மூத்த குடிமக்கள் தங்கள் பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோ தங்கள் சொத்திலிருந்து வெளியேற்ற முடியுமா? உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்ன? -அஜோய் சின்ஹா ​​கர்புரம்

 2007-ஆம் ஆண்டு மூத்த குடிமக்கள் சட்டம் (Senior Citizens Act) இது போன்ற வழக்குகளைக் கையாள சிறப்பு தீர்ப்பாயங்களையும், எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்ய தனி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களையும் அமைக்கிறது.


பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன்புரிச் சட்டம், 2007-ஐப் பயன்படுத்தி, வயதான தம்பதியினர் தங்கள் மகனை வீட்டிலிருந்து வெளியேற்ற முயன்ற வழக்கை மார்ச் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் நிதி உதவி இல்லாத மூத்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து பராமரிப்பு கோரி வழக்குத் தொடர, இந்தச் சட்டம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையை வழங்குகிறது.


இந்தச் சட்டம் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளையோ அல்லது உறவினர்களையோ தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றும் உரிமையை வெளிப்படையாக வழங்கவில்லை என்றாலும், சில சூழ்நிலைகளில் அத்தகைய வெளியேற்ற உத்தரவுகளை அனுமதிக்கும் வகையில் சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான விதியை உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.


சட்டம் என்ன சொல்கிறது?


மூத்த குடிமக்கள் சட்டம், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் சொந்த வருமானம் அல்லது சொத்தை வைத்து தங்களைத் தாங்களே பராமரிக்க முடியாத நிலையில், தங்கள் குழந்தைகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளிடம் நிதி உதவி கேட்டு வழக்குத் தொடர அனுமதிக்கிறது. பெற்றோர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுவது இந்தக் குழந்தைகள் அல்லது உறவினர்களின் கடமை என்று சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டம் இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயங்களையும், எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் மறுபரிசீலனை செய்ய மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களையும் அமைக்கிறது.


முக்கியமாக, சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான பிரிவு 23 ஆகும். பெற்றோர்கள் தங்கள் சொத்தை பரிசாகவோ அல்லது மாற்றவோ செய்த பிறகும் ஆதரவைப் பெற உதவுகிறது. பிரிவு 23(1)-ன் படி, ஒரு மூத்த குடிமகன் ஒருவருக்கு சொத்தை வழங்கினால், அந்த நபர் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற நிபந்தனையின் பேரில், பராமரிப்பு வழங்கப்படாவிட்டால், சட்டம் அந்த மாற்றத்தை வலுக்கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ செய்ததாகக் கருதுகிறது. இதுபோன்ற சூழல்களில், மூத்த குடிமகன் தீர்ப்பாயத்திற்குச் செல்லலாம். மேலும், பரிசு அல்லது பரிமாற்றத்தை ரத்து செய்யலாம்.


பிரிவு 23(2) மூத்த குடிமக்களுக்கு சொத்திலிருந்து பராமரிப்பு பெற உரிமை உண்டு என்று கூறுகிறது. சொத்து மாற்றப்பட்டால், புதிய உரிமையாளருக்கு எதிராக இந்த உரிமையை செயல்படுத்த முடியும், அவர்கள் அதை அறிந்திருக்கும் வரை.


வெளியேற்றும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் எவ்வாறு பெற்றது?


2020-ஆம் ஆண்டில், மூத்த குடிமக்கள் சட்டத்தைப் பயன்படுத்தி, மூத்த பெற்றோரும் அவர்களது மகனும் மருமகளை குடும்ப வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பிய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டியிருந்தது. இரு தரப்பினரும் நிலுவையில் உள்ள விவாகரத்து நடவடிக்கைகள் மற்றும் மருமகள் கணவருக்கு எதிராக தாக்கல் செய்த ஜீவனாம்ச வழக்கு உள்ளிட்ட பிற நடந்து வரும் மற்றும் இணையான வழக்குகளை விசாரித்தனர்.


முன்னதாக, ஜூன் 2015-ல், பெங்களூரு வடக்கு துணைப் பிரிவின் உதவி ஆணையர் சொத்து பெற்றோருக்குச் சொந்தமானது என்றும் மருமகள் அங்கு மட்டுமே வசித்து வந்ததாலேயே அவளுக்கு சொத்தில் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.


2020-ஆம் ஆண்டில், மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (Women from Domestic Violence Act) கீழ், பகிரப்பட்ட குடும்பத்தில் இருந்து அவரை நீக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. வீட்டிற்குச் சொந்தமாக இல்லாவிட்டாலும் அல்லது அதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமைகளும் இல்லாவிட்டாலும் கூட இந்தப் பாதுகாப்பு பொருந்தும். இருப்பினும், மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு தீர்ப்பாயத்திற்கு ஒருவரை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட அதிகாரம் உள்ளதா என்பதையும் நீதிமன்றம் ஆராய்ந்தது.


மூத்த குடிமகனைப் பாதுகாக்கவும் ஆதரிக்கவும் தேவைப்பட்டால், வீட்டை விட்டு வெளியேற ஒரு தீர்ப்பாயம் உத்தரவிடலாம் என்று அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி உள்ளிட்ட நீதிபதிகள் குழு முடிவு செய்தது. பிரிவு 23(2)-ன் கீழ், மூத்த குடிமக்கள் தங்கள் சொத்திலிருந்து ஆதரவைப் பெற உரிமை உண்டு என்றும், ஒருவரை வெளியேற்றும் அதிகாரம் அந்த உரிமையில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.


மூத்த குடிமகனைப் பராமரிக்கும் கடமை மீறப்பட்டால், ஒரு மூத்த குடிமகனின் சொத்திலிருந்து ஒரு குழந்தை அல்லது உறவினரை வெளியேற்ற (eviction) தீர்ப்பாயம் உத்தரவிடலாம் என்ற வாதத்திற்கும் நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்தது. இருப்பினும், வழக்கில் இரு தரப்பினரையும் வாதங்களை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்ப்பாயம் வெளியேற்ற உத்தரவிட முடியும் என்று நீதிமன்ற அமர்வு  கூறியது.


இந்த வழக்கில் வெளியேற்றம் ஏன் மறுக்கப்பட்டது?


பெற்றோர்கள் தங்கள் மகனை வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பிய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க வேண்டியிருந்தது. தங்களை கவனித்துக்கொள்வதில்லை என்றும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்று  பெற்றோர்கள் கூறினர். 2019-ஆம் ஆண்டில், மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ் ஒரு தீர்ப்பாயம் பெற்றோருக்கு சிறிது நிவாரணம் அளித்தது. மகனுக்கு வீட்டின் மற்ற பகுதிகளுக்குள் அவர்களின் அனுமதியின்றி நுழையக்கூடாது என்று அது கூறியது. கட்டிடத்திலிருந்து அவர் நடத்திய பாத்திரக் கடையையும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த அறையையும் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. மகன் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது மீண்டும் அவர்களை காயப்படுத்தினாலோ மட்டுமே பெற்றோர் மீண்டும் வெளியேற்றக் கோர முடியும் என்றும் தீர்ப்பாயம் கூறியது.


தீர்ப்பாயத்தின் உத்தரவில் பெற்றோர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் மேல்முறையீடு செய்து பின்னர் 2023-ல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர். ஆனால், முந்தைய உத்தரவுக்குப் பிறகு அவர்களின் மகன் கிருஷ்ண குமார் தங்களைத் தவறாக நடத்தியதற்கான எந்த ஆதாரமோ புகாரோ இல்லை என்று நீதிமன்றம் கூறியது. ஒவ்வொரு வழக்கிலும் வெளியேற்றம் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. அது சூழ்நிலையைப் பொறுத்து இருக்கும் என்று தெளிவுபடுத்தியது.


Original article:
Share: