உடல் பருமன் (Obesity) மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (malnutrition) ஆகிய இரட்டைப் பிரச்சினைகளின் சுகாதார மற்றும் பொருளாதார செலவுகளைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன.
லான்செட்டில் (Lancet) சமீபத்திய ஆய்வில் கண்டறியப்படாத நீரிழிவு நோய் (undiagnosed diabetes), கோவிட் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. இது இந்தியா உட்பட பல்வேறு குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் காணப்பட்டது. லான்செட்டில் (Lancet) மேலும் ஒரு சமீபத்திய ஆய்வு, அதிகரித்து வரும் உலகளாவிய உடல் பருமன் தொற்றுநோய் பற்றிய கவலைகளை குறிப்பிடுகிறது. இதில், பெண்கள் மற்றும் இளைஞர்கள் (ஐந்து முதல் 16 வயது வரை) குறிப்பிடத்தக்க தாக்கங்களை எதிர்கொள்வதால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்த கண்டுபிடிப்புகள் நீரிழிவு உட்பட, பரவக்கூடிய நோய்களின் அதிக சுமை கொண்ட ஒரு நாட்டைப் பற்றியது. உடல் பருமனும், இந்த நோய்களுக்கு முக்கிய பங்களிக்கும் காரணிகளில் ஒன்றாகும். இதில் முக்கிய காரணியான, 'ஒரு பெரிய கொழுப்பு பிரச்சனை' (A big fat problem) IE, மார்ச் 5-யைச் சுட்டிக்காட்டியது. துரதிர்ஷ்டவசமாக, போஷன் 2.0 போன்ற நாட்டின் ஊட்டச்சத்து தொடர்பான கொள்கைகள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை. உடல் பருமன் தொடர்பான ஆபத்தான காரணிகள் மோசமடைவதைத் தடுக்க நோய்ப்பாதிப்பு ஆய்வு (screening) மற்றும் ஆரம்பகால தலையீடுகளை (early interventions) இந்த தேசிய திட்டம் (National Program) பரிந்துரைக்கிறது. இது புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரண்டு முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் அதிக எடை உள்ளதா என்று சோதிக்க வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. துரதிருஷ்டவசமாக, மருத்துவத் துறையில் உள்ளவர்கள் உட்பட பலர், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை முழுமையாக அறிந்திருக்கவில்லை. இது, இந்த பரிந்துரைகளை அரிதாகவே கடைப்பிடிக்க வழிவகுக்கிறது.
உடல் பருமன் என்பது இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் பரவி வரும் பிரச்சினை ஆகும். இருப்பினும், இந்தியாவில், அதிகரித்து வரும் அதிக எடை கொண்ட நபர்களின் எண்ணிக்கை, ஊட்டச்சத்துக் குறைபாட்டின் வரலாற்றுடன் இணைந்து, ஒரு சிக்கலான பொது சுகாதார சவாலை முன்வைக்கிறது. தி தின் ஃபேட் இந்தியன் ((The Thin Fat Indian) IE, மார்ச் 7)) என்ற கட்டுரையில் உட்சுரப்பியல் நிபுணர் (endocrinologist) சித்தரஞ்சன் யாக்னிக் தாய்வழி ஆரோக்கியத்துடன் இரட்டைப் பிரச்சினையை இணைத்தார். பல நூற்றாண்டுகளாக, நமது இளம் தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதன் மூலம் ஆரம்பகால வாழ்க்கையின் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ளவில்லை என்று அவர் வலியுறுத்தினார். இளம் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் போது, குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொற்றுநோய்களைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தாயின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பின்னடைவுக்கு பங்களிக்கிறது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது.
பல ஆண்டுகளாக ஊட்டச்சத்தில் முதலீடு செய்து வந்தாலும், தொடர்ந்து அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள், இந்தியர்களை ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஊக்குவிப்பதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு நுகர்வு கணக்கெடுப்பு (Household Consumption Survey), இந்தியர்கள் "பானங்கள், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு" அதிகமாகச் செலவழிப்பதாகக் குறிப்பிடுகிறது. 2022 ஆம் ஆண்டில், NITI ஆயோக் உடல் பருமனை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை பரிந்துரைத்தது, அதிக சர்க்கரை மற்றும் அதிக உப்பு உணவுகள் மீது வரிகளை விதிப்பது மற்றும் முன்பக்க லேபிளிங்கைப் பயன்படுத்துவது போன்றவை ஆகும். ஆனால், இந்தப் பரிந்துரைகளை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
வீட்டு நுகர்வு கணக்கெடுப்பின் படி (Household Consumption Survey), உப்பு மற்றும் சர்க்கரைக்கான செலவு குறைவாகவே தெரிகிறது. இருப்பினும், சௌமியா சுவாமிநாதன் மற்றும் ராம நாராயணன் ஆகியோர், "உணவு அட்டவணையில் நிரப்புதல்" (Filling in the Diet Chart) என்ற தலைப்பில் மார்ச் 9, வெளியான கட்டுரையில், இது உண்மையான உட்கொள்ளலைப் பிரதிபலிக்காது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உட்கொள்ளப்படும் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை மதிப்பிடுவது முகவும் சவாலானது. இது முக்கியமானது, ஏனெனில் இந்தியாவில் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஊட்டச்சத்து உட்கொள்ளலை துல்லியமாக மதிப்பிடுவதற்கான ஒரே வழி உணவு ஆய்வுகள் மட்டுமே, என்பதை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
நரேந்திர மோடி அரசு சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. லான்செட் அறிக்கை போன்ற ஆய்வுகள் வலியுறுத்துவது போல், இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் தேவை. கடந்த ஆண்டு உலகளாவிய உடல் பருமன் அட்லஸ் (Global Obesity Atlas) படி, உடல் பருமனை சமாளிப்பதற்கான தயார்நிலை அடிப்படையில் 183 நாடுகளில் இந்தியா 99 வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உணவு நடைமுறைகளின் அரசியல் தன்மையைக் கருத்தில் கொண்டு, அரசு தலையீடுகள் ஊக்கத்தொகை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சுவாமிநாதனும், நாராயணனும் பல வழிமுறைகளை முன்வைக்கின்றனர். வெளியில் சாப்பிடுவது மிகவும் பொதுவானதாகி வருகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் குறைந்த விலை உணவகங்கள் பொது சுகாதாரத்திற்கான முதலீடாக பார்க்கப்பட வேண்டும். நஷ்டத்தை ஏற்படுத்தும் பொறுப்பாக அல்ல. இந்த, மையங்கள் சர்க்கரை பானங்களுக்கு பதிலாக, மோர் போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவிக்க முடியும்.
அரசு அங்கன்வாடி மற்றும் பள்ளி மதிய உணவு திட்டங்களில் காய்கறிகளை சேர்க்க அதிக ஆதாரங்களை ஒதுக்க வேண்டும். இது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து விளைவுகளை அதிகரிக்கவும் உதவும். ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு உணவுகளை உள்ளடக்கிய பொது விநியோக முறையை (Public Distribution System(PDS)) விரிவுபடுத்துமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உலக உடல் பருமன் கூட்டமைப்பின் (World Obesity Federation) கூற்றுப்படி, இந்தியாவில் அதிக எடை மற்றும் உடல் பருமனின் மொத்த பொருளாதார தாக்கம் 2035 ஆம் ஆண்டில் 129.33 பில்லியன் டாலரை எட்டக்கூடும் என்று தெரிவிக்கிறது.