மக்கள்தொகை ஈவுத்தொகையின் (demographic dividend) மற்றொரு பக்கம் : நமது முதியோர்களைப் பராமரிக்க முடியுமா ? -ராம வி பாரு

 இந்தியா ஒரு வயதான சமுதாயமாக மாறுவதால், ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் வயதானவர்களுக்கு சமூக பராமரிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.


இந்திய மக்கள்தொகை பற்றிய பொது விவாதங்கள் பெரும்பாலும் இளைஞர்களின் அதிக வளர்ச்சி விகிதம் மற்றும் “மக்கள்தொகை ஈவுத்தொகையை” (‘demographic dividend’) பயன்படுத்துவதற்கான சவாலில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், அதிகரித்து வரும் ஆயுட்காலம் காரணமாக இந்திய மக்களுக்கு வயதாகி வருகிறது. இந்த மக்கள் தொகை அதிகரிப்பு வயதானவர்களின் சமூக பாதுகாப்பை பாதிக்கிறது. முதியவர்களின் விகிதம் 2011-ல் மக்கள்தொகையில் 8.6%-ல் இருந்து 2050 இல் 20.8%-ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வயது அமைப்பு மற்றும் வயதான அனுபவத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன.


2021-ஆம் ஆண்டில், தென்னிந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் சில வட மாநிலங்களான ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் அதிகமாக உள்ளனர். இந்த இடைவெளி 2036-ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிழக்கு மற்றும் தெற்காசிய சமூகங்கள் மேற்கத்திய நாடுகளை விட மிக வேகமாக முதுமை அடைகின்றன. மேற்கு நாடுகளில் வயதானவர்கள் விகிதம் அதிகரிக்க நூறு ஆண்டுகளுக்கு மேல் எடுத்தாலும், தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் 20-30 ஆண்டுகளில் இது நடந்துள்ளது. இந்த விரைவான வயதானது நடுத்தர மற்றும் குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், வயதானவர்ளுக்கு போதுமான ஆதரவு இல்லாததால் அவர்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்திகிறது. ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இதில் அடங்கும். கூடுதலாக, தனியாக வாழும் குடும்பங்களின் அதிகரிப்பு வயதானவர்களுக்கு  மேலும் சிக்கலை ஏற்படுத்திகிறது. 


பல கிழக்கு ஆசிய நாடுகள் இந்த நடைமுறைகளை ஒப்புக் கொண்டு அதை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளை உருவாக்கியுள்ளன. அவர்கள் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் உட்பட நிதி முதலீடுகள் மூலம் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை ஒருங்கிணைத்துள்ளனர். மேலும், சமூக மட்டத்தில் இந்த சேவைகளை மேம்படுத்தியுள்ளனர்.


வயதான நபர்களின் தேவைகளுக்காக இந்தியாவில் ஒரே மாதிரியான கொள்கைகள் உருவாக்கப்படவில்லை.  கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியாவில் அனைவருக்குமான பொது ஓய்வூதியத் திட்டம் (universal public pension scheme), உடல்நலக் காப்பீடு அல்லது சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. சில உடல்நலக் காப்பீடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள முதியவர்களை பாதுகாப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளன. கிடைக்கக்கூடிய பேரளவு தரவு மற்றும்  குறு  ஆய்வுகள், சேவைகளின் கிடைக்கும் தன்மை, அணுகல்தன்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் வயதானவர்களுக்குத் தேவையான ஆதரவு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள்  இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.


இந்தியாவில் அதிக வயதானவர்களுக்கான கணக்கெடுப்பு (Longitudinal Ageing Survey in India (LASI)), 60-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நிலை போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் காட்டுகிறது. இருப்பிடம், வகுப்பு, சாதி, பாலினம், வேலை மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக காரணிகள் வயதானவர்களின் நல்வாழ்வை பாதிக்கிறது என்பதையும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. பல வயதானவர்கள், குறிப்பாக இன்னும் முறைசாரா வேலைகளில் பணிபுரிபவர்கள், ஓய்வூதியம் அல்லது பிற வருமான ஆதரவுக்கு தகுதி பெறவில்லை. நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வயதானவர்கள் அதிகம் உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள வயதானவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து அதிக ஆதரவைப் பெறுவதால், அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.


