மழை உபரியாகப் பொழிகிறது, ஆனால் சீரற்ற விநியோகம் ஒரு கவலையாக உள்ளது -தலையங்கம்.

 இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department(IMD) அதன் முன்கணிப்பு மாதிரிகளை மேம்படுத்த கடுமையாக முயற்சித்தாலும், புவி வெப்பமடைதல் கணிக்க முடியாத காரணியாக உள்ளது. 


ஆசியாவில் பலத்த மழையையும் வெள்ளத்தையும் கொண்டு வரும் லா நினா (La Nina) நிலைமைகள் இப்போது அக்டோபரில் மட்டுமே வெளிப்படும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (Australian Bureau of Meteorology) போன்ற உலகளாவிய வானிலை அமைப்புகளின் சமீபத்திய எச்சரிக்கைகள் துணைக் கண்டத்திற்கு சரியான செய்தி அல்ல. எல் நினோவால் (El Nino) பாதிக்கப்பட்ட 2023 தென்மேற்கு பருவமழை காரணமாக லா நினாவின் வருகை உண்மையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது, இது நீண்ட கால சராசரியில் (long-period average (LPA)) வெறும் 94 சதவீத இயல்பை விட குறைவான மழையை வழங்கியது.


இது காரீஃப் விதைப்பில் (kharif sowing) பின்னடைவுகளை ஏற்படுத்தியது. நீர்த்தேக்க சேமிப்பு குறைவு (depleted reservoir storage) மற்றும் விவசாயத்தில் மந்தமான வளர்ச்சி (depressed growth) 2024 நிதியாண்டில் மொத்த மதிப்பு கூட்டல் 1.4 சதவீதமாக இருந்தது. வேறுபட்ட பருவமழை உணவு விலை பணவீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. இது மத்திய வங்கிக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. லா நினா தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது, இந்த ஆண்டும் பருவமழை ஆங்காங்கே பெய்யுமோ என்ற கவலையை எழுப்புகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department(IMD) ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை நீண்ட கால சராசரியில் (LPA) 106 சதவீதமாக இருக்கும் என்று கணித்தபோது, லா நினாவின் தோற்றம் மற்றும் நடுநிலை இந்தியப் பெருங்கடல் இருமுனையம் (Indian Ocean Dipole (IOD)) நேர்மறையான அளவீடுகளுக்கு மாறுவதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், உலகளாவிய வானிலை அமைப்புகள் இப்போது இந்தியப் பெருங்கடல் இருமுனையம் எதிர்மறையான பகுதிக்கு நழுவக்கூடும் என்று எதிர்பார்க்கின்றன.


இதுவரை ஒட்டுமொத்த பருவமழையும் ஓரளவு சற்று அதிகமாக இருந்தாலும், அவற்றின் இடம் மற்றும் கால விநியோகம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே உள்ளது. ஜூன் மாதம் முழுவதும் இந்தியாவின் பெரும்பகுதி கடுமையான வெப்பநிலையுடன் போராடியதுடன், அதே நேரத்தில் மழையும் பெய்தது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா வறட்சியால் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில், தெற்கு தீபகற்பம் வெள்ளத்தை எதிர்கொண்டது. மத்திய இந்தியாவில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. ஆனால், வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பற்றாக்குறைகள் நீடிக்கின்றன. ஒரு மாத மழைப்பொழிவு சில மணிநேரங்களாக சுருக்கப்பட்ட உள்ளூர் நிகழ்வுகளும் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தப் பருவத்தில் மழையின் மொத்த அளவு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஜூன் கணிப்புக்கு அருகில் முடிவடையும் என்றாலும், அதன் விநியோகம் சீரற்றதாக இருக்கலாம். சீரற்ற பருவமழை காரீப் ஏக்கரில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு அளவை விட வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகம் மற்றும் பாசிப்பயறு, சோளம், கம்பு மற்றும் எள் போன்ற பயிர்கள் பற்றாக்குறையைக் காட்டுகின்றன. குறுகிய கால பயிர்கள் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு உத்திக்கான மாற்றம் கடந்த ஆண்டை விட ராபி பருவம் (rabi season) சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய இப்போது கோரப்படலாம். கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை, இந்த மழைப்பொழிவு முறைகள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்பட்ட நீண்ட தூர கணிப்புகளை விட, பருவமழை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நம்பகமான வழிகாட்டியாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாதாந்திர மற்றும் வாராந்திர வழிகாட்டிகளாக இருப்பதைக் காட்டுகின்றன.


இந்திய வானிலை ஆய்வு மையம் அதன் முன்கணிப்பு மாதிரிகளை மேம்படுத்த முயன்றாலும், புவி வெப்பமடைதல் கணிக்க முடியாத காரணியாகும். ஆஸ்திரேலிய வானிலை நிறுவனம் சமீபத்தில் கடல்-மேற்பரப்பு வெப்பநிலையின் உலகளாவிய வடிவங்கள் வரலாற்று எல் நினோ மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனையத் (Indian Ocean Dipole (IOD)) தரவுகளின் அடிப்படையில் கணிப்புகளை நம்பமுடியாததாக ஆக்கியுள்ளது என்று ஒப்புக்கொண்டது. வானிலையால் ஏற்படும் சவால்களை சமாளிக்க அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விநியோகத் தடையே முக்கியக் காரணம் என்று பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் மத்திய வங்கியின் பங்கு குறைய வேண்டும்.



Original article:

Share:

உக்ரைன், ஒரு பிளவுபட்ட உலகம் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் சவால்கள் - தலையங்கம்

 இந்தியா, அதன் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "பிராந்திய ஒருமைப்பாட்டை" (“territorial integrity”) ஆதரிப்பது வெறும் அறிக்கை அல்ல. ஐரோப்பாவில் இருப்பதைப் போலவே, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைகளை பாதுகாப்பது  முக்கியம். 


குவாட் வெளியுறவு அமைச்சர்களின் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா) சமீபத்திய கூட்டத்தின் (Quad foreign ministers — the Quadrilateral Security Dialogue) கூட்டறிக்கை இப்போது மிகவும் முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதால், இந்தியா தனது இராஜதந்திர உறவுகளை கவனமாக கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேற்கு மற்றும் ரஷ்யா-சீனா இடையே வளர்ந்து வரும் பதட்டங்கள், வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பில் அதன் தாக்கம் பற்றிய நிச்சயமற்ற தன்மைகளுடன், இந்த சமநிலைப்படுத்தும் செயலை இன்னும் கடினமாக்குகிறது.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், இந்தியாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலும் (Line of Actual Control) சீனா மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் வருவதால் குவாட்  (Quad) அமைப்பின் அறிக்கை முக்கியமானது. எந்தவொரு நாடும் மற்றவர்களைக் கட்டுப்படுத்தாத மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்படுகிறது. குவாட் அதன் உறுப்பினர்களுக்கு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பிராந்தியத்திற்கான பொதுவான உத்திகளை உருவாக்கவும் உதவுகிறது.


