குறைந்தபட்ச ஆதரவுக் கொள்கையுடன் இறக்குமதிக் கொள்கை நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் -அசோக் குலாட்டி , ரித்திகா ஜுனேஜா

 முதலாவதாக, அனைத்து இறக்குமதி வரிகளையும் திடீரென நீக்குவதை விட, படிப்படியாக செய்திருக்கலாம். 

 

இரண்டாவதாக, முக்கிய பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price (MSP)) விட இறக்குமதி செய்யப்பட்ட விலை (landed price) குறைவாக இல்லை என்பதை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 


மூன்றாவதாக, உள்நாட்டு விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே சென்றால், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED)) இடையகப் பங்குகளை உருவாக்ககுறைந்தபட்ச ஆதரவு விலையில் பெரிய அளவிலான கொள்முதலை மேற்கொள்ள வேண்டும்.


 இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) நுகர்வோர் விலை பணவீக்கத்தை அதன் இலக்கு வரம்பான 4±2 சதவீதத்திற்குள் வெற்றிகரமாக வைத்துள்ளது. இது ஒட்டுமொத்த நிதி நிலையை பராமரித்து, முன் எப்பொழுதும் இல்லாத உபரிகளை உருவாக்கி, ஒன்றிய அரசுக்கு 2.11 டிரில்லியன் ரூபாய் குறிப்பிடத்தக்க வருமானத்தை வழங்குகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், இந்தியா அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (7 சதவீதத்திற்கு மேல்) அடைவதை உறுதிசெய்ய,  இந்திய ரிசர்வ் வங்கி  நிதி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கையின் (monetary policy) மூலம் விலைகளைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், உணவுப் பணவீக்கத்தை எதிர்கொள்ள வர்த்தகக் கொள்கைகள் மற்றும் திறந்த சந்தை செயல்பாடுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  உணவு பணவீக்கம்  8 சதவீதமாக உள்ளது. கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இது நுகர்வோருக்கு நன்மை பய்க்கும். ஆனால், விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.  


2023-24-ல் இந்தியாவின் விவசாய இறக்குமதி 8 சதவீதம் குறைந்து 2022-23ல் $35.7 பில்லியனிலிருந்து $32.8  பில்லியனாக குறைந்தது. நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் விவசாய இறக்குமதிக்கான சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் (average annual growth rate (AAGR)) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ( United Progressive Alliance(UPA)) அரசாங்கத்தின் கீழ் 14 சதவீதத்திலிருந்து 2014-15 முதல் 2023-24 வரை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது விவசாயத்தில் அதிக தன்னிறைவுக்கான போக்கைக் குறிக்கிறது. இதைப் புரிந்து கொள்ள, இந்தியாவின் மாறிவரும் விவசாய இறக்குமதி கூடை மற்றும் அதை பாதிக்கும் காரணிகளை ஆராய்வோம்.


2023-24-ஆம் ஆண்டில், விவசாய இறக்குமதியின் மதிப்பு முக்கியமாக குறைந்துள்ளது. ஏனெனில், சமையல் எண்ணெய்களின் விலை 28.5 சதவிகிதம், ஒரு வருடத்தில் 20.8 பில்லியன் டாலரிலிருந்து 14.9 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இருப்பினும், 2022-23 மற்றும் 2023-24 ஆகிய இரண்டிலும் இறக்குமதியின் அளவு சுமார் 15-16 மில்லியன் மெட்ரிக் டன்கள் இருந்தது. இந்தியா வழக்கமாக தனது சமையல் எண்ணெய் நுகர்வில் 55 முதல் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. சமையல் எண்ணெய்களில், பாமாயில் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. அதைத் தொடர்ந்து சோயாபீன் மற்றும் சூரியகாந்தி உள்ளது. சர்வதேச சந்தையில் பாமாயில் விலை குறைந்ததே இறக்குமதி மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம், உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organization (FAO))  தாவர எண்ணெய் துணைக் குறியீடு 2022-23-ல் 168.5 புள்ளிகளிலிருந்து 2023-24-ல் 123.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இது உலகளாவிய விலைகளைக் குறைப்பதைக் குறிக்கிறது மற்றும் 2023-24-ல் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் குறைத்தது. 


இந்தியாவின் விவசாய இறக்குமதிகள் முக்கியமாக சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், சர்க்கரை, மசாலா, முந்திரி மற்றும் பிற பொருட்கள் ஆகும். பருப்பு இறக்குமதி 2016-17-ல்  $4.2 பில்லியனிலிருந்து 2022-23ல் $1.9 பில்லியனாகக் குறைந்துள்ளது. ஆனால், 2023-24ல் திடீரென இருமடங்காக, $3.7 பில்லியனாக இருந்தது. 2016-17-ஆம் ஆண்டில், உள்நாட்டு பருப்பு உற்பத்தி சுமார் 6 மில்லியன் மெட்ரிக் டன்கள் அதிகரித்து, உபரி மற்றும் உள்நாட்டு விலையைக் குறைத்தது. உள்நாட்டு விலையை ஆதரிக்க, இந்திய அரசு பருப்பு, புறா பட்டாணி / துவரம் பருப்பு மற்றும் கொண்டைக்கடலை மீது 30% இறக்குமதி வரியை விதித்தது. பின்னர், கொண்டைக்கடலை மீதான இறக்குமதி வரி 40%-ஆகவும், மார்ச் 2018-க்குள் 60%-ஆகவும் அதிகரித்தது. மஞ்சள்/வெள்ளை பட்டாணிக்கு, 50% வரியும், குறைந்தபட்ச விலையான ரூ. 200/கிலோவாகவும் சேர்க்கப்பட்டது. இந்த வரம்புக்குக் கீழே இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. 


பருப்பு உற்பத்தி மெதுவாக, சுமார் 25-27 மில்லியன் மெட்ரிக் டன்களாக உள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், மெதுவான உள்நாட்டு உற்பத்தியுடன், பருப்பு வகைகளின் உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது. ஏப்ரல் 2024-ல், பருப்பு வகைகளின் பணவீக்கம் 17%-ஆக இருந்தது. அதே சமயம் துர் (tur) 31% பணவீக்கம் இருந்தது. விலையைக் கட்டுப்படுத்த, பருப்பு இறக்குமதியை 2024-25 இறுதி வரை வரியின்றி அரசு அனுமதிக்கிறது. இது விவசாயிகளை பாதிக்கலாம் ஆனால் நுகர்வோருக்கு உதவும்.


உள்நாட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையுடன் இணைந்த பகுத்தறிவு வர்த்தகக் கொள்கை தேவை. திடீரென இறக்குமதி வரிகளை பூஜ்ஜியமாகக் குறைப்பதற்குப் பதிலாக, படிப்படியாகச் செய்யலாம். இறக்குமதி செய்யப்பட்ட விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உள்நாட்டு விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே குறைந்தால், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED)) இடையகப் பங்குகளை உருவாக்க குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்பு வகைகளை வாங்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 


இதே அணுகுமுறை சமையல் எண்ணெய்கள்/எண்ணெய் வித்துக்களுக்கும் பொருந்தும். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் விலை உள்நாட்டு குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே குறையாது என்பதை உறுதி செய்கிறது. தேசிய சமையல் எண்ணெய் -ஆயில் மற்றும் எண்ணெய் பனைக்கான திட்டம்  (National Edible Oil Mission-Oil Palm (NMEO-OP)) மூலம் சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு என்ற பிரதமரின் குறிக்கோளுக்கு இது மிகவும் முக்கியமானது. பாரம்பரிய எண்ணெய் வித்துக்கள் போதாது. பொருத்தமான நிலத்தில் பாமாயிலை ஊக்குவித்தல் அவசியம்.

 

முடிவாக, வர்த்தகக் கொள்கை, குறிப்பாக இறக்குமதி தாராளமயமாக்கல், குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையுடன் ஒத்துப்போக வேண்டும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு இது மிகவும் முக்கியமானது. அவைகளுக்கு குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படும் மற்றும் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கிறது.




Original article:

Share: