2011-ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது, அரசின் திட்டங்களை மக்கள் பெற இயலாத சூழலை உருவாக்குகிறது.
நிர்வாக எல்லைகளை (administrative boundaries) இறுதி செய்வதற்கு ஜூன் 30, 2024 வரையிலான காலக்கெடுவை ஒன்றிய அரசு நீடிக்காததால், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்ட பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் குறைந்தபட்சம் தொடங்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், அந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024-அக்டோபரில் தொடங்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். எல்லைப் பகுதிகளை உறுதிசெய்த பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு களப்பணிக்குத் தயாராக மூன்று மாதங்கள் ஆகும்.
எவ்வாறாயினும், 2024-25 பட்ஜெட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ₹1,309.46 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனது. இது 2021-22 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்ட ₹3,768 கோடியை விட மிகக் குறைவானத் தொகையாகும். இது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடக்காது என்று மறைமுகமாக தெரிவிக்கிறது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும் தாமதமாகிறது. மேலும், அரசாங்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பை பற்றி எந்த ஒரு தகவலையும் முழுமையாக வெளியிடவில்லை.
ஒரு முழுமையான தேவை
மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக நடத்துவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஏனெனில், 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாதது, பெரும்பாலான மக்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் பலன்களை பெற இயலாத சூழலை உருவாக்குகிறது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை செயல்படுத்த முடியாது.
22025-26-ல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக பட்ஜெட்டில் போதுமான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். 2021-மக்கள்தொகை கணக்கெடுப்பை 2026-ல் நடத்த முடியும் என்பதை இது போன்ற நடவடிக்கைகளே உறுதி செயயும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதமாகி வருகிறது. எனவே, 2025-ல் முதல் கட்டமாக வீடுகளின் பட்டியல், வீட்டுக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (National Population Register (NPR)) புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயாராகி வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் நிர்வாகப் பகுதிகளின் பட்டியல்கள். பரிசோதிக்கப்பட்ட வரைவு மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாள்கள். பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் முக்கிய ஊழியர்கள் மொபைல் செயலியை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கவும் மற்றும் கள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளனர்.
சென்னையில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்திற்கு (Census Directorate) நான் சென்றபோது, புதிய தேதி நிர்ணயம் செய்யப்பட்டவுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க அதிகாரிகள் தயாராக இருப்பதைக் கண்டேன். அவர்களுக்கு விரைவான பயிற்சி மட்டுமே தேவை. 2024-25 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ₹1,309.46 கோடியை கணக்கெடுப்பு பகுதிகளை இறுதி செய்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வித்தாளை இறுதி செய்தல், முன்மொழியப்பட்ட டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முக்கியப் பணியாளர்களின் புத்தாக்கப் பயிற்சி போன்ற ஆரம்ப கால நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படலாம்.
2001-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட எண்பத்து நான்காவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் வரை தொகுதிகளை வரையறுப்பதைத் தடுக்கிறது. 2027-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளை எல்லை நிர்ணயத்திற்கு பயன்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான குறிப்பு தேதி அறிவிக்கப்பட வேண்டும். விரைவில், நிர்வாக அலகுகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கான புதிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த காலக்கெடுவை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
தெளிவுப்படுத்தல்கள்
நாட்டில் வாழும் மக்களின் முழுமையான தரவுத்தளத்தை உருவாக்க, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (National Population Register (NPR)) முதன்முதலில் 2010-ல் உருவாக்கப்பட்டது. இதில் கிராமங்கள், பிற கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வீட்டுக் கணக்கெடுப்புக் கட்டம் போன்ற விவரங்களை சேகரித்து, பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றிலிருந்து மாற்றங்களைச் சேர்க்க 2015-ல் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இந்த புதுப்பிப்பு 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தைப் (Citizenship Act) பின்பற்றியது. வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் (கட்டம் 1) போது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு மீண்டும் புதுப்பிக்கப்படும்.
அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேசிய மக்கள்தொகைப் பதிவேடு வரைவில் "தாய்மொழி", "தந்தை மற்றும் தாய் பிறந்த இடம்" மற்றும் "கடைசியாக வசிக்கும் இடம்" போன்ற புதிய கேள்விகள் கேட்கப்பட உள்ளது. இந்தக் கேள்விகள் 2011-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் இடம் பெறவில்லை. சில மாநிலங்கள் மற்றும் குடிமக்கள் குழுக்கள் இந்தப் புதிய கேள்விகளை எதிர்க்கின்றன. ஏனெனில் குடியுரிமை விதிகள் 2003 (Citizenship Rules 2003)-இன் படி தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens (NRC)) உருவாக்குவதற்கான முதல் படி என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) தரவு பயன்படுத்தப்படாது என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கேள்விகளை வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டுமா என்பதை ஒன்றிய முடிவு செய்ய வேண்டும். புதிய அறிவிப்பு காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 2024 வரை தாமதமாகும்.
சாதிகள் பற்றிய தகவல்
சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பொருளாதார நிலைமைகளை நன்கு புரிந்து கொள்ள ஜாதிவாரி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கை அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 23, 2021 அன்று, ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான வழக்கமான தரவுகளுக்கு அப்பாற்பட்டது) திட்டங்களை செயல்படுத்துவது கடினம் மற்றும் நிர்வாக ரீதியாக சவாலானது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியது. அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிகள் குறித்த தகவல்களைச் சேர்ப்பதா என்பதை ஒன்றிய அரசு முடிவு செய்ய வேண்டும்.
என். ராமராவ் ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அட்டவணை) ஆவார்.