இந்த அறிக்கை உக்ரைனில் நடந்த போர் மற்றும் அதன் கடுமையான மனிதாபிமான விளைவுகள் குறித்து "ஆழ்ந்த அக்கறையைக்" காட்டியது. சர்வதேச சட்டம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கு அழைப்பு விடுத்தது. "இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு" என்று குறிப்பிடுவது, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணம் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான இந்தியாவின் வழியாகும். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள், இந்தியாவின் அர்ப்பணிப்பைக் காட்டுவதற்காக குவாடுடன் தனது நீண்ட ஈடுபாட்டை எடுத்துரைத்தார். ஆகஸ்ட் மாதம் கியேவுக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. 

இந்தியா, அதன் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. "பிராந்திய ஒருமைப்பாட்டை" (“territorial integrity”) ஆதரிப்பது இந்தியாவிற்கு ஒரு முக்கிய கொள்கையாகும். இந்தியா எப்போதும் அமைதி மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்தொடர்வதில் உறுதியாக உள்ளது. சீனாவுடனான இந்தியாவின் பிரச்சனைகள் வெளிநாட்டின் தலையீடு இல்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்தக் கொள்கைகள் இருந்தபோதிலும், பல நாடுகளுடனான உறவை நிர்வகிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். மீண்டும் அமெரிக்கா அதிபரினால் இந்திய தனது உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். அது ஐரோப்பிய உறவு நிலையை  மாற்றி, சீனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும். தற்போதைய, சூழலில் வெளியுறவு அலுவலகம் நெகிழ்வாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.



Original article:

Share:

கேரள நிலச்சரிவு : இந்தியாவின் சமீபத்திய தீவிர வானிலை நிகழ்வுகள் ஒரு பார்வை -மூலம் ஐனி ஆரிஃப்

 சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு வகையான தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 


காலநிலை மாற்றம் குறித்து சில நிபுணர்களால் குற்றம் சாட்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் முதல் வறட்சி மற்றும் சூறாவளிகள் வரை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தீவிர வானிலை நிலைமைகளைக் கண்டுள்ளது.   


கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


நாட்டின் தீவிர வானிலை நிகழ்வுகளின் விவரங்கள் பின்வருமாறு. 


டெல்லியில் வெயிலின் தாக்கம் மற்றும் வெள்ளம் 


கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால் தலைநகர் டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜூன் மாதத்தில் பெய்த கனமழையால் விமான நிலையத்தின் கூரை இடிந்து விழுந்து, ஜூலை 27 அன்று மூன்று மாணவர்கள் வெள்ளம் சூழ்ந்த அடித்தள வகுப்பறையில் மூழ்கினர். 


மே மாதத்தில், இடியுடன் கூடிய மழை நிதி தலைநகரான (financial capital) மும்பையில் ஒரு விளம்பர பலகை சரிந்து குறைந்தது 14 பேர் இறந்தன. அதே நேரத்தில், ஜூலை மாதத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளமானது போக்குவரத்தை பாதித்தது.    


அசாமில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன

ஜூலை மாதத்தில், பருவகால பருவமழை காரணமாக வடகிழக்கு இந்தியாவின் ஒரு மாநிலமான அசாமில் பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 79 பேர் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். அரிதான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (one-horned rhinoceros) உட்பட 150 க்கும் மேற்பட்ட விலங்குகள் மாநிலத்தின் காசிரங்கா தேசிய பூங்காவில் (Kaziranga National Park) மூழ்கின.


தென்னிந்தியாவில் புயல் 


2023 டிசம்பரில் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையை ஒரு கடுமையான புயல் தாக்கியது. கனமழை மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் இறந்தனர். தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் பெய்த தொடர் மழையால் புறநகர் பகுதிகள், சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்து வெள்ளத்தில் மூழ்கி 31 பேர் உயிரிழந்தனர்.


இமயமலையில் பனிப்பாறை ஏரி (glacial lake) வெடிப்பு 


வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பெய்த கனமழைக்குப் பிறகு 2023 அக்டோபரில் ஒரு இமயமலை பனிப்பாறை ஏரி அதன் கரைகளை உடைத்தது. இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராந்தியத்தின் மிக மோசமான வெள்ளத்தைத் தூண்டியது. இதில் 179 பேர் உயிரிழந்தனர் மற்றும் வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.    


நிலச்சரிவு மின் திட்டங்களை மோசமாக்குகிறது 


பிப்ரவரி 2021-ல் இமயமலை மாநிலமான உத்தரகண்டில் இரண்டாவது மிக உயர்ந்த சிகரத்திலிருந்து 20 கிமீ (12 மைல்) தொலைவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், திடீர் வெள்ளத்தைத் தூண்டியது மற்றும் இரண்டு நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன.


மும்பை அருகே நிலச்சரிவு


ஜூலை 2023-ல் மும்பைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பல வீடுகளைத் தரைமட்டமாக்கியது. இதில், குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏராளமான குடியிருப்பாளர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.    

கேரளாவில் வெள்ளம்

2018 ஆம் ஆண்டில், தென் மாநிலமான கேரளா, ஒரு நூற்றாண்டில் மிக மோசமான வெள்ளத்தை சந்தித்தது. வெள்ளத்தில் குறைந்தது 373 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1.2 மில்லியன் மக்கள் தங்குமிட முகாம்களுக்கு இடம்பெயர்ந்தனர். மாநிலத்தில் வழக்கத்தை விட 40% கூடுதல் மழை பெய்துள்ளது.



Original article:

Share:

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஏன் 'தடை' செய்யப்படுகிறார்கள்? -அனகா ஜெயக்குமார்

 ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகள் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது. எனினும் சிலர் நடுநிலையான அணியாக (neutral banner)  பங்கேற்கின்றனர்.   அதற்குக் காரணம் என்ன ? 


ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ கொடிகளின் கீழ் நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் அதற்கு பதிலாக பிரெஞ்சு மொழியில் தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள் (Athlètes Individuels Neutres(AIN)) எனப்படும் தனி பிரிவின் கீழ் போட்டியிடுகின்றனர்.


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னதாக, "நவீன சர்வதேச ஒலிம்பிக் குழுவின் சில தலைவர்களுக்கு நன்றி, விளையாட்டுகளுக்கு அழைப்பு விடுப்பது சிறந்த விளையாட்டு வீரர்களின் நிபந்தனையற்ற உரிமை அல்ல, ஆனால் ஒரு வகையான சலுகை என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்" என்று கூறினார். அரசியலுக்கு சம்பந்தமில்லாத மக்களுக்கு எதிரான அரசியல் அழுத்தத்திற்கு இந்த ஒலிம்பிக் போட்டிகள் பயன்படுத்தப்படலாம் என்பதை இது காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார். அத்துடன் ஒட்டுமொத்தமான, உண்மையில் இனவாத, இன பாகுபாடு" என்றும் விவரித்தார். 


இந்த நடவடிக்கையின் பின்னணி என்ன? 


ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஏன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது? 


2022 பிப்ரவரி 20 அன்று பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த சில நாட்களுக்குப் பிறகு, 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய உடனேயே சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee (IOC)) ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் தடை விதித்தது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஒரு வாரம் வரை நாடுகள் ஒருவரையொருவர் தாக்கக்கூடாது என்று கூறியது. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த சிறிது நேரத்திலேயே பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


ரஷ்யா தனது பிராந்தியத்தை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதித்ததாகவும் பெலாரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பெலாரஸ் தனது மேற்கு எல்லையை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்கிறது. தெற்கில், இது உக்ரைனின் எல்லையாக உள்ளது.


அக்டோபர் 2023-ல், டோனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஷ்ஜியாவில் உள்ள உக்ரேனிய விளையாட்டு அமைப்புகள் மீது ரஷ்ய ஒலிம்பிக் குழு அதிகாரப்பூர்வமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.  


கோடை மற்றும் குளிர்கால நட்புறவு விளையாட்டுகளை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரஷ்யாவின் சர்வதேச நட்பு சங்கம் (International Friendship Association (IFA)) ஒரு அரசியல் அமைப்பு என்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) சாசனத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) மேற்கோள் காட்டியது. "விளையாட்டு சமூகத்தின் கட்டமைப்பிற்குள் நிகழ்கிறது என்பதை அங்கீகரித்து, ஒலிம்பிக் இயக்கத்திற்குள் உள்ள விளையாட்டு அமைப்புகள் அரசியல் நடுநிலையைப் பயன்படுத்த வேண்டும்" என்று சாசனம் கூறுகிறது. 


செப்டம்பர் 2024-ல் ரஷ்யா தனது நட்பு விளையாட்டுகளை அறிவித்த பின்னர், சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC), ரஷ்ய அரசாங்கம் அதன் பிரதிநிதிகள், தூதர்கள் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளை உலகளவில் அரசாங்கங்களை அணுகுவதன் மூலம் "மிகவும் தீவிரமான இராஜதந்திர தாக்குதலைத் தொடங்கியது" என்று கூறியது. இது "விளையாட்டை அரசியலாக்க ரஷ்ய கூட்டமைப்பின் ஒரு இழிந்த முயற்சி" என்று விவரித்தது.


எவ்வாறாயினும், "அரசியல் நடுநிலைமை" (political neutrality) என்ற கருத்து எந்தவொரு புறநிலை அளவுகோல்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மேலும், அதன் விளக்கத்தில், குறிப்பாக பெரிய அளவிலான உலகளாவிய போட்டிகளில் ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம். கடந்த ஆண்டு சர்வதேச கண்டனங்களை மீறி காசா பகுதியை இராணுவம் ஆக்கிரமித்த இஸ்ரேலைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ பங்கேற்பாளர்களாக உள்ளனர் என்பதையும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 


எனவே, ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து யார் பங்கேற்கலாம்? 


ரஷ்ய மற்றும் பெலாரஷ் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டையோ அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த அமைப்பையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றால், அவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) 2023-ல் அறிவித்தது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தீவிரமாக ஆதரிக்கும் எந்தவொரு விளையாட்டு வீரரும் போட்டியிட முடியாது. 


சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூற்றுப்படி, தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள் (Athlètes Individuels Neutres(AIN)) ரஷ்ய அல்லது பெலாரஷ்ய பாஸ்போர்ட் கொண்ட விளையாட்டு வீரர்கள், அவர்கள் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச கூட்டமைப்புகளின் (International Federations (IF)) தற்போதுள்ள தகுதி அமைப்புகள் மூலம் தகுதி பெற்றவர்கள் ஆவார்.


இந்த நடவடிக்கை விளையாட்டு வீரர்களை போட்டியிடவும் விளையாட்டு வீரர்களாக தங்கள் தரநிலையை மேம்படுத்தவும் அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 32 விளையாட்டு வீரர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்ட நிலையில், தகுதி பெற்ற மேலும் 28 பேர் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். விளையாட்டு வீரர்கள் நடுநிலை கொடியின் (neutral flag) கீழ் போட்டியிடுவார்கள் மற்றும் நடுநிலை சீருடையை அணிவார்கள். அவர்கள் பதக்கம் வென்றால், தங்கள் நாட்டின் தேசிய கீதத்திற்கு பதிலாக ஒரு நடுநிலையான பாடல் இசைக்கப்படும். மேலும், இதற்கு  பார்வையாளர்களும் தங்கள் கொடியை அசைக்க முடியாது. 


இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?


ஆம். 2017-ம் ஆண்டில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (World Anti-Doping Agency (WADA)) 2011 மற்றும் 2014 க்கு இடையில் 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு நிதியுதவி ஊக்கமருந்து திட்டத்தின் மூலம் பயனடைந்த ஒரு பெரிய ஊழலை அறிவித்தது. இதில் ரஷ்யாவின் சோச்சியில் (Sochi) நடந்த 2014 குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களும் இதில் அடங்குவர். சர்வதேச ஒலிம்பிக் குழு பின்னர் தடை விதித்தது. ஆனால், தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் "ரஷ்யாவிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களாக" விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தென் கொரியாவின் பியோங்சாங்கில் (Pyeongchang) நடந்த 2018 குளிர்கால ஒலிம்பிக்கில், 168 ரஷ்யர்கள் சரிபார்ப்பு செயல்முறையில் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 45 பேர் இல்லை. 


2019-ஆம் ஆண்டில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவை தடை செய்ய உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் வாக்களித்தது. ரஷ்யா போட்டிகளுக்கு ஏலம் எடுக்கும் அல்லது போட்டியிடும் உரிமையை இழந்தது மற்றும் அரசாங்க அதிகாரிகள் முக்கிய ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ரஷ்ய ஒலிம்பிக் குழு (Russian Olympic Committee (ROC)) பதாகையின் கீழ் போட்டியிட்டனர்.


சுதந்திரமான விளையாட்டு வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார்களா?


இல்லை. விளையாட்டு வீரர்களை சுதந்திரமான அல்லது நடுநிலை விளையாட்டு வீரர்களாக பங்கேற்க அனுமதித்த வரலாறு ஒலிம்பிக்கிற்கு உண்டு. 


சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்கள் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த 1992 கோடைகால ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியின் கீழ் சுதந்திரமான பங்கேற்பாளர்களாக போட்டியிட்டனர். முன்னாள் சோவியத் நாடுகளில் ஒலிம்பிக் குழுக்கள் இல்லாததால் இது அனுமதிக்கப்பட்டது.


ஒலிம்பிக் சாசனம் மற்றும் குறிப்பாக "நல்ல நிர்வாகம்" தொடர்பான அதன் சட்டங்களுக்கு இணங்கத் தவறியதால், இந்திய ஒலிம்பிக் சங்கம் 2014-ல் சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற மூன்று விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடலாம். பிப்ரவரி 11-ஆம் தேதி இந்திய சங்கம் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், விளையாட்டுகள் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, மூன்று விளையாட்டு வீரர்களில் இருவர் மீதமுள்ள நாட்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுடன் இந்திய கொடியின் கீழ் போட்டியிட முடியும். 


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Olympics at Rio de Janeiro) நடந்த 2016 ஒலிம்பிக்கில், இடம்பெயர்ந்த பிராந்தியங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிட அகதிகள் ஒலிம்பிக் குழுவை (Refugee Olympic Team) உருவாக்க சர்வதேச ஒலிம்பிக் குழு அனுமதித்தது.



Original article:

Share:

பொதுவுடைமை (Socialism) : பொருள், வகைகள், நன்மைகள் மற்றும் தீமைகள்

 பொதுவுடைமை (Socialism), சமத்துவம் அல்லது மிகவும் சமமான சமூகத்தை உருவாக்குவதற்கான அதன் அர்ப்பணிப்புக்காக பாராட்டப்பட்டது. இதை அடைய பொதுவுடைமை (Socialism) எவ்வாறு திட்டமிடுகிறது? இந்த யோசனைக்கு ஏதேனும் விமர்சனங்கள் உள்ளதா?


பொதுவுடைமை (Socialism) என்பது  உற்பத்தி செயல்பாடு சமூகத்தால் கூட்டாக நடத்தப்பட வேண்டும், இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஒரு சிலருக்கு மட்டுப்படுத்தப்படாமல், அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய வேண்டும்.  முதலாளித்துவமானது (Capitalism) கிட்டத்தட்ட பொதுவுடைமை வாதத்திற்கு எதிரானது. மேலும், முதலாளித்துவத்தில்,  பொதுவான செயல்பாடுகளால் உருவாகும் உற்பத்தியை தனிநபர்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறார்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் லாபம் அந்த நபர்களுக்கே செல்கிறது. 


1980-களில், மார்கரெட் தாட்சர் (Margaret Thatcher) போன்ற மேற்கத்திய அரசியல்வாதிகள் பொதுவுடைமை வாதத்திற்கு எதிராகக் கடுமையாகப் பேசினர் மற்றும் சுதந்திர சந்தைகளின் சிறந்த நற்பண்புகளை ஆதரித்தனர். அந்த நாட்களில் பொதுவுடைமை மீண்டும் வராது என உணர்ந்தேன்.    

    

இருப்பினும், ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தடையற்ற சந்தை முதலாளித்துவத்திற்குப் பிறகு, ஸ்டான்போர்ட் கல்வியாளர் வால்டர் ஷீடெல் தனது புத்தகமான தி கிரேட் லெவலர்: கற்காலம் முதல் இருபத்தியோராம் நூற்றாண்டு வரையிலான வன்முறை மற்றும் சமத்துவமின்மையின் வரலாறு  (The Great Leveler: Violence and the History of Inequality from the Stone Age to the Twenty-First Century), உயர் சமத்துவமின்மை பொதுவாக வன்முறை இடையூறுகளில் முடிந்தது என்று பரிந்துரைத்தது.


உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் (World Inequality Lab) வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வறிக்கை, பிரெஞ்சு பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி உட்பட பல ஆசிரியர்களால் எழுதப்பட்டது. இந்தியாவில், 2022-23 ஆம் ஆண்டில் 40.1% செல்வத்தை முதல் 1% பேர் வைத்திருக்கிறார்கள் என்று வாதிடுகிறது. இது அவர்கள் "கோடீஸ்வர இராஜ்ஜியம்" (Billionaire Raj) என்று அழைக்கப்படுவதை உருவாக்கியுள்ளது. இது இங்கிலாந்து ஆட்சியை விட சமமற்றது என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

 

மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கை (Oxfam report), கடந்த பத்தாண்டுகளில் உலகின் முதல் 1 சதவீதம் பேர் தங்கள் செல்வத்தை 42 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளனர். இது உலக மக்கள்தொகையில் கீழ்மட்ட 50 சதவீதத்தினரை விட 34 மடங்கு அதிகமாகும். உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்துக்களில் 0.5 சதவீதத்திற்கும் குறைவான வரி விகிதத்தை செலுத்தி வருவதாக அறிக்கை மேலும் கூறியுள்ளது.


ஜூலையில் சமீபத்தில் நடந்த பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலில் பொதுவுடைமை இடதுசாரிகள் சிறப்பாகச் செயல்பட்டதில் ஆச்சரியம் உண்டா? அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில், பொதுவுடைமை இன்னும் உள்ளது. இதில், அமெரிக்காவில், பெர்னி சாண்டர்ஸ். இங்கிலாந்தில், ஜெர்மி கார்பின் போன்ற இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் சோசலிஸ்டுகள் ஆகும்.


பொதுவுடைமை (Socialism) என்பது எப்போதும் பொருத்தமான கருத்துகளின் தொகுப்பாகும். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ளதைப் போன்ற வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்போது இது குறிப்பாக உண்மை. பொதுவுடைமை வர்க்கத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று சமத்துவத்திற்கான அதன் அர்ப்பணிப்பாகும். இது மிகவும் சமமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பொதுவுடைமை (Socialism) என்பது பல முக்கிய சிந்தனையாளர்கள் இந்த யோசனைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு பெரிய யோசனைகளின் தொகுப்பாகும். 1880-ம் ஆண்டில், ஜெர்மன் சோசலிச தத்துவஞானி ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் (Friedrich Engels) ஒரு முக்கியமான படைப்பான பொதுவுடைமை : கற்பனாவாதமும் விஞ்ஞானமும் (Socialism: Utopian and Scientific) என்று வெளியிட்டார். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானதாகும். 

எங்கெல்ஸின் கூற்றுப்படி, கற்பனாவாத பொதுவுடைமை (Utopian socialism) ஒரு விரும்பத்தகாத குணத்தைக் கொண்டுள்ளது. அது பொதுவுடைமை வர்க்கத்தை விரும்பினாலும், அதை எப்படி அடைவது என்று உண்மையில் அறியாத ஒன்றாக உள்ளது. ஒரு பொதுவுடைமை விவகாரத்தை கொண்டு வர சொத்துடைமை முதலாளித்துவத்தின் தனிநபர்களின் நல்லெண்ணம் மற்றும் இலட்சியவாதத்தை அப்பாவியாக நம்புகிறது. செயிண்ட் சைமன், சார்லஸ் ஃபோரியர் மற்றும் ராபர்ட் ஓவன் ஆகியோரின் கற்பனாவாத சோசலிசத்தை எங்கெல்ஸ் விமர்சித்தார். 

 

மறுபுறம், ஏங்கெல்ஸ் விவரித்தபடி அறிவியல் பொதுவுடைமை ஒரு முழுமையான அறிவியல் புரிதலை அடிப்படையாகக் கொண்டது. இது சமூகத்தின் பொருள் நிலைமைகளை ஆராய்கிறது. சமூகம் கடந்து வந்த வரலாற்றுப் பாதையையும் இது கருதுகிறது.  


இந்த புரிதலில், பொதுவுடைமை வர்க்கத்தை தொழிலாளர் வர்க்க பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே கொண்டு வர முடியும்.  


கார்ல் மார்க்ஸ் (Karl Marx) மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் (Friedrich Engels) அரசு இறுதியில் மறைந்துவிடும் என்ற கருத்தை விவாதித்தனர். இருப்பினும், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து செல்வாக்கு மிக்க பொதுவுடைமை வடிவங்களான ஃபேபியனிசம் (Fabianism) போன்றவை வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தன. அரசின் மூலம் ஒரு சோசலிச சமுதாயத்தை அடைய முடியும் என்று ஃபேபியனிசம் நம்பியது. சட்டம் மூலம் சமூக மாற்றங்களைச் செய்வதற்கான சக்திவாய்ந்த கருவியாக அவர்கள் அரசைக் கண்டனர். 


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசு பொதுவுடைமை (state socialism) பெரிய நலன்புரி அரசுகளுக்கு (welfare states) வழிவகுத்தது. இது முக்கியமாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி மற்றும் பிற மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சிகள் போன்ற சமூக ஜனநாயகக் கட்சிகள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன. 


முற்போக்கான வரிவிதிப்பின் உயர் விகிதங்களை விதிப்பதன் மூலம் நலன்சார்ந்த அரசுகள் உருவாக்கப்பட்டன. இந்த வரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பணம் உயர்தர பொது சேவைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த சேவைகளில் சுகாதாரம், கல்வி, பொது போக்குவரத்து மற்றும் பொது வீடுகள் ஆகியவை அடங்கும். ஸ்வீடன் போன்ற ஒரு ஸ்காண்டிநேவிய நாடு (Scandinavian country) அதன் நலன்சார்ந்த அரசிற்கு நன்கு அறியப்பட்டதாகும். அங்கு மக்கள் அதிக வரிகளை செலுத்துவதைப் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு மிகச் சிறந்த பொது சேவைகள் வழங்கப்படுகின்றன.


மேலும், பொதுவுடைமை என்பது அனைத்து தனியார் சொத்துக்களையும் அகற்றுவது அல்ல. மாறாக, இன்று நாம் காணும் தீவிர மற்றும் நியாயமற்ற ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்க தனியார் சொத்து மற்றும் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.


பொதுவுடைமைக் கருத்து என்னவென்றால், தனியார் சொத்து மற்றும் தடையற்ற சந்தைகள், தங்கள் சொந்த விருப்பத்திற்கு அதிகமாக விட்டுவிட்டால், சமூகத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும். பிரபல பொதுவுடமைமைவாதி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, 1928-ம் ஆண்டில், சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கான அறிவார்ந்த பெண்ணின் கையேடு (The Intelligent Woman’s Guide to Socialism and Capitalism) என்ற புத்தகத்தை தனது மைத்துனருக்கு விளக்கினார். மேலும், ஒரு அத்தியாயத்தில், ஷா, முதலாளித்தும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும் ஒரு காருடன் ஒப்பிட்டார்.


ஆங்கில தத்துவஞானியும் ஒளிபரப்பாளருமான சி.இ.எம். ஜோட்டின் கருத்தானது, பொதுவுடைமை என்பது பலர் அணிந்திருக்கும் தொப்பி போன்றது. அது அதன் வடிவத்தை இழந்துவிட்டது என்று கருத்து தெரிவித்தார்.  


இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பொதுவுடைமை


ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியா போன்ற சோசலிச சிந்தனையாளர்களின் செழுமையான பாரம்பரியம் உள்ள இந்தியாவில், சோசலிசம் ஐரோப்பிய பொதுவுடைமை வர்க்க இழைகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் ஒரு தனித்துவமான உணர்வைக் கொடுக்கிறது. 


பொதுவுடைமை, பொதுவாக பொருள் சார்ந்த கவலைகளில் கவனம் செலுத்துகிறது என்று விமர்சனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்திய சிந்தனையாளர்கள் பெரும்பாலும் அதற்கு ஆன்மீக பரிமாணத்தை சேர்க்கிறார்கள். இதன் விளைவாக, இந்திய பொதுவுடைமை இந்திய தனித்துவத்தில் அதிக கவனம் செலுத்தியது. இது நாட்டின் அசல் குணங்கள் மற்றும் அதை தனித்துவமாக்கும் தனித்துவமான பண்புகளை வலியுறுத்தியது. 


இந்தியா மற்றும் அரபு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் சோசலிச சிந்தனைகள் உருவாகியுள்ளன. அரபு உலகில், இந்தக் கருத்துக்கள் தனித்துவமான பண்புகளைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, சிரிய சிந்தனையாளர் மைக்கேல் அஃப்லாக்கின் கருத்துக்கள் சோசலிச செல்வாக்கைக் கொண்ட அரபு பாத் கட்சிகளுக்கு உத்வேகம் அளித்தன.


1948-ல் இஸ்ரேல் அரசை உருவாக்குவதில் பொதுவுடைமை சியோனிசம் (Socialist Zionism) முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், இஸ்ரேல் இப்போது முதலாளித்துவ வெற்றியுடன் அறியப்படுகிறது.


லத்தீன் அமெரிக்காவில், பொதுவுடைமைக் கருத்துக்கள் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியத்துவத்துடன் இணைந்து, பணக்காரர்களால் உருவாக்கப்பட்ட ஆதிக்கக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட ஏழைகளின் நிலையை மேம்படுத்துவதற்கான அக்கறையான விடுதலை இறையியலை (Liberation Theology) உருவாக்கியது.


இருப்பினும், 1980-களின் பிற்பகுதியில், பெர்லின் சுவர் இடிந்து, பல கிழக்கு ஐரோப்பிய பொதுவுடைமைப் பொருளாதாரங்கள் சரிந்தன. இதன் விளைவாக, சோசலிசம் அதன் நம்பகத்தன்மையை இழந்தது. ருமேனியாவைச் சேர்ந்த நிக்கோலே காசெஸ்கு (Nicolae Cauusescu) போன்ற சர்வாதிகாரிகளின் அத்துமீறல்களுடன் இது இணைக்கப்பட்டது. முதலாளித்துவத்துடன் ஒப்பிடும்போது சோசலிசம் திறமையற்றதாகக் காணப்பட்டது. இது சிறந்த விநியோகத்தையும் தேவையையும் சமநிலைப்படுத்தும் என்று நம்பப்பட்டது. 


ஒரு பொதுவுடைமையான நாட்டில் தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பிக்கும் ஒரு மனிதனைப் பற்றி ஒரு நகைச்சுவை உள்ளது. அவருக்கு, விண்ணப்பித்தப் பின்னர்,  20 ஆண்டுகளுக்குப் பிறகான ஒரு தேதி வழங்கப்பட்டது. அந்த நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தேதியில் காலையில் ஒரு டாக்டருடன் சந்திப்பு இருப்பதாகக் கூறி,  அதிகாரியிடம் மதியம் பணிநேரத்தைக் கோருகிறார். இதனால் அந்த அதிகாரி குழப்பமடைந்தார் என்று விளக்குகிறார்.  


எனவே, பொதுவுடைமை சமூகங்களுக்கு கருத்தில் கொள்ள வேண்டிய சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஏனெனில், பல நுகர்வோர் பொருட்கள் எளிதில் கிடைக்காததால், இந்த சமுகங்களின் வாழ்க்கையை பெரும்பாலும் மந்தமாக மாற்றுகிறது. 


பெர்லின் சுவர் இடிந்து விழுந்தபோது, ​​பொதுவுடைமை கிழக்கு பெர்லினில் வசிப்பவர்கள் மேற்கு பெர்லினர்கள் அனுபவித்த விதமான நுகர்வோர் வாழ்க்கை முறைகளால் திகைத்துப் போனார்கள். உண்மையில், சுவர் இருக்கும் வரை, கிழக்கு ஜெர்மனி இருந்த பொதுவுடைமை வர்க்கத்தின் பெரும் பரப்பில், மேற்கு பெர்லின் முதலாளித்துவத்தின் ஒளிரும் கலங்கரை விளக்கமாக கருதப்பட்டது. 

 

சோசலிசம் அதன் விமர்சகர்களால் மனித நிறுவனங்களின் உள்ளுணர்வை அடக்குவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்த விஷயத்தில் மக்களுக்கு உண்மையில் எந்த ஊக்கமும் இல்லை. 


தாராளமயமாக்கலுக்கு முந்தைய காலத்தில் இந்தியாவை நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு வயதானவர்கள் ராஜ்ஜியத்திற்கு உரிமம் அனுமதி (license-permit raj) பற்றி பேசுகிறார்கள். இதன் விளைவாக, அரசாங்கம் மற்றும் அதிகாரத்துவத்தின் பலத்த கரம் அடிக்கடி திணறும் விதத்தில் உணரப்பட்டது. இந்த குறைபாடுகள் காரணமாக, பொதுவுடைமை வர்க்க சமூகங்கள் பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியின் உயர் விகிதங்களின் சாத்தியத்தைத் தடுப்பதாகக் காணப்படுகின்றன. அதற்கான கடன் பெரும்பாலும் சுதந்திர சந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.  


சோசலிச இந்தியா, தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னர், 1978 இல் பிரபல பொருளாதார நிபுணர் ராஜ் கிருஷ்ணாவால் வகைப்படுத்தப்பட்ட 3-4 சதவீதத்திற்கு இடையே குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் சூழப்பட்டிருந்தது. 

சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்கள் மீண்டும் பொதுவுடைமை வர்க்கத்திற்கு மாறுவதற்கு காரணமாக இருக்கலாம். முதலாளித்துவ தடையற்ற சந்தைகள் (capitalist free markets) பெரிய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்ததால் இது நடக்கிறது. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில், 1980களில் தாட்சரின் கீழ் தனியார்மயமாக்கல் காரணமாக சமூக வீட்டுவசதி (social housing) முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக, வீடுகளின் விலை இப்போது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. இதை வீட்டுச் சந்தையின் தோல்வியாக அவர்கள் கருதுகின்றனர். 



Original article:

Share:

மக்கள்தொகை ஈவுத்தொகையின் (demographic dividend) மற்றொரு பக்கம் : நமது முதியோர்களைப் பராமரிக்க முடியுமா ? -ராம வி பாரு

 இந்தியா ஒரு வயதான சமுதாயமாக மாறுவதால், ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் வயதானவர்களுக்கு சமூக பராமரிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.


இந்திய மக்கள்தொகை பற்றிய பொது விவாதங்கள் பெரும்பாலும் இளைஞர்களின் அதிக வளர்ச்சி விகிதம் மற்றும் “மக்கள்தொகை ஈவுத்தொகையை” (‘demographic dividend’) பயன்படுத்துவதற்கான சவாலில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், அதிகரித்து வரும் ஆயுட்காலம் காரணமாக இந்திய மக்களுக்கு வயதாகி வருகிறது. இந்த மக்கள் தொகை அதிகரிப்பு வயதானவர்களின் சமூக பாதுகாப்பை பாதிக்கிறது. முதியவர்களின் விகிதம் 2011-ல் மக்கள்தொகையில் 8.6%-ல் இருந்து 2050 இல் 20.8%-ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வயது அமைப்பு மற்றும் வயதான அனுபவத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன.


2021-ஆம் ஆண்டில், தென்னிந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் சில வட மாநிலங்களான ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த இடைவெளி 2036-ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிழக்கு மற்றும் தெற்காசிய சமூகங்கள் மேற்கத்திய நாடுகளை விட மிக வேகமாக முதுமை அடைகின்றன. மேற்கு நாடுகளில் வயதானவர்கள் விகிதம் அதிகரிக்க நூறு ஆண்டுகளுக்கு மேல் எடுத்தாலும், தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் 20-30 ஆண்டுகளில் இது நடந்துள்ளது. இந்த விரைவான வயதானது நடுத்தர மற்றும் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், வயதானவர்ளுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் அவர்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்திகிறது. ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இதில் அடங்கும். கூடுதலாக, தனியாக வாழும் குடும்பங்களின் அதிகரிப்பு வயதானவர்களுக்கு  மேலும் சிக்கலை ஏற்படுத்திகிறது. 


பல கிழக்கு ஆசிய நாடுகள் இந்த நடைமுறைகளை ஒப்புக் கொண்டு அதை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளை உருவாக்கியுள்ளன. அவர்கள் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட நிதி முதலீடுகள் மூலம் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை ஒருங்கிணைத்துள்ளனர். மேலும், சமூக மட்டத்தில் இந்த சேவைகளை மேம்படுத்தியுள்ளனர்.


