மனிதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளால் உலகம் காலநிலை அவசரத்தை எதிர்கொள்கிறது என்று சான்றுகள் காட்டுகின்றன. இந்த சூழ்நிலையில், மிகப்பெரிய கார்பன் தடம் கொண்ட பெரிய விளையாட்டு நிகழ்வுகள், நம்மால் வாங்க முடியாத வளங்களை வீணடிப்பதாகத் தோன்றலாம்.
பாரிஸ் 2024-ஒலிம்பிக் போட்டி பசுமையான விளையாட்டுப் போட்டியாக அமைகிறது. ஒலிம்பிக்கின் கரிம உமிழ்வை பாதியாக குறைக்க விளையாட்டு ஏற்பாட்டுக் குழு உறுதியளித்துள்ளது – டோக்கியோ 2020, ரியோ 2016 மற்றும் லண்டன் 2012-ல் தலா 3.5 மில்லியன் டன்களில் இருந்து இந்த முறை 1.75 டன்னாக குறைக்க இருப்பதாக உறுதியளித்துள்ளது.
அனைத்து ஆதாரங்களும் கிரகங்கள் காலநிலை அவசரத்தை எதிர்கொள்கிறது என்பதைக் ஆய்வுகள் காட்டுகிறன. பசுமை இல்ல வாயுக்களின் (greenhouse gasses (GHG)) மனித உமிழ்வுகளால் இந்த அவசரநிலையை எதிர்கொள்கிறது. இந்த சூழ்நிலையில், பெரிய விளையாட்டு நிகழ்வுகள் பாரிய கரியமில தடம் (massive carbon footprint) உள்ளது. இந்த நிகழ்வுகள் மனிதனால் வாங்க முடியாத வளங்களை வீணடிப்பது போன்ற சூழலை உருவாக்கலாம். அதே நேரத்தில், இத்தகைய நிகழ்வுகள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உதவும். டொராண்டோ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு சூழலியல் உதவிப் பேராசிரியரும், விளையாட்டு சூழலியல் குழுமத்தின் நிறுவனர்-தொழில்துறைத் தலைவருமான மேடலின் ஓர் “ஒலிம்பிக் கேம்ஸ் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பை போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு பெரிய முதலீடுகள் தேவைப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி செயல்பட வேண்டும்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகள் மிகப் பெரிய கரிமத் தடயங்களை சிறப்பாகக் குறைக்க வேண்டும். போட்டி நடத்துவதற்காக செய்யப்பட்ட இடங்களில் நிலையான மாற்றங்கள் மற்றும் விரைவுபடுத்துவதற்கான வழிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். இது காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் உலகிற்கு அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முக்கியமானது என்று மேடலின் ஓர் கூறினார். இந்த சூழலில், 2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி மாற்றத்திற்கான ஒரு அறிகுறியாக இருக்கும் என்று உறுதியாகிறது.
பாரிஸ் 2024-ன் காலநிலை முயற்சிகள்
பாரிஸ் 2024-ஒலிம்பிக் போட்டி முக்கியமாக புவிவெப்ப மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தும். நிலையை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உணவு: பாரிஸ் 2024-ஒலிம்பிக் போட்டி தாவர அடிப்படையிலான, உள்ளூர் மற்றும் நிலையான உணவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, இறைச்சி மற்றும் பால் தொழில்கள் உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 18% ஏற்படுவதாக மதிப்பிடுகிறது. விளையாட்டுக்காக கட்டப்பட்ட உணவு தொடர்பான அனைத்து உள்கட்டமைப்புகளும் ஒலிம்பிக்கிற்கு பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும்.
போக்குவரத்து: பாரிஸில் உள்ள பெரும்பாலான ஒலிம்பிக் மைதானங்கள் பொதுப் போக்குவரத்து மூலம் எளிதில் சென்றடையலாம். சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சேவைகள் வழங்கப்படும். பாரிஸ் 1,000 கிமீ மிதிவண்டிப் (சைக்கிள்) பாதைகளை உருவாக்கியுள்ளது மற்றும் விளையாட்டுகளின் போது 3,000 பணம் செலுத்துபவர்களுக்கு மிதிவண்டிகளை வாடகைக்கு வழங்கும்.
கட்டுமானம்: எட்டு புதிய அரங்குகளை கட்டிய லண்டன் மற்றும் 11 கட்டிடங்களை கட்டிய டோக்கியோ போல் இல்லாமல், பாரிஸ் அதன் 95% நிகழ்வுகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டிடங்கள் அல்லது தற்காலிக கட்டமைப்புகளை பயன்படுத்தும். Saint-Denis-ல் உள்ள புதிய நீர்வாழ் மையம் சூரிய சக்தியில் இயங்கும் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட, சூழல் நட்பு பொருட்களால் உருவாக்கப்படும். கட்டுமானத் தொழில் பசுமை இல்ல வாயுக்களின் முக்கிய உமிழ்வு ஆகும். இது உலகளாவிய உமிழ்வுகளில் 37% ஆகும்.
ஏற்பாடுகள்: பாரிஸில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில், திட்டமிட்டபடி குளிரூட்டிகளுக்குப் பதிலாக விளையாட்டு வீரர்களுக்காக 2,500 தற்காலிக குளிரூட்டும் அலகுகளை நிறுவுவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். இருப்பினும், விளையாட்டு வீரர்களின் தங்குமிடங்கள் மிக முக்கியமானவை. அவற்றின் மெத்தைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட மீன்பிடி வலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மேலும், படுக்கைவிரிப்புகள் வலுவூட்டப்பட்ட அட்டைப் பெட்டியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான தளவாடங்கள் வாடகைக்கு விடப்பட்டு, விளையாட்டுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும். ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள 2,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு வீடுகளாக மாற்றப்படும்.
முற்றிலும் சூழல் நட்பு இல்லை
ஒலிம்பிக்கில் 15,000 விளையாட்டு வீரர்கள், 45,000 தன்னார்வலர்கள் மற்றும் 26,000 ஊடக வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள். ஒலிம்பிக் போட்டிகளின் போது 10-மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறைய விமானப் பயணம், நிறைய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பாரிஸ்-2024 ஒலிம்பிக் போட்டி குறைந்த வாயு தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அது கார்பன் நேர்மறை” (‘carbon positive’) என்று கூறுவது உண்மைக்கு மாறானது. ஏனெனில் இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மேடலின் ஓர் (Madeleine Orr) தனது புத்தகமான காலநிலை மாற்றம் விளையாட்டை எப்படி மாற்றுகிறது (Warming Up: How Climate Change is Changing Sport) என்ற புத்தகத்தில் எழுதினார்.
பாரிஸ் 2024-ன் அமைப்பாளர்கள் கார்பன் உமிழ்வைத் தவிர்ப்பதற்கு ஒரு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இது விளையாட்டுகளில் இருந்து தவிர்க்க முடியாத உமிழ்வை ஈடுசெய்யும் நோக்கத்தில் உள்ளது. மரங்களை நடுதல் அல்லது காடுகளை மறுசீரமைத்தல் போன்ற திட்டங்களை ஆதரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதங்களுக்கு ஈடுசெய்வது அடங்கும்.
இருப்பினும், பல வல்லுநர்கள் இந்த நடவடிக்கையை ஈடுசெய்தல் "பசுமைக் கண்துடைப்பு" (“greenwashing”) என்று விமர்சிக்கின்றனர். காலநிலை ஆர்வலர் ஹர்ஜீத் சிங், புதைபடிவ எரிபொருள் பரவல் அல்லாத ஒப்பந்த முன்முயற்சியில், ஈடுசெய்தல் பெரும்பாலும் "கார்பன் நடுநிலை செய்தல்" (‘carbon neutral’) என்ற தவறான உணர்வை வழங்குகிறது என்கிறார். பல ஈடுசெய்தல் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை அல்லது கண்காணிக்கப்படவில்லை. உமிழ்வை ஈடுசெய்வதற்குப் பதிலாக உண்மையான குறைப்புக்கள் தேவை என்று அவர் வாதிடுகிறார்.
ஆயினும்கூட, பாரிஸ் 2024-ஒலிம்பிக் போட்டி இன்னும் வரலாற்றில் காலநிலைக்கு ஏற்ற ஒலிம்பிக் போட்டியாக நினைவுகூரப்படும். மேலும், எதிர்கால முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்கும். மீண்டும் பயன்படுத்த கூடிய பொருட்களைப் பயன்படுத்துதல், பொதுப் போக்குவரத்து மற்றும் சைக்கிள் பாதைகளை மேம்படுத்துதல் போன்ற விளையாட்டுகளின் மேம்பாடுகள் "அனைத்தும் பாரிஸ் மக்களுக்கு நீண்டகால நன்மைகளை வழங்கும்" என்று மேடலின் ஓர் (Madeleine Orr) குறிப்பிடுகிறார்.