முக்கிய அம்சங்கள்:
• 2022-23-ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பு மற்றும் தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (National Statistics Office (NSO)) 2023-24 அறிக்கைகள் சமீபத்திய ஆண்டுகளுக்கான வறுமை மற்றும் சமத்துவமின்மையின் மதிப்பீடுகளை அடைய நமக்கு உதவுகின்றன. 2022-23 கணக்கெடுப்பைப் பயன்படுத்தி பல ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடுகளை வரைந்துள்ளனர். இருப்பினும், குறிப்பிட்ட சிலரே 2023-24 கணக்கெடுப்பைப் பயன்படுத்தியுள்ளனர். 2011-12 முதல் 2023-24 வரையிலான தலை எண்ணிக்கை விகிதத்தின் (head count ratio) போக்குகள், வறுமையின் ஆழம் மற்றும் சமத்துவமின்மையின் போக்குகளை நாங்கள் பார்க்கிறோம்.
• கிராமப்புறங்களுக்கான ரங்கராஜன் குழுவின் வழிமுறையின் அடிப்படையில் வறுமைக் கோடுகள் (மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு) 2011-12-ல் ரூ. 972, 2022-23-ல் ரூ. 1,837 மற்றும் 2023-24-ல் ரூ.1,940 இருந்ததாக தெரிவித்தன. நகர்ப்புறங்களுக்கான வறுமைக் கோடுகள் 2011-12-ஆம் ஆண்டில் ரூ.1,407 ஆகவும், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.2,603 ஆகவும், 2023-24-ஆம் ஆண்டில் ரூ.2,736 இருந்ததாக தெரிவித்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நகர்ப்புறத்தில் வசிக்கும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, 2023-24-ஆம் ஆண்டில் வறுமைக் கோடு ரூ.13,680-ஆக இருந்தது. மதிப்பிடப்பட்ட மொத்த (கிராமப்புற மற்றும் நகர்ப்புற) வறுமை விகிதங்கள் 2011-12-ஆம் ஆண்டில் 29.5 சதவீதத்திலிருந்து 2022-23-ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 4.9 சதவீதமாகவும் குறைந்துள்ளன. 2011-12 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் வறுமை கணிசமாகக் குறைந்துள்ளன. இவை ஆண்டுக்கு 2.05 சதவீத புள்ளிகள் ஆகும். இருப்பினும் சரிவு விகிதம் 2004-05 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகவே இருந்தது. இவை ஆண்டுக்கு 2.2 சதவீத புள்ளிகள் ஆகும்.
• உலக வங்கி சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட வளரும் நாடுகளுக்கான வறுமை மற்றும் சமத்துவ சுருக்கத்தை வெளியிட்டது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வறுமையை கணிசமாகக் குறைத்துள்ளதாக கூறுகிறது. 2011-12-ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக இருந்த தீவிர வறுமை (வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஒரு நாளைக்கு $2.15-க்கும் குறைவாக வாழ்வது) 2022-23-ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 170 மில்லியனுக்கும் அதிகமானோர் தீவிர வறுமை நிலைமைகளிலிருந்து உயர்த்தப்பட்டனர். குறைந்த நடுத்தர வருமான நாடுகளுக்கான வறுமைக் கோட்டு அளவுகோல்களுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு $3.65 - 61.8 சதவீதத்திலிருந்து 28.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
• 2022-23 முதல் 2023-24 வரை வறுமை கணிசமாகக் குறைந்தது. ஒரு வருடத்தில், அது 9.5 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகக் குறைந்தது. இந்த சாதனைக்கு என்ன காரணம்? மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, விலைகள் மற்றும் பாதுகாப்பு வலைகள் போன்ற காரணிகளால் வறுமை தீர்மானிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP growth), விலைகள் (prices) மற்றும் பாதுகாப்பு வலைகள் (safety nets) போன்ற காரணிகளால் வறுமை தீர்மானிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2022-23-ல் 7.6 சதவீதத்திலிருந்து 2023-24-ல் 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் 1.6 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
• வறுமையின் "ஆழத்தை" அளவிடவில்லை என்பதன் அடிப்படையில் மக்கள் தொகை விகிதம் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஏழைகள் வறுமைக் கோட்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளுக்கு இடையில் உள்ளனர் என்று தெரிகிறது. இது 2011-12 மற்றும் 2022-23 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் பொருந்தியது. உண்மையில், 2022-23-ஆம் ஆண்டில், கிராமப்புற ஏழைகளில் 56 சதவீதமும் மொத்த ஏழைகளும் இந்தப் பிரிவில் உள்ளனர். இதேபோல், ஏழைகள் அல்லாதவர்களில் பெரும் பகுதியினர் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே உள்ளனர். இதற்கான அளவுகோல் 115 முதல் 125 சதவீதம் வரை உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• வறுமை என்பது ஒரு நபர் அல்லது குடும்பத்திற்கு அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லாத நிலை. "முழுமையான" வறுமை என்பது செலவினங்களை ஒரு "வறுமைக் கோடு" உடன் ஒப்பிடுவதன் மூலம் அளவிடப்படுகிறது, இது அடிப்படை பொருட்கள் தொகுப்பின் விலை ஆகும். வறுமை, இந்தக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை (தலை எண்ணிக்கை விகிதம்) கணக்கிடுவதன் மூலமும், அவர்கள் எவ்வளவு கீழே உள்ளனர் என்பதை (வறுமையின் ஆழம்) மதிப்பிடுவதன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது
• இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கையை இதுவரை ஆறு அதிகாரப்பூர்வ குழுக்கள் மதிப்பிட்டுள்ளன. 1962-ஆம் ஆண்டு பணிக்குழு (working group), 1971-ல் வி என் தண்டேகர் மற்றும் என் ரத், 1979-ல் ஒய் கே அலாக்; 1993-ல் டி டி லக்டவாலா; 2009-ல் சுரேஷ் டெண்டுல்கர் மற்றும் 2014-ல் சி ரங்கராஜன் குழு போன்ற குழுக்களாகும். ரங்கராஜன் குழுவின் அறிக்கை குறித்து அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை.