BIMSTEC உறுப்பு நாடுகள் இந்த பிராந்தியத்திற்கான துணிச்சலான தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான நோக்கம் 2-வது வெளியுறவு அமைச்சர்களின் கூடுகையில் தெளிவாகத் தெரிந்தது.
இந்த மாத தொடக்கத்தில் புதுதில்லியில் 2-வது BIMSTEC வெளியுறவு அமைச்சர்களின் கூடுகையை இந்தியா நடத்தியது. இது, வங்காள விரிகுடா பகுதிக்குள் பாதுகாப்பு, இணைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நடவடிக்கைகளை ஒத்துழைப்பதற்கும் மற்றும் விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க முறைசாரா தளத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. செப்டம்பரில் திட்டமிடப்பட்ட ஆறாவது உச்சி மாநாட்டிற்குத் தயாராவதற்காக இந்தக் கூடுகை நிகழ்த்தப்பட்டது. இந்த கூட்டத்தில், BIMSTEC தலைவர்கள் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் முதல் முறையாக நேரில் சந்திப்பார்கள். கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான BIMSTEC ஒப்பந்தத்திலும் அவர்கள் கையெழுத்திடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, BIMSTEC அமைப்பின் அடிப்படை இலக்காகும்.
கிழக்கு அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துதல்
BIMSTEC என்பது வங்காள விரிகுடாவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும். இதில் ஐந்து தெற்காசிய நாடுகள் மற்றும் இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் ஏழு வெவ்வேறு துறைகளில் இணைந்து செயல்படுகின்றன. BIMSTEC ஆனது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் நட்புறவில் ஈடுபட இந்தியாவிற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இந்த நாடுகள் அதன் கிழக்கு அண்டை நாடுகள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு அவை முக்கியமானவை. கிழக்கு அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. ஏனென்றால், வங்காள விரிகுடாவில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பு சாத்தியமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இது பிராந்திய நிலைத்தன்மையையும், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் விருப்பமான பாதுகாப்புக்கான நட்பு நாடாகவும் இந்தியாவின் பங்கையும் பாதிக்கலாம்.
வங்காளதேசம் மற்றும் மியான்மருடனான உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்திற்கு கடலுக்கான அணுகலை வழங்குவதன் நன்மையை இந்தியா வழங்குகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்துடனான உறவுகளை மேம்படுத்துவது இந்தியாவுக்கு பயனளிக்கும். இது இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவுக்கு வலுவான இருப்பைக் கொடுக்கும். இந்தியா தனது இந்தோ-பசிபிக் பார்வைக்கு தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South East Asian Nations(ASEAN)) முக்கியமானதாக கருதுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகியவை ஆசியான் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. BIMSTEC அமைச்சர்களின் கூடுகையின் போது, தாய்லாந்து BIMSTEC மற்றும் ASEAN க்கு இடையே ஒரு பாலமாக தன்னை அடையாளப்படுத்தியது. கூடுகையின் தொடக்க உரையில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், முக்கிய முன்னுரிமைகளை எடுத்துரைத்தார். அப்போது பிம்ஸ்டெக் இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' (Neighbourhood First) கண்ணோட்டம், 'கிழக்கு நோக்கிய கொள்கை' (Act East Policy) மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (Security And Growth for All in the Region(SAGAR)) தொலைநோக்கு ஆகியவற்றின் சந்திப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று கூறினார்.
BIMSTEC கூடுகையின் இரண்டு பகுதிகள்
கூடுகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் பிரிவில், பங்கேற்பாளர்கள் BIMSTEC அமைப்பின் பிராந்திய ஒத்துழைப்பின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்தனர். இது 1-வது கூடுகையின் முக்கிய விளைவுகளை செயல்படுத்துவது குறித்து இந்தியாவின் விளக்கக்காட்சியை உருவாக்கியது. விவசாயம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உறுப்பு நாடுகளில் சிறப்பு மையங்களை நிறுவுவது உட்பட உறுப்பு நாடுகளால் பல யோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளின் நோயாளிகளுக்கும் புற்றுநோய் ஆராய்ச்சி (cancer research), சிகிச்சை (treatment) மற்றும் இ-விசா (e-visas) வழங்குவதற்கான ஆதரவை இந்தியா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், சிறுநீரக நோயை உள்ளடக்குவதை இலங்கை முன்மொழிந்தது. வர்த்தகத்தில் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் அவசியம் மற்றும் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் அவசியம், இணைப்பு (connectivity), சைபர் பாதுகாப்பு (cyber-security) மற்றும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களின் கடத்தலை எதிர்கொள்வது (trafficking of narcotics and illegal arms) ஆகியவற்றின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
இரண்டாவது அமர்வில், எதிர்வரும் உச்சிமாநாட்டில் ஒவ்வொரு நாட்டின் எதிர்பார்ப்புகளும் விவாதிக்கப்பட்டன. பிம்ஸ்டெக் நாடுகளில் பெருமளவில் காணப்படும் கனிம வளங்களை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை இலங்கை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், நாடுகளின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட துறைகளுக்குள் உற்பத்திக்கான நிலைகளை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றின் உற்பத்தியின் கட்டமைப்பை பல்வகைப்படுத்த முடியும். நீலப் பொருளாதாரத்தில் (Blue Economy) ஒத்துழைப்பின் அவசியத்தை வங்காளதேசம் எடுத்துரைத்தது மற்றும் வளைகுடாவில் குறைந்து வரும் மீன்பிடி பிரச்சினையைத் தீர்க்க இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிப்பதை தடை செய்யுமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தியது. மேலும், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் ஒத்துழைப்பின் அவசியத்தை பூட்டான் விளக்கியுள்ளது. அதே நேரத்தில், நேபாளம் உறுப்பு நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய மன்றமாக மாற்றுவதற்கும் அதன் 'முழு பிராந்தியம்' (whole of the region) என்ற அணுகுமுறையை எடுத்துரைத்தது. பாரம்பரியமற்ற பாதுகாப்பு களங்களில் ஒத்துழைப்பின் அவசியத்தை தாய்லாந்து அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும், ஆன்லைன் மோசடியை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை மியான்மர் பட்டியலில் சேர்த்தது. இந்த முன்மொழிவுகள் செப்டம்பர் உச்சிமாநாட்டிற்கு முன்னர் அரசின் தலைவர்களுக்கு முன்வைக்கப்படும்.
இருதரப்பு உறவுகள்
பல நாடுகளுடன் நட்புறவைப் பேணும் இந்தியாவிற்கு BIMSTEC கூடுகை ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது இந்தியாவின் இருதரப்பு உறவுகளுக்கும் நன்மைகளை அளித்தது. இந்த நிகழ்வின் போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பல வெளிநாட்டு அதிகாரிகளைச் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள், போதைப்பொருட்கள் மற்றும் எல்லையை கடக்கும் ஆயுதங்கள் குறித்து மியான்மருடன் இந்தியாவின் கவலைகள் குறித்து அவர் விவாதித்தார். மேலும், மியான்மரில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வங்காளதேச வெளியுறவு அமைச்சருடன் ஒரு சந்திப்பையும் நடத்தியதுடன், தினசரி அத்தியாவசியப் பொருட்களை சீராக வழங்குவதை உறுதி செய்யுமாறும், டீஸ்டா திட்டத்திற்கு (Teesta project) ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த கவலையை எளிதாக்குவதற்கான மற்றொரு படியைக் குறிக்கிறது. நாடுகளின் கூட்டத்தின் முடிவில், வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைகளின் பத்தாண்டின் நிறைவை இந்த ஆண்டுக் குறிக்கிறது. பிம்ஸ்டெக் மீதான கவனம், தேசிய மற்றும் பிராந்திய நல்வாழ்வுக்கான கூட்டு வளர்ச்சியை தொடர்ந்து வளர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளின் வெளிப்பாடாகும். இதனால், புதிய ஆற்றல்கள், வளங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் எதிர்கால ஒத்துழைப்புகளை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊக்குவித்தார்.
வரவிருக்கும் உச்சிமாநாட்டில் இந்த முன்மொழிவுகளில் எத்தனை உச்சக்கட்டத்தை அடைகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் உறுப்பு நாடுகளின் நோக்கம், பிராந்தியத்திற்கான துணிச்சலான பார்வையுடன் முன்னோக்கி நகர்த்துவதில் தெளிவாகத் தெரிகிறது.
ஹர்ஷ் வி. பந்த் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். புது தில்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனில் (ORF) ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கான துணைத் தலைவராகவும் உள்ளார். சோஹினி போஸ் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனில் (ORF) ஒரு Associate Fellow.