பரவலாகப் பயன்படுத்தப்படும் "மனித-விலங்கு மோதல்" (human-animal conflict) என்ற சொல்லாடல் ஒரு நியாயமற்ற வெளிப்பாடு அல்லவா? இந்த சொல்லாடல், விலங்குகளை மனிதர்களுக்கு எதிரியாக சித்தரிக்கச் செய்கிறது. இது, வனவிலங்குகள் மீது அதிக அவநம்பிக்கை மற்றும் வெறுப்புக்கு வழிவகுக்கிறது. இதனால், மனிதர்களுடனான மோதல்களுக்கு, விலங்குகளும் சமமான பங்கு உள்ளது என்று இது அறிவுறுத்துகிறது.
வயநாட்டில் பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தொடர்ந்து, விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகியுள்ளன. சில ஊடகங்கள், இந்த சம்பவங்களை சித்தரிக்கும் விதமாக "கொலையாளி யானை" (killer elephant) மற்றும் "முரட்டு விலங்கு" (rogue animal) போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி இந்த சம்பவங்களை மேலும், மிகைப்படுத்தியுள்ளன.
மலையாளச் செய்தி சேனல்கள், யானையை திட்டமிட்ட கொலையைப் போல் சித்தரித்து, ’கொலயாலி ஆனா’ (கொலையாளி யானை) போன்ற சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தின. "ஆனைப் பழிவாங்கும்" அல்லது "யானை சீற்றம்" என்று பொருள்படும் "ஆனப்பகா" மற்றும் "ஆனக்கலி" போன்ற சொற்றொடர்களால் மலைப்பாங்கான மாவட்டத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்தன. இந்த வார்த்தைகளால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இதுபோன்ற சொற்களானது காடுகளைப் பற்றிய நமது எண்ணங்களையும் அணுகுமுறைகளையும் தவறாக வடிவமைப்புக்கு உள்ளாக்கும்.
பொதுவாக, மனிதனின் முன்னிலையில், யானையானது மிகவும் இணக்கமான காட்டு விலங்குகளில் ஒன்றாகும். இவை சைவ விலங்குகள் (vegetarian giant), மேலும், உணவுக்காக மனிதர்களைத் தாக்குவதில்லை. யானைகள், பொதுவாக பெரும்பாலான ஆத்திரமூட்டல் சம்மந்தமான காரணிகளை புறக்கணிக்கிறது. இருப்பினும், அவை அச்சுறுத்தப்படும்போதும் அல்லது கடுமையான மன அழுத்தமாக இருக்கும்போதும் மட்டுமே எதிர்வினையாற்றுகின்றன.
பொதுவாக, நம் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்களில் யானைகள் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்றும், ஒற்றை யானையின் பங்களிப்பு கூட சுபநிகழ்விற்கு பிரமாண்டத்தை சேர்க்கும் எனக் கருதுகிறோம். யானைகளைப் பார்ப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது மட்டுமல்லாமல், அவற்றைப் பற்றி எழுதுவது ஒருபோதும் சோர்வாக இருக்காது. இதன் சுவாரஸ்யமானது, யானையின் பல்வேறு அசைவுகள் ஒரே நேரத்தில் நிகழ்வது: அதன் காதுகள் மடித்து ஆட்டுவது, தும்பிக்கையை சுழற்றுவது, உடல் தொடர்ந்து பக்கத்திலிருந்து பக்கமாக ஆட்டுவது மற்றும் தலை உருண்டு அசைப்பது, அமைதியான மற்றும் சிக்கலான நடன அமைப்பை உருவாக்குவது இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
கடந்த நாற்பது வருடங்களில் வயநாட்டின் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்பதை நான் பார்த்திருக்கிறேன். இது மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழும் இடமாக இருந்தது. ஆனால், இப்போது அது "மனித-விலங்கு மோதல்" (human-animal conflict) என்று அழைக்கப்படும் முக்கிய பகுதியாக அறியப்படுகிறது. வயநாட்டில் உள்ள "W" என்ற எழுத்தை வனங்களுடன் இணைக்கிறேன். வயநாடு பரந்த மலைப்பகுதியாக மாறுவதற்கு முன்பு, பழங்குடியின சமூகங்களும், விவசாயிகளும் வனவிலங்குகளுடன் அமைதியாக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதில், மனிதர்களும், விலங்குகளும் ஒருவருக்கொருவர் இடத்தை மதித்து, கொடுக்கல், வாங்கல் உறவில் ஈடுபட்டுள்ளனர். ஒரு காட்டு விலங்கு ஒரு கிராமத்தை நெருங்கும் போது, மக்கள் கூட்டமாகவோ, அல்லது அதை விரட்டுவதற்காக கூச்சலிடவோ இல்லை. விலங்கு மீண்டும் காட்டுக்குள் செல்லும் வரை அவர்கள் பொறுமையாக, பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தனர். கிராம மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர் மற்றும் யானை வழித்தடங்களுக்கு எந்தவொரு தொந்தரவு செய்யவில்லை. மலைப்பகுதி, வழிநெடுகிலும் உள்ள நகரங்களில் ஓலைக் கூரைக் கடைகள் ஏலக்காய், காபி, மிளகு வியாபாரம் செய்தன. மாநிலங்களுக்கு இடையேயான சாலைகளில் பயணிகளுக்கு சிறிய உணவகங்கள் மூலம் சேவை செய்தன. மலைகள் நகரமயமாதலை அறிந்திருக்கவில்லை. மனிதனை மையமாகக் கொண்ட நமது உலகில், மற்ற உயிரினங்கள் நமது நவீன வாழ்க்கை முறைகளை, சிறிய வழிகளில் கூட தடை செய்தால், அவற்றை எதிரிகளாகப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை.