முக்கிய அம்சங்கள் :
இந்திய நீதித்துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஷைலஜா சந்திரா குறிப்பிடுவதாவது, வழக்குகளின் நீண்டகால தாமதங்கள் மற்றும் பெரிய தேக்கம் இருப்பது ஆகியவை இதில் அடங்கும். நீதித்துறை வெளிப்புற உதவியைப் பெறவும், அதன் செயல்திறனை மேம்படுத்த புதுமையான தீர்வுகளைப் பின்பற்றவும் வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். அவரது முக்கிய பரிந்துரைகளானவை கீழே குறிப்பிடபட்டுள்ளன.
1. தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் : வழக்கு மேலாண்மை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளை மேம்படுத்த டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துதல்.
2. மாற்று தகராறு தீர்வு (Alternative Dispute Resolution (ADR)) : நீதிமன்றங்கள் மீதான அழுத்தத்தை குறைக்க நடுநிலை வகிக்க மற்றும் நடுவர் போன்ற முறைகளை ஊக்குவித்தல்.
3. நிர்வாக சீர்திருத்தங்கள் : அதிகாரத்துவத்தை குறைப்பதற்கும், வழக்குகளை கையாளுதலை விரைவுபடுத்துவதற்கும் தற்போதைய நிர்வாக செயல்முறைகளை மாற்றுதல்.
4. பொது-தனியார் கூட்டாண்மை : நீதித்துறை அமைப்பிற்கான சிறந்த நடைமுறைகளையும் வளங்களையும் கொண்டு வர தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை அடங்கும்.
தெரிந்த தகவல்கள் பற்றி :
1. டிசம்பர் 2023-ம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம் (Centre for Research and Planning (CRP)) ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை "நீதித்துறையின் நிலை : உள்கட்டமைப்பு, பட்ஜெட், மனித வளங்கள் மற்றும் ICT பற்றிய அறிக்கை" (State of the Judiciary: A Report on Infrastructure, Budgeting, Human Resources, and ICT) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நீதித்துறை அமைப்பு பற்றிய முழுமையான பகுப்பாய்வை வழங்குவதுடன், உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதித்துறை மீது கவனம் செலுத்தப்படுகிறது.
2. மாவட்ட நீதித்துறையில் அனுமதிக்கப்பட்ட 25,081 நீதிபதிகளுக்கு 4,250 நீதிமன்ற அறைகள் பற்றாக்குறையாக உள்ளது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற மாநிலங்களில் தேவையான நீதிமன்ற அறைகளில் 40.78% குறைவாகவும், திரிபுராவில் 35.93% பற்றாக்குறையும் உள்ளது.
3. நீதிபதிகளுக்கான 6,021 குடியிருப்புகளின் பற்றாக்குறையாக உள்ளது என கண்டறியப்பட்டது. டெல்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை 61% பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
4. ஏறக்குறைய 19.7% மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கு தனி கழிப்பறைகள் இல்லை. மேலும், 6.7% மட்டுமே சானிட்டரி நாப்கின் எரியூட்டி இயந்திரங்களைக் (sanitary napkin vending machines) கொண்டுள்ளன. கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போதுமானதாக இல்லை. இதில், குறிப்பாக 30.4% நீதிமன்ற வளாகங்களில் மட்டுமே அவர்களுக்கென தனி கழிவறைகள் உள்ளன.
5. மாவட்ட நீதிமன்றங்களில் 5,300 நீதிபதிகள் பற்றாக்குறையாக உள்ளன. கூடுதலாக, அனுமதிக்கப்பட்ட 1,114 நீதிபதிகளில் 347 நீதிபதிக்கான பணியிடங்கள் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ளன.
6. மாவட்ட நீதித்துறையில் 36.3%, உயர் நீதிமன்றங்களில் 13.4% மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 9.3% பெண்கள் பணிபுரிகின்றனர்.
7. மாவட்ட நீதித்துறையில் 57.4% நீதிமன்ற அறைகளில் மட்டுமே நீதிபதியின் மேசையில் வீடியோ கான்பரன்சிங் கணினிகள் உள்ளன. சிறந்த தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் அவசியத்தை இது காட்டுகிறது.