வயதான நபர்களின் தேவைகளுக்காக இந்தியாவில் ஒரே மாதிரியான கொள்கைகள் உருவாக்கப்படவில்லை.  கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் அனைவருக்குமான பொது ஓய்வூதியத் திட்டம் (universal public pension scheme), உடல்நலக் காப்பீடு அல்லது சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. சில உடல்நலக் காப்பீடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியவர்களை பாதுகாப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளன. கிடைக்கக்கூடிய பேரளவு தரவு மற்றும்  குறு  ஆய்வுகள், சேவைகளின் கிடைக்கும் தன்மை, அணுகல்தன்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் வயதானவர்களுக்குத் தேவையான ஆதரவு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள்  இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.


இந்தியாவில் அதிக வயதானவர்களுக்கான கணக்கெடுப்பு (Longitudinal Ageing Survey in India (LASI)), 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நிலை போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் காட்டுகிறது. இருப்பிடம், வகுப்பு, சாதி, பாலினம், வேலை மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக காரணிகள் வயதானவர்களின் நல்வாழ்வை பாதிக்கிறது என்பதையும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. பல வயதானவர்கள், குறிப்பாக இன்னும் முறைசாரா வேலைகளில் பணிபுரிபவர்கள், ஓய்வூதியம் அல்லது பிற வருமான ஆதரவுக்கு தகுதி பெறவில்லை. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வயதானவர்கள் அதிகம் உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள வயதானவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து அதிக ஆதரவைப் பெறுவதால், அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.


ஹெல்பேஜ் இந்தியா அறிக்கை-2024 (Helpage India Report), ‘இந்தியாவில் முதுமை, ஆயத்தம் மற்றும் பராமரிப்பு சவால்களுக்கான பதில்’ (Ageing in India: Exploring Preparedness and Response to Care Challenges) என்ற தலைப்பில், 10 மாநிலங்கள் மற்றும் 20 நகரங்களில் ஆய்வு நடத்தியது.  இந்த ஆய்வில், வயதானவர்களுக்கான நிதிப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரிய இடைவெளிகள் கண்டறியப்பட்டது. கணக்கெடுப்பு அடுக்கு I மற்றும் அடுக்கு II ஆகிய இரண்டு நகரங்களையும் உள்ளடக்கியது. சமூக ஓய்வூதியங்கள் முக்கியமாக நடுத்தர வர்க்க அரசாங்க ஊழியர்களுக்கு பயனளிக்கும். பல வயதானவர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் மற்றும் ஆதரவிற்காக தங்கள் குடும்பங்களை நம்பியுள்ளனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஆயுஷ்மான் பாரத் திட்டம் (Ayushman Bharat Programme) போன்ற மருத்துவக் காப்பீடு திட்டங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவுகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்டம் (Central Government Health Scheme (CGHS)) அல்லது வேலைவாய்ப்பு மாநில காப்பீட்டுத் திட்டம் (Employment State Insurance Scheme (ESIS)) போன்ற பிற திட்டங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்தருகின்றன. மெதுவான செயலாக்கம், விலக்குகள் மற்றும் நிராகரிப்புகள் காரணமாக வயதானவர்கள் பெரும்பாலும் காப்பீட்டு திட்டங்களுக்காக  கோரிக்கைகளுடன் போராடுகிறார்கள்.


இந்தியாவில் அதிக வயதானவர்களுக்கான கணக்கெடுப்பு (Longitudinal Ageing Survey in India (LASI))  மற்றும் ஹெல்ப்பேஜ் இந்தியா அறிக்கை (Helpage India Report) இரண்டும், வயதானவர்கள் பெரும்பாலும் பல தொற்றாத நோய்களால் (Non-Communicable Diseases (NCDs)) பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. மக்கள் வயதாகும்போது, ​​அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பது கடினமாகிறது. அவர்களுக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஆதரவு தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில், குடும்ப அமைப்புகளை மாற்றுவது என்பது பெண்கள் பெரும்பாலும் பராமரிப்பின் சுமையை சுமக்கிறார்கள். வயது வந்த குழந்தைகள் வேலைக்குச் செல்லும்போது, ​​​​வயதானவர்கள் தனியாக வாழ்கின்றனர்.


நடுத்தர-வர்க்க குடும்பங்கள், முதியோர் பராமரிப்பு, செவிலியர் பராமரிப்பு  உள்ளிட்ட உதவிகளை தேவைப்படும்போதும் பெற முடியும். எவ்வாறாயினும், ஓய்வூதியம் பெறும் சமூகங்கள் மற்றும் குடும்பம் மற்றும் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புக்கு வெளியே நீண்ட கால அல்லது வாழ்க்கையின் இறுதிக் கால பராமரிப்புக்கான பொது, தனியார் மற்றும் இலாப நோக்கற்ற ஆதரவை இந்தியா உருவாக்கவில்லை. பணக்காரர்கள் பல்வேறு சுகாதார மற்றும் சமூக சேவைகளுடன் புதிய ஓய்வூதியங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கீழ்-நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு, ஓய்வூதியங்களைப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.


பொதுக் கொள்கையானது நிதிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வயதானவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ள பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்தியாவின் மக்கள்தொகை வயதாகும்போது, ​​ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரிய இடைவெளிகள் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். இந்தியா தனது இளம் மக்கள்தொகையில் இருந்து பயனடைவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வயதானவர்கள் ஆரோக்கியமாக வயதாகுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


எழுத்தாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தின் முன்னாள் பேராசிரியர்.



Original article:

Share:

பிரதமருக்கான ஒரு சட்ட ஆலோசனைக் குழுவின் தேவை எஸ். பாஜ்பாய், அங்கித் கௌசிக்

 நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனைக் குழுக்களின் சட்ட ஆலோசனைகள் அரசிற்கு முக்கியமானதாக இருக்கும். இந்த அறிவுரை சில சட்டங்களின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்த உதவும்.   


தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறாததற்கு காரணம், சட்டச் சிக்கல்களை சரியாகக் கையாளாததன் காரணமாக இருக்கலாம். அரசு சட்ட ஆலோசனை பெறும் விதம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனைக் குழுக்களின் வழக்கமான, தகவலறிந்த உள்ளீடு சில சட்டங்களின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்த உதவும். பொருளாதார ஆலோசனைக் குழுவைப் போன்று (Economic Advisory Council (EAC)) பிரதமருக்கான சட்ட ஆலோசனைக் குழுவை (Legal Advisory Council (LAC)) அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.


சமீபத்திய சட்ட சிக்கல்கள்


அரசாங்கத்தின் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளால் பல முக்கியமான சட்டச் சிக்கல்கள் உருவாகியுள்ளன. உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் திட்டம் வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன், நன்கொடையாளர்களின் தனியுரிமையை வாக்காளர்களின் தகவல் அறியும் உரிமையுடன் சமநிலைப்படுத்துவதற்கான சோதனை நடத்தப்பட்டிருந்தால், சட்டச் சவாலையும் நீதிமன்றத் தீர்ப்பையும் தவிர்த்திருக்கலாம்.


ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) சட்டம் 2016 (Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016) தொடர்பான இதே போன்ற நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை K.S. புட்டசாமி எதிராக யூனியன் ஆஃப் இந்தியா (Supreme Court in K.S. Puttaswamy v. Union of India (2018)) வழக்கு தேவையற்றதாக இருந்திருக்கும். 


பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita), 2023-ன் பிரிவு 106(2) சட்டத்தின் காரணமாக தொழிலார்கள் நடத்திய போராட்டம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். விபத்தில் சிக்கிய எவருக்கும், காவல்துறையில் புகார் அளிக்காமல் அங்கிருந்து தப்பிக்க முயன்றால், அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இந்தச் சட்டம் கூறுகிறது. எந்த சூழ்நிலையிலும் இந்த சட்டம் தங்களை பாதிப்படைய செய்வதாக போக்குவரத்து ஊழியர்கள் கவலைப்பட்டனர். இந்த விதியை முறையாக மாற்றும் வரை அதை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு ஒப்புக்கொண்ட பின்னரே நாடு தழுவிய வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.


சட்ட சிக்கல்கள் மற்றும் பாதிப்புகள் முழுமையாக ஆராயப்படாததால் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதைச் செய்ய, இடைவெளியைக் குறைப்பது முக்கியம். சுதந்திரமான பொதுக் கல்வி நிறுவனங்களான தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், அரசியலமைப்பு ரீதியாக உறுதியான மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்களை உருவாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு உதவுவதற்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் வளங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டின் தேசிய சட்டப் பல்கலைக்கழக தில்லி சட்டம், (National Law University Delhi Act, 2008), பல்கலைக்கழகத்தின் நோக்கத்தில் சட்டம்  மற்றும் நீதித்துறை அமைப்புகள் பற்றிய ஆய்வு மற்றும் பயிற்சிகள் நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வழக்கமான ஆய்வுகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்த நிறுவனங்களில் தங்கள் முதலீடுகளை சிறப்பாகப் பயன்படுத்த உதவும். உதாரணமாக, உள்துறை அமைச்சகம் டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்கான குழுவை (Committee for Reforms in Criminal Laws) அமைத்தது. கூடுதலாக, அனைத்து விதமான சட்டங்களை சரி செய்யும் உரிமைக்கான கட்டமைப்பில் பணியாற்றுவதற்காக ஆசிரியர்களில் ஒருவர் நுகர்வோர் விவகாரக் குழுவிற்கு (onsumer Affairs Committee) பரிந்துரைக்கப்பட்டார். கல்வி நிபுணத்துவம் எவ்வாறு அரசாங்க முயற்சிகளை ஆதரிக்கும் என்பதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.


சவால்களை எதிர்நோக்குதல்


சட்டச் சவால்களைக் கையாள்வதற்கான மற்றொரு வழி, பொருளாதார ஆலோசனைக் குழுவைப் போன்ற சட்ட ஆலோசனைக் குழுவை உருவாக்குவதாகும். இந்த சட்ட ஆலோசனைக் குழு பிரதமரின் அலுவலகத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கும். சட்ட ஆலோசனைக் குழுவின் முக்கியமான பணிகள் இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட சட்ட சிக்கல்களை பகுப்பாய்வு செய்தல், பிரதம மந்திரி கோரும் போது முன்மொழியப்பட்ட சட்டங்களின் சாத்தியமான தாக்கங்களை மதிப்பீடு செய்தல், முக்கியமான தற்போதைய சட்ட சிக்கல்களில் அதன் சொந்த ஆராய்ச்சி நடத்துதல் ஆகியவையாக இருக்க வேண்டும். சட்ட ஆலோசனைக் குழுவானது குற்றவியல் சட்டம், வர்த்தக சட்டம், சர்வதேச சட்டம், வணிகச் சட்டங்கள் மற்றும் வரிவிதிப்புச் சட்டங்கள் போன்ற அரசாங்கங்களால் அடிக்கடி சட்டமியற்றப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்கள், புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள், முக்கிய கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கொண்டு செயல்படலாம். 


சட்ட ஆலோசனைக் குழுவானது இந்திய சட்ட ஆணையத்திலிருந்து (Law Commission of India (LCI)) பல வழிகளில் வேறுபடும். இந்திய சட்ட ஆணையம் நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சட்ட ஆலோசனைக் குழுவானது பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படும். இந்திய சட்ட ஆணையம், ஏற்கனவே உள்ள சட்டங்களில் சில சீர்திருத்தங்களை  மேற்கொள்ள பரிந்துரைக்கிறது.  அரசாங்கத்தால் அமல்படுத்தப்படவிருக்கும் சட்டங்களில் ஏற்படும் பாதிப்புகள், சவால்கள் மற்றும் இடைவெளிகளைக் கணித்து நிவர்த்தி செய்வதை சட்ட ஆலோசனைக் குழு (Legal Advisory Council (LAC)) நோக்கமாகக் கொண்டுள்ளது.  அரசாங்கத்திற்கும் இந்திய சட்ட ஆணையத்திற்கும் இடையே குறைந்த அளவிலான புரிதல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. விரிவான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு தேவைப்படும் பல சட்ட சிக்கல்கள் இருந்தபோதிலும், 22-வது சட்ட ஆணையத்தால் நான்கு அறிக்கைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இந்த ஆணையம் 2020 மற்றும் 2024-க்கு இடையில் செயல்பட்டது. 


இந்திய சட்ட ஆணையம்  முழுமையாகச் செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஏனெனில், அதன் பரிந்துரைகளில் 50% மட்டுமே இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீதி அமைப்பில் உள்ள சட்ட சிக்கல்கள் அவசரமானவை மற்றும் வேறுபட்டவை. இருந்த போதிலும், இந்திய சட்ட ஆணையம்  உருவாக்கப்பட்டதிலிருந்து சராசரியாக ஆண்டுக்கு 4.19 அறிக்கைகளை மட்டுமே தயாரித்துள்ளது.  


சிக்கலான மற்றும் மாறுபட்ட சட்ட நிலப்பரப்பை விரைவாகவும் திறமையாகவும் கையாளக்கூடிய ஒரு மாற்று அமைப்புக்கான தேவை ஏற்பட்டுள்ளது. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கல்வி வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவை (Legal Advisory Council (LAC)) உருவாக்குதல் ஆகியவை சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு உதவலாம். இவை மட்டுமே தீர்வுகள் அல்ல. ஆனால், அவை சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன. 


ஜி.எஸ். பாஜ்பாய், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின்   துணைவேந்தராக உள்ளார். அங்கித் கௌசிக், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share: