பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
சமீபத்தில், பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) ஊக்குவிக்கும் அதே வேளையில் பசி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை வேகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1. விரிவான உரையாடல்கள் மூலம் ஒரு வருட காலப்பகுதியில் நிறுவப்பட்ட கூட்டணி, வளர்ந்த நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து தேவைப்படும் நாடுகளுக்கு நிதி உதவி மற்றும் நிபுணத்துவம் அளிக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organization’s (FAO)) பசி வரைபடத்தில் இருந்து அனைத்து நாடுகளையும் அகற்றுவதை இலக்காக வைத்துள்ளது.
2. இது 148 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் 82 நாடுகள், ஆப்பிரிக்க ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், 24 சர்வதேச நிறுவனங்கள், 9 சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் 31 சமுதாயநல (philanthropic) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அடங்கும்.
3. குறிப்பிடத்தக்க வகையில், ஜூலை 2024 முதல், G20 கூட்டணிக்கு வெளியே உள்ள நாடுகளை இந்த கூட்டணியில் சேர அனுமதித்துள்ளது. பிரேசில் மற்றும் வங்காளதேசம் முதலில் இணைந்தன. பின்னர், அனைத்து G20 உறுப்பினர்களும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் குழுக்களும் இணைந்தனர்.
4.2030ஆம் ஆண்டிற்குள் பட்டினி மற்றும் வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தளமாக கூட்டணி செயல்படும். இது மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டது:
(i) தேசிய - குறிப்பிட்ட பொதுக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு.
(ii) அறிவு - ஆதாரம் சார்ந்த தீர்வுகளுக்கான தரவு மற்றும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு.
(iii) நிதி - பெரிய அளவிலான வளங்களைத் திரட்டுதல்.
5. கடந்த வாரம் G20 உச்சிமாநாட்டில் ராஜதந்திர பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன அவை:
2030க்குள் 500 மில்லியன் மக்களை வருமானம் பகிர்ந்தளிக்கும் திட்டங்களுடன் சென்றடையும். குழந்தைகள் பட்டினி விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் 150 மில்லியன் குழந்தைகளுக்கு பள்ளி உணவை விரிவுபடுத்துதல். பலதரப்பு வங்கிகள் மூலம் பல பில்லியன் டாலர்களை வறுமை எதிர்ப்பு திட்டங்களுக்கு திரட்டுதல்.
6. கூட்டணியின் முக்கிய அலுவலகம் அதன் செயல்பாடுகளில் சுதந்திரத்துடன் FAO இல் இருக்கும். பசி மற்றும் வறுமைக்கு எதிராக வழக்கமான உச்சி மாநாடுகளை நடத்தவும், அதன் பணிகளை மேற்பார்வையிட உயர்மட்ட குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய பசி குறியீடு
1. உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index (GHI)) ஆண்டுதோறும் Concern Worldwide மற்றும் Welthungerhilfe ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது. இது பிராந்தியம் மற்றும் நாடு உட்பட உலகெங்கிலும் ஏற்படும் பசியை கண்காணிக்கிறது.
2. உலகளாவிய பசி குறியீடு நான்கு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது: ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை பலவீனமாக்குதல் மற்றும் குழந்தை இறப்பு. இந்த குறிகாட்டிகள் பசியின் பல்வேறு அம்சங்களை வெளிக்காட்டுகின்றன.
3. 2024 உலகளாவிய பசி குறியீட்டில் (GHI) 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. இது "தீவிரமான" பசியின் அளவைக் காட்டுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானும் இது போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. இந்தியாவின் GHI மதிப்பெண் 27.3 கவலைக்குரியது. குறிப்பாக, அதன் தெற்காசிய அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற "மிதமான" பட்டினி பிரிவில் உள்ளன.
4. அக்டோபர் 10, 2024 அன்று வெளியிடப்பட்ட GHI-ன் படி, 42 நாடுகளில் ஆபத்தான பட்டினி அளவுகள் இருப்பதைக் காட்டுகிறது. இதனால் 2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய பசி என்ற இலக்கை அடைவது கடினமாகிறது. இந்த விகிதத்தில் முன்னேற்றம் தொடர்ந்தால், 2160 வரை உலகம் குறைந்த பசி அளவை எட்டாது. உலகளாவிய GHI மதிப்பெண் 18.3 ஆகும். இது மிதமான பசியின் அளவாகக் கருதப்படுகிறது.
5. ஆறு நாடுகள் - சோமாலியா, யேமன், சாட், மடகாஸ்கர், புருண்டி மற்றும் தெற்கு சூடான் - ஆகியவற்றில் ஆபத்தானதாகக் கருதப்படும் பசியின் அளவு உள்ளது. இது பரவலான மனித துயரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI)
1. சமீபத்திய உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு (Multidimensional Poverty Index (MPI)) அறிக்கையின்படி, 234 மில்லியன் மக்கள் வறுமையில் வாடும் இந்தியா, அதிக எண்ணிக்கையிலான தீவிர ஏழைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 112 நாடுகளில் உள்ள 6.3 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் உலகளவில் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது.
2. ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (Oxford Poverty and Human Development Initiative (OPHI)) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கை அலுவலகம் ஆகியவற்றால் 2024ஆம் ஆண்டுக்கான பல பரிமாண வறுமைக் குறியீடு அக்டோபர் 17ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு (Eradication of Poverty) தினத்தில் வெளியிடப்பட்டது. இது முதன்முதலில் 2010-ல் தொடங்கப்பட்டது.
3. இது நிலையான வளர்ச்சி இலக்கு (SDG)- 1- 1- எல்லா இடங்களிலும் அதன் அனைத்து வடிவங்களிலும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 1, 2, 3, 4, 6, 7 மற்றும் 11 தொடர்பான குறிகாட்டிகளில் பல்வேறு வகையான வறுமையைப் பார்க்கிறது.
4. உலகளாவிய MPI மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய 10 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது: (i) சுகாதாரம், (ii) கல்வி மற்றும் (iii) வாழ்க்கைத் தரம். இந்த பகுதிகள் ஒவ்வொன்றும் இறுதி மதிப்பெண்ணுக்கு மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது.
1. G20, அல்லது இருப்பதின் குழு, 19 நாடுகளின் (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் முறைசாரா குழுவாகும்.
2. 55 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆப்பிரிக்க ஒன்றியம், ஜூன் 2023-ல் G20-ல் புதிய உறுப்பினராக இணைந்தது.
3. G20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளனர். G20 உலகப் பொருளாதார ஒத்துழைப்புக்கு முக்கியமானது மற்றும் சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்க உதவுகிறது.
4. ஐக்கிய நாடுகள் (UN) போலல்லாமல், G20க்கு நிரந்தர செயலகம் அல்லது பணியாளர்கள் இல்லை. மாறாக, G20 தலைவர் ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. G20 கொள்கையை ஒன்றிணைத்தல், அதன் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் மற்றும் உச்சிமாநாடுகளை நடத்துதல் ஆகியவை G20 குழுவின் பொறுப்பாகும்.
5. தலைவர் பதவியை "முக்கூட்டணி" (troika) ஆதரிக்கிறது. முக்கூட்டணி என்பது முந்தைய, தற்போதைய மற்றும்எதிர்கால தலைவர்கள் ஆவார்.