செயற்கை நுண்ணறிவின் சுற்றுச்சூழலில் தாக்கம் ஏன் ஒரு பெரிய கவலையாக உள்ளது? -அமிதாப் சின்ஹா

 காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவது உட்பட பல பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறியும் முயற்சிகள் கடுமையான உமிழ்வுகளை வெளிப்படுத்துகின்றன. இந்த தாக்கத்தின் அளவு இப்போதுதான் தெரிகிறது.


இந்த மாத தொடக்கத்தில் கூகுள் (Google) நிறுவனம் வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர சுற்றுச்சூழல்  அறிக்கையில், முந்தைய ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் உமிழ்வு தடம் 13% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு முக்கியமாக அதன் தரவு மையங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் காரணமாகும். 2023-ஆம் ஆண்டில் அதன் தரவு மையங்கள் 17% அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கூகுள் குறிப்பிட்டது. அதன் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பயன்பாடு காரணமாக வரும் ஆண்டுகளில் இந்த நிலை தொடரும் என்றும் கூகுள் நிறுவனம் கூறியது. 


மின்சாரத்தை உறிஞ்சும் நுண்ணறிவு

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை கண்டறிவது உட்பட பல பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு பல்வேறு உருமாறும் மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய உமிழ்வை வெளியிடுகிறது. இந்த பாதிப்பின் அளவு இப்போதுதான் தெரிய வருகிறது.


OpenAI-ன் சாட்போட் ChatGPT-ல் செய்யப்பட்டதைப் போன்ற ஒரு எளிய செயற்கை நுண்ணறிவு வினவல் வழக்கமான கூகுள் தேடலை விட 10 முதல் 33 மடங்கு அதிக ஆற்றலைப் பயன்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. படங்களை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு தேடல்கள் இன்னும் அதிக ஆற்றலைப் பயன்படுத்தக்கூடும். 

உமிழ்வு ஏன் அதிகமாக உள்ளது ? 


செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் ஒரு எளிய கூகுள் தேடலை விட இணையத்தின் தேவை அதிகமாக தேவைப்படுகிறது. கேட்கப்படும் கேள்விக்கு ஏற்ப பதில்களை உருவாக்க அதிக தரவுகளை அவை செயலாக்கி பகுப்பாய்வு செய்கின்றன. இதன் பொருள், தரவைச் செயலாக்க, சேமிக்க அல்லது மீட்டெடுக்க அதிக மின் ஆற்றல்கள்  தேவைப்படுகின்றன. அதிக பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதற்கு தரவு மையங்களில் அதிக சக்தி வாய்ந்த குளிரூட்டிகள் தேவைப்படுகின்றன.  


ஒரு கவலைக்குரிய முன்கணிப்பு


செயற்கை நுண்ணறிவு கருவிகள் அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இருப்பதால், உலகளவில் ஆற்றல் நுகர்வில் அவற்றின் தாக்கம் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​தரவு மையங்கள் உலகளாவிய மின்சாரத்தில் 1% முதல் 1.3% வரை பயன்படுத்துகின்றன. இது 2026-ஆம் ஆண்டளவில் 1.5% முதல் 3% வரை இரட்டிப்பாகும் என சர்வதேச எரிசக்தி நிறுவனம் (International Energy Agency (IEA)) தெரிவித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, சாலையில் பல மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், அவை உலகளாவிய மின்சாரத்தில் 0.5% மட்டுமே பயன்படுத்துகின்றன என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


சில நாடுகளில், தரவு மையங்கள் ஏற்கனவே 10%-க்கும் அதிகமான தேசிய மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, வரிச் சலுகைகள் மற்றும் சலுகைகள் காரணமாக பல தரவு மையங்களைக் கொண்ட அயர்லாந்தில், இந்தப் பங்கு 18% எட்டியுள்ளது. அதிக தரவு மையங்கள் உள்ள அமெரிக்காவில், இந்த எண்ணிக்கை 1.3% முதல் 4.5% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான தரவு இன்னும் கிடைக்கவில்லை.


இந்தியாவுக்கான சூழல்


இந்தியாவில் நிலைமை குறைந்தது அடுத்த சில ஆண்டுகளில், அதிகம் மாற வாய்ப்பில்லை என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்கள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதித்துள்ளது என்ற எணிக்கை விரைவில் தெளிவாகத் தெரியும் என்று அராஹாஸ் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி சவுரப் ராய் (Saurabh Rai) கூறினார். 


இது மின்சார நுகர்வு மட்டுமல்ல. தரவு மையங்களை குளிர்விக்க தேவையான நீர் ஆதாரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. தரவு மையங்களின் நீர் நுகர்வு குறித்த போதுமான தரவு இல்லை. ஆனால், அயோவாவில் (US) OpenAI இன் GPT-4 மாதிரிக்கு சேவை செய்யும் மையம் ஜூலை 2022-ல் மாவட்டத்தின் நீர் விநியோகத்தில் 6%-ஐ உட்கொண்டதாகக் கூறப்படுகிறது" என்று ராய் கூறினார். இது இந்தியாவில் ஏற்படுத்தி இருப்பதாக  ராய் கூறினார். அங்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் வரிசைப்படுத்தல் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


"செயற்கை நுண்ணறிவு என்பது புரட்சிகர தொழில்நுட்பம், இது இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து வளர்ந்து வரும் போக்குகள், பாதகமான தாக்கங்களைக் குறைக்கும் வகையில் அதன் விரிவாக்கத்தை நாம் திட்டமிட வேண்டும். அதே நேரத்தில், இந்த தரவு மையங்களை இயக்கும் நிறுவனங்கள் தங்கள் செயல்முறைகளை திறமையாக்குவதற்கும் உமிழ்வு தடம் (emissions footprint) குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று சவுரப் ராய்  கூறினார்.  


மாற்றுப் பார்வை


செயற்கை நுண்ணறிவை பெரிய அளவில் பயன்படுத்துவது உலகளவில் உமிழ்வை கணிசமாகக் குறைக்க உதவும் என்று பிற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பாஸ்டன் ஆலோசனைக் குழு சமீபத்தில் நடத்திய ஆய்வில், கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை நடைமுறைகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய உமிழ்வை 5-10% குறைக்கலாம். இது கூடுதல் வருவாய் அல்லது செலவு சேமிப்புகளில் $1.3 டிரில்லியன் முதல் $2.6 டிரில்லியன் வரை உருவாக்கும். 


தற்போதைய செயல்முறைகளில் உமிழ்வைக் கண்காணிக்கவும் கணிக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் உமிழ்வைக் குறைக்கலாம். பயனற்ற செயல்முறைகளை அகற்ற செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும்.



Original article:

Share: