கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய  அம்சங்கள்:


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு, "திட்டத்தின் ராஜதந்திர முக்கியத்துவம்" மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  2023-ஆம் ஆண்டு உத்தரவின்படி, திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதியை மறுபரிசீலனை செய்யும் பணியில் உயர் அதிகாரம் கொண்ட குழு (high-powered committee (HPC)) கையாண்ட பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிட்டது.


இந்த மெகா திட்டம் 166 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 130 சதுர கி.மீ வன நிலத்தைத் திருப்பி, ஏறக்குறைய ஒரு மில்லியன் மரங்களை வெட்டி ஒரு பரிமாற்ற துறைமுகம், ஒருங்கிணைந்த நகரம், குடிமை மற்றும் இராணுவ விமான நிலையம் மற்றும் 450-MVA எரிவாயு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை கட்டமைக்கிறது.


2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்கு உள்ளான மூதாதையர் நிலத்தை இழப்பது குறித்து நிக்கோபாரிய சமூகத்தினர் கவலை தெரிவித்த போதிலும், சுற்றுச்சூழல் சேதம் குறித்த அச்சங்கள் இருந்தபோதிலும், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


திட்டத்தின் மறுக்க முடியாத ராஜதந்திர முக்கியத்துவத்தையும், தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல (Island Coastal Regulation Zone (ICRZ)) நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் தீர்ப்பாயம் ஒப்புக்கொண்டது. தீர்ப்பாயம் இந்தப் பிரச்சினையை "சமச்சீர் அணுகுமுறை" (balanced approach) தேவைப்படும் ஒன்றாக வடிவமைத்தது.


          அதன் உத்தரவில், தேசிய பசுமை தீர்ப்பாயம், பவளப்பாறைகளைப் பாதுகாத்தல், திட்ட அனுமதிக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படைத் தரவை நம்பியிருத்தல் மற்றும் திட்ட பாகங்கள் தடைசெய்யப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் வருகிறதா என்பது போன்ற மூன்று முக்கிய கவலைகளை எடுத்துரைத்தது.  2022-ஆம் ஆண்டு திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதியில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் - அதன் தாக்கங்களைக் குறைப்பதற்காக - பூர்த்தி செய்யப்பட்டதா இல்லையா என்பதையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் மதிப்பீடு செய்தது.


திட்டம், தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளுக்குள் (ICRZ) வருகிறதா என்ற பிரச்சினையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்னாள் சுற்றுச்சூழல் செயலாளர் லீனா நந்தன் தலைமையிலான உயர் அதிகாரக் குழுவின் அறிக்கையை நம்பி, அதன் எந்தப் பகுதியும் தடைசெய்யப்பட்ட பகுதியில் வரவில்லை என்று முடிவு செய்தது.


தோல் முதுகு கடல் ஆமை, நிக்கோபார் மெகாபோட், உப்பு நீர் முதலைகள், நண்டு, நிக்கோபார் மக்காக் மற்றும் கிரேட் நிக்கோபார் தீவின் பிற உள்ளூர் பறவை இனங்களைப் பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பசுமை நீதிமன்றம் பதிவு செய்தது.


இந்திய விலங்கியல் ஆய்வு (Zoological Survey of India) மையத்தால் கடந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்களை தீர்ப்பாயம் கணக்கில் எடுத்துக்கொண்டது. மேலும், திட்டப் பகுதிக்குள் எந்த பவளப்பாறையும் வரவில்லை என்றும், தற்போதுள்ள சிதறிய பவளப்பாறைகள் இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் பரிந்துரைகளின்படி இடமாற்றம் செய்யப்படும் என்றும் முடிவு செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


 கிரேட் நிக்கோபார் தீவு (Great Nicobar Island (GNI)) உள்கட்டமைப்பு திட்டம் நிதி ஆயோக்கால் உருவாக்கப்பட்டு 2021-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் சர்வதேச கொள்கலன் பரிமாற்ற முனையம் (international container transshipment terminal,), ஒரு நகரம் மற்றும் பகுதி மேம்பாடு, 450 MVA எரிவாயு மற்றும் சூரிய சக்தி சார்ந்த மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரட்டை பயன்பாட்டு, பொதுமக்கள் மற்றும் இராணுவ விமான நிலையம் போன்றவை திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டம் 166 சதுர கி.மீ பரப்பளவில் விரிவடையும்.


இந்தத் திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகத்தால் (Andaman and Nicobar Islands Integrated Development Corporation (ANIIDCO)) செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கு கொள்கை 2030-ஆம் ஆண்டுடன் ஒத்துப்போகிறது. அமிர்த கால் தொலைநோக்கு பார்வை 2047-ன் கீழ் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக உள்ளது.


910 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட கிரேட் நிக்கோபார் தீவு, 850 சதுர கி.மீ பரப்பளவில் பழங்குடியினர்க்கு வாழ்விடமாக உள்ளது. இதில் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி சமூகங்கள் உள்ளன: ஷோம்பென் இனத்தவர்கள் வேட்டைக்காரர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர்களாக (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நிக்கோபாரீஸ் (Nicobarese) இனத்தவர்கள் தோட்டக்கலை, பன்றி வளர்ப்பு, வேட்டையாடுதல் மற்றும் உணவு தேடுதல் மூலம் வாழ்ந்து வருகிறார்கள். ஓரிரு கிராமங்கள் இடம்பெயர்ந்தாலும், எந்த பழங்குடியினரின் வாழ்விடங்களும் பாதிக்கப்படாது என்று அரசாங்கம் கூறுகிறது.


Original article : What is the Great Nicobar Island Project? -Khushboo Kumari

Share: