தற்போதைய நிகழ்வு : சோன்பத்ராவின் நிலத்தடி நீரில் அதிகப்படியான ஃப்ளோரைடு (fluoride) இருப்பது முதன்முதலில் 2013-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பல குடியிருப்பாளர்கள் சுகாதார பிரச்சினைகள் குறித்து புகார் அளித்ததை அடுத்து, பதரச் கிராமத்திலிருந்து ஒரு மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது.
முக்கிய அம்சங்கள் :
1. உத்தரபிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ரா, ஒரு எரிமலைப் பாறையான கிரானைட் படிவுகள் நிறைந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பில் உள்ள, நிலத்தடி நீரில் "அதிகப்படியான" ஃப்ளோரைடைக் கசிந்து, அதை மக்கள் நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்கியுள்ளது. இது, சமீபத்தில் மாநில நீர் ஆணையமான ஜல் நிகாமின் (Jal Nigam) மார்ச் மாத அறிக்கையில் அரசாங்கம் கவனத்தில் கொண்ட ஒரு பிரச்சனையாகும்.
2. சமீபத்தில் லக்னோவிற்கு மாற்றப்பட்ட சோன்பத்ராவின் ஜல் நிகாமின் நிர்வாகப் பொறியாளரான மகேந்திர சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் வசிக்கும் 120 குக்கிராமங்களில் நிலத்தடி நீரில் "அதிகப்படியான" ஃப்ளோரைடு இருப்பதை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
3. விஜய் குமார் என்ற நபரின் ஃப்ளோரோசிஸ் நோயறிதலை உறுதிப்படுத்திய சோன்பத்ரா தலைமை மருத்துவ அதிகாரி (CMO) டாக்டர் அஸ்வனி குமார், “ஃப்ளோரோசிஸ் என்பது ஆபத்தானது அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இது வயதானவர்களுக்கு, மூட்டு வலி (joint pain), இறுக்கம் (stiffness), எலும்பு குறைபாடுகளை (bone deformities) ஏற்படுத்தும். இது இயக்கம் தொடர்பான பிரச்சினைகள், தசை பலவீனம் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். குழந்தைகளில், மிகவும் பொதுவான அறிகுறியாக பற்களில் மஞ்சள் கறைகளாக இருக்கும்.
4. 2019-ம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷனின் (Jal Jeevan Mission) கீழ் ஹர் கர் ஜல் யோஜனா (Har Ghar Jal Yojana) தொடங்கப்படுவதற்கு முன்பு, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் திட்டங்கள் 2012-13ஆம் ஆண்டில் ஜல் நிகாம் (Jal Nigam) மூலம் தொடங்கப்பட்டன என்று மாவட்ட ஆட்சியர் பத்ரிநாத் சிங் கூறுகிறார்.
5. இதற்கிடையில், மாசுபாடு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பதராச் கிராமத்திற்கு குடிநீர் வழங்க 2013 முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட மேற்பரப்பு நீரை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உங்களுக்குத் தெரியுமா?
1. 'இந்தியாவின் எரிசக்தி தலைநகரம்' (energy capital of India) என்று அழைக்கப்படும் சோன்பத்ரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய நாடுகளுடன் அதன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. மாவட்டத்தின் ஐந்து பகுதிகளான துதி, மியோர்பூர், பாபானி, கோன் மற்றும் சோபன் ஆகிய இடங்களில் அதிக கிரானைட் படிவுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதராச் கிராமம், 300 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது. இது ஃப்ளோரோசிஸால் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். மண்வீடுகளில் வசிக்கும் பெரும்பாலான கிராமவாசிகள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கை பம்புகளை நம்பியிருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
3. "கொதித்தல் ஃப்ளோரைடு செறிவை அதிகரிக்கிறது" (boiling increases fluoride concentration) என்பதால் நிலத்தடி நீரை கொதிக்க வைப்பதைத் தவிர்க்குமாறு உள்ளூர்வாசிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உடலில் ஃப்ளோரைடின் தாக்கத்தைக் குறைக்க எலுமிச்சை மற்றும் புளியை தவறாமல் உட்கொள்ளவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.