பொருளாதாரம் இன்னும் பலரை முறைசாரா வேலைகளில் ஈடுபடுத்துகிறது. இந்த நிலைமை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான இந்தியர்கள் தங்களின் பணத்தை வேலை செய்வதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். நிலம் அல்லது வணிகங்கள் போன்ற விஷயங்களை சொந்தமாக வைத்திருப்பதன் மூலம் அல்ல. உழைக்கும் இந்தியர்களில் 90% பேர் முறைசாரா வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைகள் அதிக பாதுகாப்பு, பயன்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்காது. மேலும், அவை குறைந்த ஊதியத்தை வழங்குகினறன. பெரும்பாலான முறைசாரா தொழிலாளர்கள் தற்காலிக தொழிலாளர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்களாக உள்ளனர். ஆனால், சிலர் வழக்கமான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பொருளாதாரம் பற்றிய செய்திகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த மாற்றங்கள் பெரும்பாலான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுக்குமா என்பது இறுதியில் வேலைச் சந்தையைப் பொறுத்தது. புதிய வேலைகள் உருவாக்கப்படுகிறதா, இந்த வேலைகள் அதிக தரம் வாய்ந்ததாக இருந்தால், ஊதியங்கள் அதிகரிக்கின்றனவா என்பதும் இதில் அடங்கும்.
மேம்பாடுகளில் ஒரு நெருக்கமான பார்வை
சமீபத்தில், 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கி அவ்வப்போது தொழிலாளர் கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey (PLFS)) வருடாந்திர தரவுகளின்படி, முன்னேற்றம் இருப்பதாகத் தெரிகிறது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 2021-22 ஆம் ஆண்டில் 58.35% ஆக உயர்ந்தது. இது, 2017-18 இல் 52.35% ஆக இருந்தது. இந்த அதிகரிப்பு பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களால் ஏற்பட்டது. இது, பல ஆண்டுகளாக தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) குறைந்து வரும் வழக்கமான போக்கிலிருந்து வேறுபட்டது. மேலும், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2017-18 இல் 6.2% ஆக இருந்து 2021-22 இல் 4.2% ஆக குறைந்துள்ளது. இளைஞர் வேலையின்மை விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் 2017-18 இல் 12% முதல் 2021-22 இல் 8.5% வரை, அவையும் குறைந்து வருகின்றன. 2022-23 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய தரவு தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) மற்றும் வேலையின்மை விகிதம் இரண்டிற்கும் ஒரே போக்கையே காட்டுகிறது.
இந்த மேம்பாடுகள், வேலை உருவாக்கம் மற்றும் ஊதிய உயர்வைக் காட்டும். இவை, மாறும் வேலை சந்தையின் அடையாளமா? வேலைகள் மற்றும் வருவாய் வகைகள் எவ்வாறு மாறுகின்றன?. அசோகா பல்கலைக்கழகத்தின் ஜிதேந்திர சிங்கின் சமீபத்தில் ஒரு கட்டுரையில், இந்த கேள்வியை கவனமாக ஆராய்ந்து, சமீபத்திய போக்குகளை நீண்ட காலப் போக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்.
வழக்கமான ஊதியம்/சம்பள வேலை, சாதாரண வேலை மற்றும் சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு வேலை வகைகளை ஆராயும்போது, மாற்றங்களைக் கவனிக்களாம். தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) மேம்பாடுகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவது பெரும்பாலும் சுயதொழில் மூலம் ஏற்படுகிறது. சுயதொழில் செய்பவர்கள், சொந்தக் கணக்குப் பணியாளர்கள், ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்கள், மற்றும் பிறரை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் என மூன்று குழுக்களாக உள்ளனர். இந்தக் குழுக்களை நாம் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்தால், சுயதொழில் அதிகரிப்பு பற்றிய ஒரு கவலைப் போக்கைக் காணலாம். சுயதொழில் செய்பவர்களின் பங்கு, ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 2017-18ல் 3.78% ஆக இருந்து 2021-22ல் 4.57% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், சுயதொழில் வளர்ச்சியின் பெரும்பகுதி ஊதியம் பெறாத குடும்ப ஊழியர்களின் அதிகரிப்பு காரணமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களின் சதவீதம் 26% லிருந்து 31.4% ஆக அதிகரித்துள்ளது.
ஆய்வு நடத்தியதில் ஒவ்வொரு வகை வேலைகளிலும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், பணியமர்த்தப்பட்ட குழுவில் மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, குடும்பத்திற்குச் சொந்தமான சிறு கடையில் உதவுவது போன்ற ஊதியம் பெறாத குடும்ப உழைப்பில் ஏற்பட்டுள்ளது. சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள், ஒரு சிறிய கடையை நடத்தலாம் அல்லது ஒரு வண்டியில் இருந்து உணவு மற்றும் பொருட்களை விற்பனை செய்யலாம், வேலை செய்யும் மக்கள்தொகையில் 35% பேர் உள்ளனர். 2017-18 முதல் 2021-22 வரை பிற வேலை வகைகளில் உள்ளவர்களின் சதவீதம் வழக்கமான ஊதியம்/சம்பளப் பணியாளர்கள், சாதாரண தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் சொந்தக் கணக்குப் பணியாளர்கள் குறைந்துள்ளது. தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வேலைகளின் தரம் மோசமாகி வருவதை இது காட்டுகிறது. சுயதொழில் செய்பவர்களின் துணைக்குழுவின் வளர்ச்சியின் காரணமாக தொழிலாளர் சந்தை ஆற்றல்மிக்கதாக தோன்றுகிறது. இருப்பினும், சுயதொழில் என்பது முறைசாரா வேலைகளின் பெரும்பகுதி மற்றும் நிலையற்றதாக இருப்பதால், இந்தப் போக்கு கவலைக்குரியது.
வருவாய் பற்றிய தரவு வேலை சந்தை பற்றிய கவலைகளை குறைக்காது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில், 2017-18 முதல் 2021-22 வரை சராசரி தினசரி வருவாய் 10 ரூபாய் 2010 விலையில் அதிகரித்துள்ளது. இது தோராயமாக 4% அதிகமாகும். இந்த அதிகரிப்பு கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் காணப்படுகிறது. சராசரி மற்றும் தினசரி வருவாய் ₹10 முதல் ₹14 வரை உயர்கிறது. இருப்பினும், இந்த உயர்வு அனைத்து வகையான வேலைவாய்ப்புகளிலும் ஒரே மாதிரியாக இல்லை. சராசரியாக, ஊதியம் மற்றும் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து, சுயதொழில் செய்பவர்கள், பின்னர் சாதாரண தொழிலாளர்கள். இந்த காலத்தில் சம்பளம் மற்றும் சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் சராசரி மற்றும் தினசரி வருமானம் வளர்ச்சியடையவில்லை. பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது அவை அப்படியே இருந்தன. ஆனால் சாதாரண பணியாளர்களுக்கு 2017-18ல் ஒரு நாளைக்கு ₹162 ஆக இருந்த வருமானம் 2021-22ல் ஒரு நாளைக்கு ₹196 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 20% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புதான் ஒட்டுமொத்த சராசரி வருவாய் உயர்ந்ததற்கு முக்கிய காரணம். இது நேர்மறையானதாகத் தோன்றினாலும், சூழலைக் கருத்தில் கொள்வது அவசியம். மாதத்தின் ஒவ்வொரு நாளும் வேலை செய்தாலும், சாதாரண தொழிலாளர்கள் 2010 விலையில் மாதம் ₹6,000 சம்பாதிப்பார்கள் இது 2021 விலையில் ₹11,520. இந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே உள்ளது. இது கிராமப்புறங்களில் மாதம் ₹4,080 மற்றும் நகர்ப்புறங்களில் மாதம் ₹5,000 2011-12 விலையின் அடிப்படையில்.
சுருக்கமாக, 2017-18 முதல் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) அதிகரிப்பு மற்றும் வேலையின்மை விகிதங்களில் குறைவு ஆகியவை நேர்மறையானதாகத் தோன்றினாலும், ஒரு நெருக்கமான பார்வை சுயதொழில் செய்பவர்கள், குறிப்பாக ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்கள், வேலைவாய்ப்பில் அதிக வளர்ச்சியைக் ஏற்பட்டதைக் காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சுயதொழில் செய்பவர்களுக்கான வருவாய் அதிகம் மேம்படவில்லை. மேலும், வழக்கமான ஊதியம் மற்றும் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் மொத்த வேலைவாய்ப்பு அல்லது சராசரி வருவாயில் தங்கள் பங்கில் உண்மையான அதிகரிப்பு ஏற்படவில்லை. உண்மையில், சம்பளம் பெறும் தொழிலாளர்களில் முதல் 20% பேர் இந்த காலகட்டத்தில் அவர்களின் சராசரி தினசரி வருவாயில் குறைவைக் கண்டனர். இருப்பினும், மொத்த வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கில் சிறிது குறைவு இருந்தபோதிலும், தற்காலிக தொழிலாளர்கள் தங்கள் சராசரி வருவாயில் மிதமான வளர்ச்சியை அடைந்தனர்.
மக்கள்தொகை ஈவுத்தொகையின் (demographic dividend) கட்டம்
இந்த பிரச்சினை இரண்டு முக்கிய காரணங்களுக்காக கவலை அளிக்கிறது. முதலாவதாக, இது வேலை வாய்ப்புகள் மற்றும் வேலை சந்தையில் வருமானத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் மக்களின் நல்வாழ்வை பாதிக்கிறது. இரண்டாவதாக, இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. சொந்த கணக்கு தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் ஊதியம் பெறாத குடும்ப தொழிலாளர்கள், மொத்த வேலையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் ஆவர். இதன் பொருள் பெரும்பாலான உழைக்கும் மக்கள் பொதுவாக அதிக உற்பத்தி இல்லாத வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா தற்போது அதன் மக்கள்தொகை ஈவுத்தொகையை (demographic dividend) அனுபவித்து வருகிறது. இது 20 ஆண்டுகளுக்குள் உச்சத்தை எட்டும் மற்றும் இன்னும் 30 முதல் 35 ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான இந்த முக்கிய நேரத்தில், பொருளாதாரம் அதன் பணியாளர்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதில்லை. தரம் குறைந்த வேலைகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். கூடுதலாக, ஏழை மக்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்க முனைவதால், அவர்களின் மாறாத வருவாய், நுகர்வோர் செலவினங்களால் இயக்கப்படும் பொருளாதாரத்தின் தேவைக்கு நன்றாக இல்லை. குறிப்பாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் முதலீடு தொடர்ந்து குறைந்து வருவதால் இது கவலை அளிக்கிறது. இந்த நிலை ஒரு தீங்கு விளைவிக்கும் சுழற்சிக்கு வழிவகுக்கும்.
மைத்ரீஷ் கட்டக் London School of Economics இல் பொருளாதார பேராசிரியராக உள்ளார். மிருணாளினி ஜா O.P. Jindal Global University இல் பொருளாதாரத்துறையில் உதவி பேராசிரியராக உள்ளார்.