ஹெல்பேஜ் இந்தியா அறிக்கை-2024 (Helpage India Report), ‘இந்தியாவில் முதுமை, ஆயத்தம் மற்றும் பராமரிப்பு சவால்களுக்கான பதில்’ (Ageing in India: Exploring Preparedness and Response to Care Challenges) என்ற தலைப்பில், 10 மாநிலங்கள் மற்றும் 20 நகரங்களில் ஆய்வு நடத்தியது.  இந்த ஆய்வில், வயதானவர்களுக்கான நிதிப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரிய இடைவெளிகள் கண்டறியப்பட்டது. கணக்கெடுப்பு அடுக்கு I மற்றும் அடுக்கு II ஆகிய இரண்டு நகரங்களையும் உள்ளடக்கியது. சமூக ஓய்வூதியங்கள் முக்கியமாக நடுத்தர வர்க்க அரசாங்க ஊழியர்களுக்கு பயனளிக்கும். பல வயதானவர்கள் நிதி ரீதியாக பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் மற்றும் ஆதரவிற்காக தங்கள் குடும்பங்களை நம்பியுள்ளனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


ஆயுஷ்மான் பாரத் திட்டம் (Ayushman Bharat Programme) போன்ற மருத்துவக் காப்பீடு திட்டங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவுகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத் திட்டம் (Central Government Health Scheme (CGHS)) அல்லது வேலைவாய்ப்பு மாநில காப்பீட்டுத் திட்டம் (Employment State Insurance Scheme (ESIS)) போன்ற பிற திட்டங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்தருகின்றன. மெதுவான செயலாக்கம், விலக்குகள் மற்றும் நிராகரிப்புகள் காரணமாக வயதானவர்கள் பெரும்பாலும் காப்பீட்டு திட்டங்களுக்காக  கோரிக்கைகளுடன் போராடுகிறார்கள்.


இந்தியாவில் அதிக வயதானவர்களுக்கான கணக்கெடுப்பு (Longitudinal Ageing Survey in India (LASI))  மற்றும் ஹெல்ப்பேஜ் இந்தியா அறிக்கை (Helpage India Report) இரண்டும், வயதானவர்கள் பெரும்பாலும் பல தொற்றாத நோய்களால் (Non-Communicable Diseases (NCDs)) பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. மக்கள் வயதாகும்போது, ​​அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பது கடினமாகிறது. அவர்களுக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஆதரவு தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களால் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில், குடும்ப அமைப்புகளை மாற்றுவது என்பது பெண்கள் பெரும்பாலும் பராமரிப்பின் சுமையை சுமக்கிறார்கள். வயது வந்த குழந்தைகள் வேலைக்குச் செல்லும்போது, ​​​​வயதானவர்கள் தனியாக வாழ்கின்றனர்.


நடுத்தர-வர்க்க குடும்பங்கள், முதியோர் பராமரிப்பு, செவிலியர் பராமரிப்பு  உள்ளிட்ட உதவிகளை தேவைப்படும்போதும் பெற முடியும். எவ்வாறாயினும், ஓய்வூதியம் பெறும் சமூகங்கள் மற்றும் குடும்பம் மற்றும் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புக்கு வெளியே நீண்ட கால அல்லது வாழ்க்கையின் இறுதிக் கால பராமரிப்புக்கான பொது, தனியார் மற்றும் இலாப நோக்கற்ற ஆதரவை இந்தியா உருவாக்கவில்லை. பணக்காரர்கள் பல்வேறு சுகாதார மற்றும் சமூக சேவைகளுடன் புதிய ஓய்வூதியங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கீழ்-நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு, ஓய்வூதியங்களைப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.


பொதுக் கொள்கையானது நிதிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வயதானவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் உள்ள பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்தியாவின் மக்கள்தொகை வயதாகும்போது, ​​ஓய்வூதியங்கள், சுகாதார சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரிய இடைவெளிகள் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். இந்தியா தனது இளம் மக்கள்தொகையில் இருந்து பயனடைவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வயதானவர்கள் ஆரோக்கியமாக வயதாகுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


எழுத்தாளர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தின் முன்னாள் பேராசிரியர்.



Original article:

Share: