முக்கியமான புற்றுநோய் மருந்துகளுக்கான விலைகளைக் குறைத்துள்ள அரசு : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? -அனோனா தத்

 இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மூன்று முக்கியமான புற்றுநோய் மருந்துகளை விலை குறைவானதாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு புற்றுநோயாளிகளுக்கு நிவாரணமாக வந்துள்ளது. இந்த மருந்துகள் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? 


செவ்வாயன்று தனது 2024-25 நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று முக்கியமான புற்றுநோய் மருந்துகளான டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் (trastuzumab deruxtecan), ஓசிமெர்டினிப் (osimertinib) மற்றும் துர்வாலுமாப் (durvalumab) ஆகியவற்றிற்கு சுங்க வரி (customs duty) விலக்குகளை அறிவித்தார். மேலும், நிதிநிலை அறிக்கை அறிவிப்புக்கு முன்பு, இந்த மருந்துகளுக்கான சுங்க வரி சுமார் 10% ஆக இருந்தது.  


இதன் முடிவு, இந்த மருந்துகளை இந்திய நோயாளிகளுக்கு மிகவும் சுலபமாக அணுகக்கூடியதாக மாற்றும். மேலும், புற்றுநோய் சிகிச்சையின் ஒட்டுமொத்த செலவையும் குறைக்கும். 


குறிப்பிடப்பட்டுள்ள, மூன்று மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன? அரசாங்கத்தின் முடிவின் தாக்கம் மற்றும் இந்தியாவின் புற்றுநோய்  விவரம் சில மறைக்கப்பட்டுள்ளன. 


முதலில், விலை குறைக்கப்பட்டுள்ள புற்றுநோய் மருந்துகள் யாவை?


முக்கியமான புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் செல்களை மட்டுமே தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை சாதாரண செல்களைப் பாதிப்படையாமல் செயல்படுகின்றன. அவை புற்றுநோய் உயிரணுக்களில் குறிப்பிட்ட மரபணு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு குறிவைக்கின்றன. அவை வளர்வதற்கு (grow), பிரிவதற்கு (divide) மற்றும் பரவுவதற்கு (spread) உதவுகின்றன.  


இந்த மருந்துகள் சிறந்த விளைவைக் கொண்டுள்ளதுடன், குறைவான பக்கவிளைவுகளையும் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், அவை செல்களை மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பாதிக்கின்றன. பாரம்பரிய கீமோதெரபி மருந்துகளைப் (traditional chemotherapy drug) போலல்லாமல், அவை அனைத்து செல்களையும் அதிகமாகப் பாதிக்கின்றன.  


நோயெதிர்ப்பு சிகிச்சை (immunotherapy) போன்ற புதிய இலக்கானது, புற்றுநோய் சிகிச்சைகள் புற்றுநோயை நேரடியாக தாக்க மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிப்பதன் மூலம் அவை செயல்படுகின்றன. இது நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை கண்டுபிடித்து தாக்க உதவுகிறது.


எப்படி இந்த மூன்று மருந்துகள் வேலை செய்கின்றன?


டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் (Trastuzumab deruxtecan) என்பது ஒரு நோயெதிர்ப்பு இணைப்பு ஆகும். இதன் பொருள் இது இரண்டு பகுதிகளால் ஆனது. முதல் பகுதி ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி (monoclonal antibody) ஆகும். இது மனித ஆன்டிபாடிகளைப் போல செயல்படும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புரதமாகும். இரண்டாம் பாகம் ஆன்டிபாடியில் வேதியியல் முறையில் இணைக்கப்பட்ட மருந்து. இது HER-2 ஏற்பி மூலம் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இந்த ஏற்பி சில மார்பக புற்றுநோய் செல்களின் மேற்பரப்பில் உள்ள புரதமாகும். பரவிய அல்லது அறுவை சிகிச்சை செய்ய முடியாத புற்றுநோய்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 


Trastuzumab deruxtecan இரண்டாவது வரிசை சிகிச்சை. பாரம்பரிய சிகிச்சைகள் தோல்வியுற்றால் இது பயன்படுத்தப்படுகிறது. இது டெய்ச்சி சாங்கியோவால் (Daiichi Sankyo) உருவாக்கப்பட்டது மற்றும் என்ஹெர்டு (Enhertu) என்ற பெயரில் அஸ்ட்ராஜெனெகாவால் (AstraZeneca) விற்பனை செய்யப்படுகிறது.


2019-ம் ஆண்டில், மார்பக புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், 2021-ம் ஆண்டில், சில வகையான இரைப்பை குடல் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து (Food and Drug Administration (FDA)) "திசு-அறியா ஒப்புதல்" (tissue-agnostic approval) பெற்ற முதல் மருந்து இதுவாகும். புற்றுநோய் எங்கிருந்து தொடங்கினாலும், HER-2 ஏற்பியைக் கொண்ட எந்தப் புற்றுநோய்க்கும் சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தலாம்.


செலவு : இந்த மருந்தின் விலை ஒரு குப்பிக்கு சுமார் 1.6 லட்சம் ரூபாய் ஆகும்.


இந்தியாவில் மூன்று புற்றுநோய் மருந்துகளில் ஒசிமெர்டினிப் (Osimertinib) மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகாவால் (AstraZeneca) டாக்ரிசோ (Tagrisso) என சந்தைப்படுத்தப்பட்ட இந்த மருந்து, எபிடெர்மல் வளர்ச்சி காரணி ஏற்பிகளைக் (epidermal growth factor receptors (EGFR)) கொண்ட நுரையீரல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அவை, புற்றுநோயின் வளர்ச்சியில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது. ஒசிமெர்டினிப் புற்றுநோய் உயிரணுக்களில் இந்த ஏற்பிகளைத் தடுக்கிறது. மேலும், புற்றுநோயை வளரவிடாமல் தடுக்கிறது. 


அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்றிய பிறகு அல்லது புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ் ஏற்பட்டால் முதல் வரிசை சிகிச்சையாக மருந்து பரிந்துரைக்கப்படலாம். மருந்து தோல்வியடையும் வரை மற்றும் புற்றுநோய் மீண்டும் முன்னேறத் தொடங்கும் வரை அல்லது கடுமையான நச்சுத்தன்மை ஏற்படும் வரை உட்கொள்ளலாம்.

                                                                                                         

ஃபோர்டிஸ் குருகிராமின் மருத்துவ புற்றுநோயியல் மூத்த இயக்குனர் டாக்டர் அங்கூர் பாஹ்ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "கிடைக்கக்கூடிய பிற சிகிச்சைகளை விட ஒசிமெர்டினிப் உயிர்வாழும் நன்மைகளைக் கொண்டுள்ளது. ஏனெனில், இது புற்றுநோய் நோயாளிகளின் ஆயுளை நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும்". 


புகைபிடிக்காத பெண்களில் 25% முதல் 30% நுரையீரல் புற்றுநோய்களில் ஏற்படும் பிறழ்வை ஒசிமெர்டினிப் (Osimertinib) குறிவைக்கிறது என்றும் அவர் கூறினார்.


விலை : இருப்பினும், மருந்து மிகவும் விலை உயர்ந்தது. பத்து மாத்திரைகளுக்கு 1.5 லட்சம் செலவாகும். மேலும், இவை ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட வேண்டும்.


துர்வாலுமாப் (Durvalumab) ஒரு நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகும். இவை, சில நுரையீரல் புற்றுநோய்கள் (lung cancers), பித்தநீர் பாதை புற்றுநோய்கள் (biliary tract cancers), சிறுநீர்ப்பை புற்றுநோய் (bladder cancer) மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு (liver cancer) சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது பி.டி-எல் 1 புரதங்களுடன் (PD-L1 proteins) தன்னை இணைத்துக் கொள்கிறது. அவை, புற்றுநோய் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ளன. மேலும், நோயெதிர்ப்பு கண்டறிதலில் இருந்து தப்பிக்க உதவுகின்றன. மேலும், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அவற்றைக் கொல்ல அனுமதிக்கிறது.


மருந்து உட்கொண்ட நோயாளிகள் நிவாரணத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களும் நீண்ட காலம் வாழ்ந்தனர். 


விலை : இம்ஃபின்ஸி (Imfinzi) என விற்கப்படும் துர்வாலுமாப் (durvalumab) ஒவ்வொரு 10 மில்லி குப்பிக்கும் சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவாகும். 

 

சுங்க வரி விலக்குகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?


இந்த மருந்துகளுக்கான சுங்க வரி விலக்குகள் புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிதிச் சுமையை குறைக்க உதவும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஒரு புற்றுநோய் நோயாளி, ரூ.12,000 விலை குறைப்பு கூட அதிக ஊட்டச்சத்து மற்றும் புரதச் சத்துக்களை வாங்கவும், சோதனைகள் மற்றும் ஸ்கேன் போன்ற பிற செலவுகளுக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்தவும் உதவும் என்று கூறினார். 

 

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (All India Institute of Medical Sciences (AIIMS)) புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர்,  ”இது அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கை ஆகும். இந்த மருந்துகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வரை செலவாகும். மேலும், செலவில் ஒரு  சிறிய சதவீத குறைவு கூட நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். அவை பாரம்பரிய சிகிச்சையை விட சிறந்த முடிவுகளை அளிக்கின்றன. இந்தியாவில், சுமார் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு ராஸ்டுமாப் டெரக்ஸ்டெக்கான் (rastuzumab deruxtecan), ஓசிமெர்டினிப் (osimertinib) மற்றும் துர்வாலுமாப் (durvalumab) தேவை” என்று கூறினார்.


இந்தியாவில் புற்றுநோய் விவரம் என்ன?


இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய புற்றுநோய் பதிவு தரவுகளின்படி, 2022-ம் ஆண்டில் 14.6 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இது, 2020-ல் 13.9 லட்சமாகவும் இருந்த பதிவு, 2021-ல் 14.2 லட்சமாக உயர்ந்துள்ளது. புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில், 8.08 லட்சம் இறப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-ல் 7.9 லட்சமாகவும், 2020-ல் 7.7 லட்சமாகவும் இருந்தது.


புற்றுநோய் பாதிப்பு பெண்களிடையே அதிகமாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 100,000 மக்கள்தொகைக்கு 103.6 பெண்களுக்கிடையே ஒப்பிடும்போது 94.1 ஆண்களுக்குப் பதிவாகிறது. ஆண்களுக்கு, நுரையீரல் (lung), வாய் (mouth), புரோஸ்டேட் (prostate), நாக்கு (tongue) மற்றும் வயிறு (stomach) ஆகியவை மிகவும் பொதுவான புற்றுநோய்களாகும். பெண்களுக்கு, மார்பகம் (breast), கருப்பை வாய் (cervix), கருப்பை (ovary), கர்ப்பப்பை (uterus) மற்றும் நுரையீரல் (lung) புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவை.


நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு குறைவான விலையில் சிகிச்சைகள் பயனுள்ளதாக இருக்கும். நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். அதேபோல், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய் ஆகும். 


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research (ICMR)) ஆய்வின்படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு அவர்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வு மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பதிவேடுகளின் தரவைப் பயன்படுத்தியது. 68 ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோயை உருவாகும் என்றும், கூடுதலாக, 29 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் எனவும் கண்டறிந்துள்ளது.



Original article:

Share: