அவர்களில் ஒருவராக இருப்பதையும், கருக்கலைப்பு செய்ததையும் ஒப்புக்கொள்கிறேன். கருத்தடைக்கான இலவச அணுகலுக்கான எங்கள் கோரிக்கையைப் போலவே, கருக்கலைப்பை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகவும் நாங்கள் கோருகிறோம். இந்த சட்ட மறுப்பு (civil disobedience) செயல் அமைப்பின், ஏமாற்றுத்தனத்தை அம்பலப்படுத்தியது மற்றும் வழக்குத் தொடரும் அபாயத்தை ஏற்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுகாதார அமைச்சர், சிமோன் வெயிலின் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் இது முக்கிய பங்கு வகித்தது. இது சுகாதார அமைச்சர் சிமோன் வெயிலின் பெயரிலேயே பெயரிடப்பட்டது. இது பிரெஞ்சு பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதை குற்றமற்றது மற்றும் பெண்களின் உரிமைகளின் சின்னமாக மாற்றியது.
"இரண்டாம் பாலினம்" (The Second Sex) நவீன பெண்ணியத்தின் அடிப்படை நூலாக உள்ளது. இது முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் இந்திய பெண்ணியவாதியும் நாவலாசிரியருமான பிரபா கைதானால் "ஸ்திரீ உபேக்ஷிதா" (Stree Upekshita) என்று இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதாவது, இது "பெண்களை புறக்கணித்தல்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கைதான் மேற்கத்திய மற்றும் இந்திய தத்துவங்களில், குறிப்பாக இருத்தலியல் பற்றி நன்கு அறிந்தவர். இருப்பினும், மொழிபெயர்ப்பில் சில குறைபாடுகள் மற்றும் எளிமைகள் இருந்தன.
இதனால்தான், தேசிய விருது பெற்ற இந்தி வெளியீட்டாளரான வாணி பிரகாஷன், 2022 இல் ஒரு புதிய மொழிபெயர்ப்பை உருவாக்கத் தேர்வு செய்தார். மோனிகா சிங், பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தார். இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் தொகுதி கடந்த மாதம் புது தில்லி, உலகப் புத்தகக் கண்காட்சியின் (New Delhi, World Book Fair) போது வெளியிடப்பட்டது. இது, ஹிந்தி வாசகர்களுக்கு உரைக்கான முழுமையான மற்றும் துல்லியமான அணுகலை வழங்குகிறது.
இது, பியூவோயரின் (Beauvoir) நீடித்த தாக்கத்தையும், உலகெங்கிலும் உள்ள பெண்ணியவாதிகளிடமிருந்து அவர் பெறும் மரியாதையையும் காட்டுகிறது. இப்பொழுது, பிரஞ்சு அரசியலமைப்பில், கருக்கலைப்பை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது, பியூவோயருக்கு (Beauvoir) பெரிதும் முக்கிய காரணமாகும்.
இந்த குறிப்பிடத்தக்க முடிவு, மதிப்பிற்குரிய பிரெஞ்சு அரசியல்வாதியும், ஐரோப்பாவில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியவருமான சிமோன் வெயிலை (simone weil) நமக்கு நினைவூட்டுகிறது. நாஜி காலத்தில், ஆஷ்விட்ஸில் (Auschwitz) இருந்து சிமோன் வெயில் தைரியமாக உயிர் பிழைத்துள்ளார். 1975 இல் பொது சுகாதார அமைச்சராக (Minister of Public Health) இருந்த அவர், பிரான்சில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற நிறுவனரீதியான பாலினத்தை முறியடித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின், முதல் பெண் தலைவர் என்ற வரலாற்றையும் சிமோன் வெயில் படைத்தார். தற்போது, சிமோன் வெயில், பாந்தியனில் (Pantheon) ஓய்வெடுக்கிறார். உலகளவில் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் நபராக, சிமோன் வெயிலும் ஒருவராவர். சிமோன் வெயில் (Simone Veil) மற்றும் சிமோன் டி பியூவாயர் (Simone de Beauvoir) ஆகியோர் பிரான்ஸில் தங்கள் பாரம்பரியத்தை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றது என்பதில் பெருமிதம் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
ஒரு பெண்ணிய வெளியுறவுக் கொள்கை
இந்த குறிப்பிடத்தக்க பெண்களின் செல்வாக்கு, இன்று நமது இராஜதந்திர முயற்சிகளில் காணப்படுகிறது. பிரான்ஸானது, ஒரு பெண்ணிய வெளியுறவுக் கொள்கையை (feminist foreign policy) ஊக்குவிக்கிறது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளையும், அனைத்து இருதரப்பு முயற்சிகள், மேம்பாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களில் வாதிடுதல் ஆகியவற்றில் ஒருங்கிணைக்க ஒரு குறிப்பிட்ட உத்தி இதில் அடங்கும். 2021 இல், பிரான்ஸில், தலைமுறை சமத்துவ மன்றத்தின் (Generation Equality Forum) இணைத் தலைவராக இருந்தது. 1995 இல் பெய்ஜிங்கில், பெண்கள் மீதான உலக மாநாட்டிற்குப் பிறகு (World Conference on Women), இது மிகவும் குறிப்பிடத்தக்க சர்வதேச பெண்ணிய நிகழ்வாகும்.
சர்வதேச அளவில் பெண்களின் உரிமைகளுக்காக உறுதிப்பாடுகளை மேற்கொண்ட வரலாறு இந்தியாவுக்கு உண்டு. நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்கு 5 (பாலின சமத்துவம்) ஐ அடைவதற்கான முயற்சிகள், பாலின சமத்துவத்திற்கான 2019 பியாரிட்ஸ் கூட்டாண்மையில் (Biarritz Partnership) சேருதல் மற்றும் சமீபத்தில், பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையத்தில் உறுப்பினர் பெறுவது ஆகியவை இதில் அடங்கும். உலகளவில் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதில் பிரான்சும், இந்தியாவும் மேலும் ஒத்துழைக்க பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.
தியரி மேத்தீ (Thierry Mathou) இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதராக உள்ளார்.