தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான பீகார் அரசின் மசோதா பற்றி . . . -அருன் குமார்

 தேர்வு தாள் கசிவு அல்லது தேர்வு முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூக விரோத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான தண்டனை வழங்க  இந்த மசோதா பரிந்துரைக்கிறது.


பீகார் சட்டமன்றம் புதன்கிழமை பீகார் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுக்க) மசோதா 2024 (Bihar Public Examinations (Prevention of Unfair Means) Bill, 2024) ஐ, குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு முறையைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் நிறைவேற்றியது.


ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்தைப் போலவே இந்த மசோதா உள்ளது. பீகாரில் பல தேர்வு முகமைகள் நடத்தும் பொதுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Bihar Public Service Commission (BPSC)), பீகார் பணியாளர் தேர்வு ஆணையம் (Bihar Staff Selection Commission), பீகார் தொழில்நுட்ப சேவைகள் ஆணையம் (Bihar Technical Services Commission), பீகார்மாநில பல்கலைக்கழக சேவை ஆணையம் (Bihar State University Service Commission), பீகார் காவல்துறை துணை சேவை ஆணைக்குழு (Bihar Police Subordinate Service Commission) மற்றும் காவல்த்துறை தேர்வு வாரியம் (Central Selection Board of Constable) போன்ற வாரிய தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்கு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது 


நிதி ஆதாயங்களுக்காக மக்கள், சமூக விரோதிகள் அல்லது நிறுவனங்கள் தேர்வு முறையை சீர்குலைப்பதைத் தடுப்பதே மசோதாவின் முக்கிய குறிக்கோளாகும். 10-ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹1 கோடி அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது.


இளைஞர்களுக்கு நியாமான தேர்வு முறையை உறுதி செய்வது முக்கியம் என்று கூறி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி (Vijay Kumar Choudhary), இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.


”ஒன்றிய  அரசு அனைத்து மாநிலங்களுக்கும்  சட்டத்தின் மாதிரி வரைவை வழங்கியது. முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஒரு வலுவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது  தேர்வு முறையில் அதிக வெளிப்படைத்தன்மை, மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்" என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி கூறினார்.


பீகாரில் மசோதாவிற்கான தேவை

நாடு தழுவிய வினாத்தாள் கசிவு சர்ச்சை காரணமாக இந்த மசோதா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை விரைவான விசாரணைக்குப் பிறகு, ஒன்றிய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) மற்றும் பீகார் காவல்த்துறையினர் கைது செய்தனர்.


வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையாகி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து இந்த வழக்கை  ஒன்றிய புலனாய்வுப் பிரிவு விசாரிக்க தொடங்கியது. பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் கேள்விகள் கசிந்ததாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது. ஆனால், அதன் தாக்கம் நாடு முழுவதும் இல்லாததால் முழு தேர்வையும் ரத்து செய்யவில்லை. பீகார் இதற்கு முன்பும் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தில் பல முறை தேர்வுத் தாள்கள் கசிந்துள்ளன.


எடுத்துக்காட்டாக, பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Bihar Public Service Commission (BPSC)) மூன்றாம் கட்ட ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வு தாள் கசிவு காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்து செய்யப்பட்டு, இந்த மாதம் மறுதேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு, 21,391 காலியிடங்களுக்கான மத்திய காவலர் தேர்வு வாரியம் நடத்திய காவலர் ஆட்சேர்ப்பு தேர்வு தாள் முதல் நாளே தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 18-லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். வாரியத்தின் தலைவரும், பீகார் முன்னாள் காவல்துறை இயக்குநருமான எஸ்.கே.சிங்கால் நீக்கப்பட்டார்.


2022-ஆம் ஆண்டில், கேள்வி  தாள் கசிந்ததாகக் குற்றசாட்டு எழுந்தது  பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 67-வது ஒருங்கிணைந்த (முதன்மை) போட்டித் தேர்வை ரத்து செய்தது. அதற்கு முன், பணியாளர் தேர்வு ஆணையம் (இடைநிலை நிலை) தேர்வு ரத்து செய்யப்பட்டு, அப்போதைய தலைவர் கைது செய்யப்பட்டார். பீகார் பள்ளித் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவரும் வாரியத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.


2017-ஆம் ஆண்டில், பீகார் பணியாளர் தேர்வு கேள்வி கசிவு தொடர்பாக மூத்த குடிமை  பணி அதிகாரி கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 2021-ல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். மேலும், அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.


தண்டனை விதிகள்

குற்றத்தில் ஈடுபடும் எவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்குவதை பற்றி இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ₹10 லட்சம் வரை அபராதமும் அடங்கும். பணியில் இருப்பவர் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு ₹1 கோடி அபராதம், பணி நீக்கம் செய்யப்படுவர் மற்றும் தேர்வுச் செலவுகள் அவரிடம்  வசூலிக்கப்படும். இதற்கு உதவியாக இருந்த நபர் மற்றும்  உயர் அதிகாரிகள் உதவியாக இருந்தால் 10-ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ₹1 கோடி அபராதம் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு சட்டத்தின் மாதிரி வரைவை வழங்கியது. இந்த மசோதாவின் முக்கிய குறிக்கோள், தேர்வு முறைக்கு அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டு வருவதே ஆகும். 


இந்த மசோதா நியாயமற்ற தேர்வு நடைமுறைகள் தொடர்பான பல்வேறு குற்றங்களை வரையறுக்கிறது. வினாத்தாள்கள் அல்லது பதில்கள் கசிவு. போலி இணையதளங்களைப் பயன்படுத்துதல். அதிகாரம் இல்லாமல் வினாத்தாள்கள் அல்லது OMR தாள்களை அணுகுதல். அங்கீகாரம் இல்லாமல் தேர்வின் போது பதில்களை வழங்குதல். விடைத்தாள்கள் அல்லது OMR தாள்களில் குளறுபடி. மதிப்பீடுகளை மாற்றுதல். தொகுப்பு விதிமுறைகள் அல்லது தரநிலைகளை மீறுதல். தகுதிப் பட்டியல்களுக்கான ஆவணங்களைச் சிதைத்தல். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுதல். கணினி வலைதளைங்களை முறைகேடாக கையாளுதல். போலி தேர்வுகளை நடத்துதல் அல்லது போலி அனுமதி அட்டைகளை வழங்குதல். பரீட்சைகளுடன் தொடர்புடையவர்களை குறைந்தபட்சம் துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் இந்த குற்றங்களை விசாரிக்க முடியும்.  ஒரு சேவை வழங்குநர் முறைகேடுகளை நடைமுறைகளைப் புகாரளிக்கத் தவறினால் அல்லது எந்த வகையிலும் அவற்றில் ஈடுபட்டிருந்தால் அவர் குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார் என்று மசோதா கூறுகிறது.


  வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதில் ஈடுபட்டுள்ள தனிநபர்களைத் தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க மசோதா முன்மொழிகிறது. வளர்ந்து வரும் சவால்கள் காரணமாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் இதை "காலத்தின் தேவை" என்று அழைத்தார். ஒருமுறை சட்டமாக இயற்றப்பட்டால், இந்தச் சட்டத்தின் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பிணையில் வெளிவர முடியாது  என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கூறினார். 


Original article:

Share: