குழந்தைகளின் தனிப்பட்ட தரவை சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துதல் -ஜோத்ஸ்னா சிங்

 குழந்தைகளின் தனிப்பட்ட தரவு உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால், தரவு தனியுரிமை (data privacy) மற்றும் தரவுக் குறைப்புக் (data minimisation) கொள்கைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.


இந்தியப் பள்ளிக்கல்வி முறை உலகின் மிக விரிவான அமைப்புகளில் ஒன்றாகும். ஏறக்குறைய 15 லட்சம் பள்ளிகளில், 97 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை கிட்டத்தட்ட 26.5 கோடி பல்வேறு சமூக பொருளாதார பின்னணியைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டுள்ளது.  


தகவல் சேகரித்தல் 


இந்தியாவில் உள்ள கல்வி முறையை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்காகவும் அதன் நோக்கத்தை உணர்த்தவும், கல்வி அமைச்சகம் 2018-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (Unified District Information System for Education Plus (UDISE PLUS)) தளத்தை உருவாக்கியது. பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி செயல்திறன் குறித்த தகவல்களை சேகரித்து பரிமாறிக்கொள்வதில் இத்தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வித் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்க இந்தத் தரவு உதவுகிறது.  நிதி ஒதுக்கீட்டின் செயல்முறையை மேம்படுத்துவதற்கும்,  கல்வித் திட்டங்களைக் கண்காணிப்பதற்கும், இந்தத்தளம் பயன்படுத்தப்படுகிறது. நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும், சேவை வழங்குதலை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.  தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020)-ன் அடிப்படையில், கல்வி அமைச்சகம் தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவேடு  (Automated Permanent Academic Account Registry(APAAR)) முறையை அறிமுகப்படுத்தியது. இது மாணவர்களின் தனிப்பட்ட அடையாளங்களை சேகரிக்க உதவுகிறது. மேலும், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க  உதவுகிறது. மாணவர்களின் ஆதார் எண் அடிப்படையில் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகிறது 


தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவேடு (APAAR) மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (UDISE PLUS) உடன் இணைப்பது பள்ளிக் கல்வியை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளில்  ஒன்றாகும். இது மாணவர் சேர்க்கையை தானியக்கமாக்க உதவுகிறது. இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல் மற்றும் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.


டிஜிலாக்கர் (Digilocker) மற்றும் கல்வி தொழில்நுட்பம் (ed-tech) போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இதன் விளைவாக அவை நவீன கல்வி முறையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. 2020-ஆம் ஆண்டில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுக்கான தரவுப் பகிர்வுக் கொள்கையை கல்வி அமைச்சகம் உருவாக்கியது. இருப்பினும், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம்,2023 (Digital Personal Data Protection Act (DPDP))-இல் இருந்து மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கொள்கைகள் புதுப்பிக்கப்படவில்லை. கல்வி தொழில்நுட்பம் (ed-tech) சார்ந்த  நிறுவனங்களுக்கான தெளிவான விதிமுறைகள் வரையறை செய்யப்படவில்லை.


இதில் பல சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, பெற்றோரின் சம்மதம் என்ன என்பது குறித்து வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல் இல்லை.  தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு  பதிவு / ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் கீழ் கோரப்பட்ட சிறார்களின் தரவுக்கு பெற்றோரின் ஒப்புதல் இந்தத் தேவையை மீறலாம். மேலும், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம் (Digital Personal Data Protection (DPDP) Act, 2023)  குறிப்பிட்ட நியாயமான நோக்கங்களுக்காக மட்டுமே, தனிப்பட்ட தரவை சேகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்டதைத் தாண்டி எந்த நோக்கத்திற்காகவும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் கீழ் குழந்தைகளின் தரவைப் பகிர்வது இந்த விதியை மீறும். தேசிய அளவில் மாணவர் தரவைப் பகிர்வதன் நன்மைகளைக் கல்வி அமைச்சகம் அங்கீகரிக்கிறது. எனவே, கல்விப் பதிவுகளை திறம்பட நிர்வகிப்பது மிகவும் முக்கியம். டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட மற்றும் சுய ஒப்புதல் செயல்முறையை கட்டாயப்படுத்துகிறது.  


மூன்று பகுதி சோதனை (three-part test) 


ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி vs இந்திய ஒன்றிய அரசு (2018) (Justice K.S. Puttaswamy (Retd.) vs Union of India (2018)) வழக்கில் அந்தரங்க உரிமையை (right to privacy) அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குடிமக்களின் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கு நீதிமன்றம் மூன்று பகுதி சோதனையை (three-part test) நிறுவியது. குடிமக்களின் தனியுரிமைக்கான அரசு நடவடிக்கையின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இந்த சோதனை பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின் கீழ் வரையறுக்கப்பட்ட மூன்று நிபந்தனைகள்: (i) உரிமையைக் கட்டுப்படுத்துவதில் நியாயமான நலன் இருக்க வேண்டும். (ii) அத்தகைய கட்டுப்பாடு அவசியமாகவும் விகிதாசாரமாகவும் இருக்க வேண்டும். மற்றும் (iii) கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் அல்லது சட்டத்தால் செயல்படுத்தப்பட வேண்டும். தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு/ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல்  அமைப்பில் (APAAR/UDISE+) ஆதார் ஒருங்கிணைப்பு இந்த மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தரவு திருட்டு மற்றும் இணைய மீறல்களைத் தடுக்க எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம். குறிப்பாக குழந்தைகளின் தனிப்பட்ட தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், தரவு தனியுரிமை மற்றும் தரவுக் குறைப்புக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. 


குறிப்பிட்ட நெறிமுறைகளின் தேவை


குறிப்பிடப்படாத நோக்கங்களுக்காக குழந்தைகளின் தனிப்பட்ட தரவைப் பரிமாறிக்கொள்வது கவலைகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக டிஜிலாக்கர் (DigiLocker) போன்ற மூன்றாம் தரப்பினருடன் தொடர்பு கொள்கிறது. தரவிற்கான பொறுப்பாளர் யார் என்பதை அடையாளம் காண்பது முக்கியம். இந்த பணி சிக்கலானது மற்றும் தற்போது செய்யப்படவில்லை. தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு தனியுரிமைக் கொள்கையானது தரவுப் பாதுகாப்பு, தரவு ஒருங்கிணைப்பு மற்றும் தரவுத் சேமித்தலுக்கான விதிகளை அமைத்தாலும், குழந்தைகளின் தனிப்பட்ட தரவை தெளிவற்ற நோக்கங்களுக்காகப் பகிர்வதற்கான குறிப்பிட்ட நெறிமுறைகள் இல்லை.


ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு மூலம் பகிரப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மை குறித்து கல்வி அமைச்சகத்திற்கு எந்த சட்டப் பொறுப்பும் இல்லை என்று தரவுக் கொள்கை மற்றும் வருடாந்திர அறிக்கை கூறுகிறது. தனியுரிமைக் கொள்கையானது புகார்களை ஒரு குறைதீர்க்கும் அதிகாரிக்கு அனுப்புகிறது. இருப்பினும், சட்டப் பொறுப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது அல்லது கையாளப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவின் கீழ் தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டு பகிரப்படும் நபர்களுக்கு முறையான குறை தீர்க்கும் முறை இல்லாததை இது காட்டுகிறது.


ஒப்புதல் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது பற்றி பல கேள்விகள் உள்ளன. ஒரு விரிவான நிர்வாக கட்டமைப்பிற்குள், தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியான நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இந்த நெறிமுறைகள் தரவு நம்பகத்தன்மையை பராமரிக்கவும், சட்டப்பூர்வ கடமைகளை அமைக்கவும் உதவும். இது குழந்தைகளின் தனிப்பட்ட தரவை சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.


ஜோத்சனா சிங் சட்டக் கொள்கைக்கான விதி மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்



Original article:

Share: