மூன்று மனுக்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் (Right to Information Acts (RTI)) திருத்தம் செய்வதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், புலனாய்வு பத்திரிகையின் (nvestigative journalism) மீது புதிய சட்டத்தின் தாக்கம் மற்றும் அதைச் செயல்படுத்தும் சட்டப்பூர்வ அமைப்பின் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.
2023-ஆம் ஆண்டு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் ( Digital Personal Data Protection Act (DPDP)) அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று தனித்தனி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர்களின் டிஜிட்டல் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டாலும், அதன் விதிகள் அடிப்படை தகவல் அறியும் உரிமையை (RTI) பலவினப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், புலனாய்வு பத்திரிகையை முடக்குகின்றன மற்றும் மாநில கண்காணிப்பு அதிகாரங்களை விரிவுபடுத்துகின்றன என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றுவதில் முக்கியப் பங்கு வகித்த குடிமை சமூக வலையமைப்பான தேசிய மக்கள் தகவல் உரிமை பிரச்சாரம் (National Campaign for Peoples’ Right to Information (NCPRI)), வெளிப்படைத்தன்மையாக செய்யப்படும் வழக்கறிஞர் வெங்கடேஷ் நாயக் மற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் குழுவான நிருபர்களின் கூட்டு அறக்கட்டளை ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு அறிவிப்பாணையை (notice) அனுப்பி, மார்ச் மாதம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் விசாரணைக்கு பட்டியலிட்டது. இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
தனியுரிமை (Privacy) vs வெளிப்படைத்தன்மை (transparency)
மூன்று மனுதாரர்களும் எழுப்பிய ஒரு முக்கிய வாதம், 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (DPDP) சட்டத்தின் பிரிவு 44(3), பொது அதிகாரிகள் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(j)-ஐ மாற்றுகிறது.
இந்தத் திருத்தத்திற்குமுன், எந்தவொரு பொதுப் பணி அல்லது பொது நலனுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால் அல்லது அதைப் பகிர்வது நியாயமற்ற முறையில் ஒருவரின் தனியுரிமையை பாதிக்கும் என்றால் மட்டுமே, பொது அதிகாரிகள் சட்டத்தின்கீழ் தனிப்பட்ட தகவல்களைப் பகிர மறுப்பு தெரிவிக்க முடியும். திருத்தப்படாத பிரிவு 8(1)(j) பொதுநல விதிவிலக்கையும் கொண்டிருந்தது. இது பொது தகவல் அதிகாரிக்கு (public information officer (PIO)) “பொதுநலனுக்கு அதிகமாக உதவும் தகவல்களைப் பகிரலாம்” என்று திருப்தி அடைந்தால் தனிப்பட்ட தகவல்களைக் வெளியிட அனுமதிக்கிறது.
மாற்றாகக் கொண்டுவரப்பட்ட பிரிவு 8(1)(j) இப்போது "தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்புடைய தகவல்களுக்கு" விலக்கு அளிக்கிறது. பொது நலனை தனியுரிமைக்கான உரிமையுடன் சமநிலைப்படுத்தும் பொது தகவல் அதிகாரிகளின் சட்டப்பூர்வ அதிகாரத்தை இந்தத் திருத்தம் அழிக்கிறது என்று NCPRI மனு கூறுகிறது.
மனுக்களில் பட்டியலிடப்பட்டுள்ள சட்டத்திற்கு என்ன ஆட்சேபனைகள் உள்ளன? நாங்கள் விளக்குகிறோம்.
ஊழல் விசாரணைகள் பெரும்பாலும் சொத்து குறித்த தகவல்கள், ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட கோப்பு குறிப்புகள் போன்ற பதிவுகளைச் சார்ந்துள்ளது என்று Reporters’ Collective குறிப்பிடுகிறது. பொது நலன் சார்ந்த இந்த அம்சத்தை நீக்குவதன் மூலம், பொது நடவடிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு இருந்தாலும், "தனிப்பட்ட" (personal) என்று கருதப்படும் தகவல்களை பொது அதிகாரிகள் மறைக்க புதிய சட்டம் இப்போது அனுமதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். இது "கவனமாக அளவீடு செய்யப்பட்ட தனியுரிமை விலக்கை ஒரு முழுமையான தடையாக" மாற்றுகிறது. இதன் மூலம் சட்டம் ஊழல் செய்த அதிகாரிகளைப் பாதுகாக்கிறது என்று NCPRI மனு வாதிடுகிறது. இது பங்கேற்பு ஜனநாயகத்திற்கு (participatory democracy) ஒரு கடுமையான அடியாகவும், திறந்த மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கொள்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் நாயக்கின் மனு விவரிக்கிறது.
இந்த மூன்று மனுக்களும், அடிப்படை உரிமைகள் (fundamental rights) மீதான எந்தவொரு கட்டுப்பாடும் "விகிதாசார சோதனையை" (proportionality test) பூர்த்தி செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உச்சநீதிமன்றத்தின் 2017-ஆம் ஆண்டு புட்டசாமி தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு அரசு தனது சட்டம் ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதையும், அந்த நோக்கத்தை அடைய மிகக் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட வழியைப் (least restrictive measure) பயன்படுத்துகிறது என்பதையும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சரியான பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
அடிப்படை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கட்டுப்படுத்துவதில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் (Digital Personal Data Protection Act (DPDP)) சட்டம் தோல்வியடைகிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் "பொது நலன் மீறல்" என்பதை தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கான "முழுமையான தடையாக" மாற்றுவதன் மூலம், அரசு கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றத் தவறிவிட்டது என்று NCPRI வாதிடுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் "வெளிப்படையாக தன்னிச்சையானது" (manifestly arbitrary) என்றும், அது பொது நலனைப் ஆரயாமல், முற்றிலும் தெளிவற்ற ஒரு தகவல்களை உருவாக்குகிறது என்று NCPRI மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகை மீதான தாக்கம்
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act (DPDP)) பத்திரிகை சுதந்திரத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை நிருபர்களின் கூட்டு மனு எடுத்துக்காட்டுகிறது. மோசடித் திட்டங்களை விசாரிப்பது அல்லது அரசாங்க பயனாளிகள் குறித்து அறிக்கை அளிப்பது போன்ற தனிநபர்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்மீது "தரவு நம்பகத்தன்மையாளர்கள்" (data fiduciaries) என்று முத்திரை குத்தப்படலாம். சட்டத்தின்கீழ் இந்த வகைப்பாடு, விசாரிக்கப்படும் நபர்களுக்கு அறிவிப்பு வழங்குதல் மற்றும் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுதல் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இந்தத் தேவை புலனாய்வு பத்திரிகைக்கு சாத்தியமற்றது மற்றும் எதிர்மறையானது (counter-productive) என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தரவு தொடர்புடைய நபர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், சட்டத்தின் பிரிவு 12, தரவு நம்பிக்கைக்குரியவரால் அவர்களின் தரவு அழிக்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மனுவில், ஒரு செய்தி அறிக்கை அல்லது கட்டுரை வெளியிடப்பட்ட பிறகு அதைச் சரிபார்க்க இயலாது என்ற வாதம் முன் வைக்கபட்டது.
இந்தச் சட்டத்தின் அதிக அபராதங்கள், ரூ.250 கோடி வரை, மிதமான விளைவை (chilling effect) ஏற்படுத்தும் என்று மனு எச்சரிக்கிறது. இதுபோன்ற கட்டுப்படியாகாத அபராதங்களின் அச்சுறுத்தல், தனிப்பட்ட தரவுகள் சம்பந்தப்பட்ட பொதுநலன் சார்ந்த விவகாரங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதிலிருந்து பத்திரிகையாளர்களைத் தடுக்கும் என்று வாதம் முன் வைக்கபட்டது.
மாநில அதிகாரம் மற்றும் கண்காணிப்பு
நாயக் மற்றும் நிருபர்களின் கூட்டு சவால் போன்ற மனுதாரர்களும் DPDP சட்டத்தின் பிரிவு 36-ஐ சவால் செய்கின்றனர். இது எந்தவொரு தரவு நம்பிக்கையாளரிடமிருந்தும் தகவல்களைக் கேட்பதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த விதி நடைமுறை பாதுகாப்புகள் இல்லாமல் "நியாயமற்ற டிஜிட்டல் தேடல்களை" எளிதாக்குகிறது என்றும், இது "தெளிவற்ற, பரந்த மற்றும் தன்னிச்சையானது" என்றும், அரசாங்கம் தனிநபரின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் தன்னிச்சையாக அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட தரவைப் பெற அனுமதிக்கிறது என்று நிருபர்கள் கூட்டு மனு தனது வாதத்தை முன் வைக்கிறது. பத்திரிகை நோக்கங்களுக்காக விலக்கு இல்லாமல், பிரிவு 36 ஊடக நிறுவனங்கள் பெயர் குறிப்பிடாத ஆதாரங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் தரவை ஒப்படைக்க கட்டாயப்படுத்தக்கூடும் என்றும், இதன் மூலம் தகவல் அளிப்பவர்களைத் தடுக்கும் என்று நிருபர்கள் கூட்டு மனு கூறுகிறது.
DPDP சட்டத்தின் பிரிவு 36-ன் கீழ் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு அல்லது மறு ஆய்வு செய்ய வாய்ப்பு எதுவும் இல்லை" என்று நாயக் வாதிடுகிறார். இது, "தனியார் தரவுகளின்மீது ஒன்றிய அரசின் தன்னிச்சையான மற்றும் அதிகப்படியான துஷ்பிரயோகத்திற்கு இந்த விதி வழிவகுக்கிறது. இது கொள்கை முடிவுகள் மற்றும் தேர்தல் தேர்வுகளை பாதிக்கலாம்" என்று நாயக் எச்சரிக்கிறார்.
தரவு பாதுகாப்பு வாரியத்தின் சுதந்திரம் (Independence of Data Protection Board)
சட்டத்தை அமல்படுத்துவதற்கும் அபராதம் விதிப்பதற்கும் பணிக்கப்பட்ட அமைப்பான இந்திய தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு சுதந்திரம் வழங்காது என்று நாயக் மற்றும் நிருபர்கள் கூட்டு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.
சட்டத்தை செயல்படுத்துவதற்கான புதிதாக அறிவிக்கப்பட்ட விதிகளின்கீழ், வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழு முழுவதுமாக அரசாங்க செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்டுள்ளது.
நியமனச் செயல்பாட்டில் "முழுமையான நிர்வாக ஆதிக்கம்", வாரியம் அரை-நீதித்துறை (quasi-judicial) செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாட்டை மீறுவதாக நாயக்கின் மனு வாதிடுகிறது. அரசு மிகப்பெரிய தரவு சேகரிப்பாளராக இருப்பதால், நிர்வாகத்தால் மட்டுமே நியமிக்கப்பட்ட ஒரு குழு நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த கவலைகளை எழுப்புகிறது. அதன் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறி, நிருபர்களின் கூட்டு மனு தனது வாதத்தை முன் வைக்கிறது.
Original article : Why the new Digital Personal Data Protection Act faces a constitutional challenge in the Supreme Court?. -Vineet Bhalla