இந்தியாவுக்கு ஒரு சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை முகமை தேவை -சவுமியா சுவாமிநாதன், கல்பனா பாலகிருஷ்ணன், விஜய் சங்கர் பாலகிருஷ்ணன்

 தற்போது காலநிலை, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவிடம் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு இல்லை. இது போன்ற அமைப்பை உருவாக்குவது  பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.


CoP 2024 மாநாடு (COP 29) அஜர்பைஜானின் பாகுவில் இன்று முடிவடைகிறது. வளரும் நாடுகளின் உலகளாவிய குரலாக, வளர்ந்த நாடுகளிடமிருந்து லட்சிய காலநிலை தணிப்பு நிதியுதவிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும். அதே நேரத்தில், காற்று, நீர் மற்றும் நிலத்தில் மாசுபாடு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உமிழ்வு இடைவெளி அறிக்கை 2024, இந்தியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டைவிட 6% அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார முயற்சிகளில் இந்தியா ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.


ஒரு தேசமாக, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது காலநிலை, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை தெளிவாக்குகிறது. இருப்பினும், இந்த சிக்கல்களை ஒன்றாக தீர்க்கும் திறன் குறைவாக உள்ளது. இந்தியா ஒரு சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை முகமையை (environmental health regulatory agency (EHRA)) உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு மாசு கட்டுப்பாடு மற்றும் சுகாதார அபாயங்களைக் குறைத்தல் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த முடியும்.


ஒருங்கிணைப்பின் அவசரம்


இந்தியா தீவிரமான சுற்றுச்சூழல் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. கிராமம் மற்றும் நகர்ப்புறம் என பல்வேறு மாநிலங்களில் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் காற்று, நீர் மற்றும் மண் மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஆரோக்கியத்தில் காட்டுகின்றன. இந்த மாசுபாடுகள் பல தொற்றாத நோய்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு, குறிப்பாக பார்ட்டிகுலேட் மேட்டர் 2.5  (PM2.5), ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது சுவாச இருதய மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களுடன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பத்தின் விளைவுகள், குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இத்தகைய மாசுபாட்டின் மற்றொரு விளைவு மனநலக் பிரச்சனைகள். இந்த உடல்நல அபாயங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அதிகம். குழந்தைகள், முதியவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


இந்தியாவின் தற்போதைய சுற்றுச்சூழல் நிர்வாக மாதிரி ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)) மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) ஆகியவற்றின் முயற்சிகளை இது உருவாக்க வேண்டும். ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாசு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துகிறது. அதே, நேரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் கொள்கைகளை கையாளுகிறது மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare (MoHFW)) ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு மற்றும் மேலாண்மையை நிர்வகிக்கிறது. சுற்றுச்சூழல் கண்காணிப்பு, சுகாதார தாக்க மதிப்பீடுகள் மற்றும் உமிழ்வு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு இடைவெளி உள்ளது. இந்த அமைச்சகங்களுக்கிடையே தரவுப் பகிர்வு இல்லாததே இதற்குக் காரணம்.


சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பால் (EHRA) சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தரவை ஒருங்கிணைக்க முடியும். இது கொள்கை வகுப்பாளர்களுக்கு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை மிகவும் திறம்பட கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் மற்றும் குறைக்கவும் உதவும். இது பல்வேறு துறைகளுக்கு இடையே மிகவும் தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.


இந்தியாவை ஊக்குவிக்கும் உதாரணங்கள் நிறைய உள்ளன. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (Environmental Protection Agency (EPA)), ஜெர்மனியின் கூட்டுறவு  சுற்றுச்சூழல் அமைப்பு (Germany’s Federal Environment Agency (UBA)), மற்றும் ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் (Japan’s Ministry of the Environment (MOE)) ஆகியவை சுற்றுச்சூழல் நிர்வாகத்தை பொது சுகாதாரப் பாதுகாப்போடு இணைக்கும் வலுவான அமைப்புகளைக் கொண்டுள்ளன


சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) பல பகுதிகளை உள்ளடக்கியது. இது காற்று மற்றும் நீரின் தரத்தை ஒழுங்குபடுத்துகிறது, கழிவுகளை நிர்வகிக்கிறது மற்றும் நச்சுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது. வலுவான செயல்பாடுகளுடன், ஆரோக்கியத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அறிவியல் மதிப்பீடுகளையும் EPA பயன்படுத்துகிறது. ஜெர்மனியின் கூட்டுறவு சுற்றுச்சூழல் அமைப்பு (UBA) சுற்றுச்சூழல் கொள்கையில் கவனம் செலுத்துகிறது. இது காற்று, நீர் மற்றும் கழிவு கட்டுப்பாடுகளை நிர்வகிக்கிறது. UBA நிலையான ஆற்றல் மற்றும் காலநிலை முயற்சிகளையும் ஆதரிக்கிறது. ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOE) மாசுபாடு, இரசாயன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும், மாசுக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தவும், நகர்ப்புற மாசு மற்றும் கதிர்வீச்சுப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் சுகாதார மற்றும் அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் அமைச்சகம் செயல்படுகிறது.


உலகளாவிய முகமைகளில், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பு அவர்களின் வழக்கமான செயல்பாடுகளின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு (EHRA) போன்ற ஒரு அமைப்பை உருவாக்குவது அனைத்து வகையான மாசுபாட்டிற்கும் நாடு ஒரு ஒருங்கிணைந்த பலனை அளிக்கும். இது பொறுப்புணர்வு பொறிமுறைகளை ஊக்குவிக்கவும் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் முடியும். இது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் தீர்வு காணும் சிறந்த நடைமுறைகளை இந்தியா பின்பற்ற உதவும்.


தரவு தேவை, ஆதாரம் சார்ந்த கட்டமைப்பு


பயனுள்ள ஒழுங்குமுறை, சூழல் சார்ந்த தரவைச் சார்ந்துள்ளது. கொள்கைகளுக்கான வலுவான ஆதாரத் தளத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் சுகாதார விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க உலகளாவிய நிதி முதலீடு செய்யப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகள் சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சிக்கு முக்கிய ஆதரவை வழங்குகின்றன. இருப்பினும், நடைமுறைக் கொள்கைகளை உருவாக்க இந்தத் தரவைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் ஒரு மைய அமைப்பு இல்லாமல் அவற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது.


அறிவியல் அடிப்படையிலான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க இந்தியாவுக்கு சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு உதவும். மோசமான காற்றின் தரம், பூச்சிகளால் பரவும் நோய்கள், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், கன உலோகங்கள், மாறிவரும் நில பயன்பாடு மற்றும் ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் போன்ற இந்தியாவின் தனித்துவமான சுற்றுச்சூழல் சுகாதார சவால்கள் பற்றிய ஆய்வுகளை இது ஆதரிக்கும். நகர்ப்புற மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல் போன்ற முக்கிய திட்டங்களில் சுகாதார தாக்க மதிப்பீடுகளை (Integrating health impact assessments (HIAs)) சேர்ப்பதன் மூலம், முடிவெடுப்பவர்கள், அவை வளரும் முன் சுகாதார அபாயங்களைப் கண்டறிந்து குறைக்க உதவும்.

சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கலாம் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். எவ்வாறாயினும், ஒரு சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு ஆனது புதுமைகளை ஊக்குவிக்கும், பசுமையான வேலைகளை உருவாக்க மற்றும் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை ஆதரிக்கும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க EPA ஆனது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான விவசாயம் மற்றும் மாசு தடுப்பு ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க உதவுகிறது. அதே நேரத்தில் ஆயுட்காலத்தை மேம்படுத்துகிறது.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழல் ஆரோக்கியத்துடன் முரண்பட வேண்டியதில்லை. தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் பொது சுகாதார பிரச்சாரங்களை ஊக்குவிப்பது வணிகங்களை தூய்மையான தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஊக்குவிக்கும். சுற்றுச்சூழல் சுகாதார இலக்குகளை பொருளாதாரக் கொள்கைகளுடன் சீரமைக்கும் கொள்கைகளை சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பால் உருவாக்க முடியும். சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் நிலையான வளர்ச்சிக்கு இது உதவும்.


சுற்றுச்சூழல் சுகாதாரத் திட்டங்களின் வெற்றிக்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. சுற்றுச்சூழல் சுகாதார அபாயங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதில் சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சுத்தமான காற்று, நீர் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நிலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க இது சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளை பொறுப்புணர்வு குடிமக்கள் முயற்சிகள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் முக்கியம். இந்த முயற்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஆதரவளிப்பதிலும் தகவல்தொடர்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு உறுதியளித்துள்ளது. உலகளாவிய தரநிலைகளுடன் தேசிய கொள்கைகளை சீரமைப்பதன் மூலம் இந்தியா இந்த கடமைகளை பூர்த்தி செய்ய  சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு உதவும். இது எல்லை தாண்டிய பிரச்சினைகள் உட்பட காலநிலை மற்றும் சுகாதார சவால்களை சமாளிக்க உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிக்கும்.


சுற்றுச்சூழல் சுகாதார பிரச்சினைகள் இந்தியாவின் பிராந்தியங்களில் பரவலாக வேறுபடுகின்றன. எனவே, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு அணுகுமுறை வேலை செய்யாது. ஒரு சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு  மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து ஒவ்வொரு பகுதியின் தனித்துவமான சுற்றுச்சூழல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த முடியும். கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வுக்கான விரிவான தேசிய தளத்தை உருவாக்குவதன் மூலம், இந்தியா சுகாதார விளைவுகளை மிக நெருக்கமாக கண்காணிக்க முடியும் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப  விரைவாக செயல்பட முடியும்.


பொறுப்புணர்வை உருவாக்குதல்


இந்தியாவில் சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பது, அரசாங்கத்தின் செயல்முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான தொழில்களில் இருந்து எதிர்ப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளும். இருப்பினும், அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக்கான தெளிவான திட்டங்கள், அளவிடக்கூடிய இலக்குகள் மற்றும் துறைகள் முழுவதும் ஒத்துழைப்பு ஆகியவை இந்த தடைகளை கடக்க உதவும். சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு அறிவியல் நிபுணர்களால் வழிநடத்தப்பட வேண்டும். மேலும், பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் கொள்கைகளைச் செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் சமீபத்திய வெற்றி, குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும் நாட்டின் திறனைக் காட்டுகிறது. மாசுக் கட்டுப்பாட்டை பொது சுகாதார முன்னுரிமை மற்றும் பொருளாதார வாய்ப்பாக கருதுவதன் மூலம் சுற்றுச்சூழல் சுகாதார பிரச்சினைகளை இந்தியாவின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு ஒரு சுற்றுச்சூழல் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பால் இந்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும்.


டாக்டர். சௌமியா சுவாமிநாதன், சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகர். கல்பனா பாலகிருஷ்ணன் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் (ஆராய்ச்சி). விஜய் சங்கர் பாலகிருஷ்ணன், ஒரு அறிவியல் பத்திரிக்கையாளராக, 12 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கை அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அனுபவத்துடன், உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.




Original article:

Share: