பருவமழையின் துவக்கம் எவ்வாறு அறிவிக்கப்படுகிறது? -அபிஷேக் ஜா

 பருவமழையின் வருகையின் அர்த்தம் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் பருவமழை வந்துவிட்டது என்பதை IMD எவ்வாறு முடிவு செய்கிறது?


மே 13 அன்று, இந்திய வானிலை ஆய்வு மையமானது (India Meteorological Department (IMD)), தென்மேற்கு பருவமழை தற்போது, நிக்கோபார் தீவுகளை அடைந்துவிட்டதாக அறிவித்தது. அது தெற்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளுக்கும் அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கும் முன்னேறியுள்ளது. பருவமழை வருகை என்ன அர்த்தம்? மிக முக்கியமாக, பருவமழை ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டதாக IMD எவ்வாறு தீர்மானிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் சில விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளது.


பருவமழையின் வருகையின் (arrival of the monsoon) அர்த்தம் என்ன?


தென்மேற்கு பருவமழை காலம் (southwest monsoon season) அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பருவகாலம் மிகவும் அதிக மழை பெய்யும் நேரமாகும். இந்த நான்கு மாதங்கள் மழை பெய்யக் காரணம், பெரிய அளவிலான வளிமண்டல வடிவங்கள் (large scale atmospheric patterns) மழைக்கால வானிலையை ஆதரிக்கின்றன. இந்த வடிவங்கள் பொதுவாக ஜூன் 1-ம் தேதி கேரள கடற்கரையில் தொடங்குகின்றன. அவை ஜூலை 8-ம் தேதிக்குள் முழு நாட்டையும் உள்ளடக்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலிருந்து பின்வாங்கும். அதனால்தான் பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இருப்பினும், குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வடிவங்கள் உருவாகும் அல்லது மறைந்து போகும் உண்மையான தேதி, அந்தப் பகுதிகளில் பருவமழையின் வருகை அல்லது பின்வாங்கலைக் குறிக்கிறது.


வழக்கமாக, பருவமழையானது ஜூன் 1-ம் தேதி கேரள கடற்கரையை அடைகிறது. இது பொதுவாக இந்திய நிலப்பரப்பில் வரும் முதல் நிறுத்தமாகும். இருப்பினும், இந்த பருவமழையானது வழக்கமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை முன்னதாகவே, அதாவது மே 22-ம் தேதி அன்று வந்தடைகிறது. எனவே, பருவமழையானது கேரளாவை அடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த தீவுகளை அடைகிறது. இருப்பினும், இந்த முன்கூட்டியே வந்தடைவது என்பது கேரளாவில் வளிமண்டல சூழ்நிலைகள் ஒரு வாரத்திற்கு முன்பே உருவாகின்றன என்று அர்த்தமல்ல. பருவமழையானது மே 27-ம் தேதி கேரள கடற்கரையை அடையும் என்றும், இநத முன்னறிவிப்பு நான்கு நாட்கள் வரை தாமதமாகப்  பெய்யும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.


ஒரு குறிப்பிட்ட இடத்தில் பருவமழை வந்துவிட்டது என்பதை IMD எவ்வாறு முடிவு செய்கிறது?


மேலே உள்ள விளக்கத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்டபடி, பருவகால வளிமண்டல சூழல்கள் உருவாகும்போது பருவமழை வந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சூழல்கள் என்ன? IMD கேரளாவிற்கு அளவிடக்கூடிய மூன்று சூழல்களை பட்டியலிடுகிறது. நாட்டின் பிற பகுதிகளுக்கு இந்த மூன்றும் எப்போதும் அளவிடப்படுவதில்லை. இருப்பினும், நிக்கோபார் தீவுகளில் பருவமழை தொடங்கியதை அறிவிக்க துறை மூன்றையும் பயன்படுத்துகிறது. இதன் அடிப்படையில், இங்கே மூன்று நிபந்தனைகள் உள்ளன.


பருவத்தின் பெயரால் ஒரு முக்கியமான நிபந்தனை பரிந்துரைக்கப்படுகிறது அவை, தென்மேற்கு பருவமழை (southwest monsoon) ஆகும். இந்தியாவின் தென்மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயரால் இந்தப் பருவம் பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மஸ்கரேன் தீவுகளிலிருந்து (ரீயூனியன், மொரிஷியஸ் மற்றும் ரோட்ரிக்ஸ் தீவுகள்) இந்தக் காற்று வருகிறது. இந்தக் காற்றுகள் சில நில வரம்புகளைக் கடக்கும்போது, ​​கேரளாவில் பருவமழை வருவதை இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அறிவிக்கிறது.


ஒரு வரம்பு 925 மில்லிபார் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 750 மீட்டர்) உயரத்தில் காற்றின் வேகம் இருக்கும். மண்டல காற்றின் வேகம் (பூமத்திய ரேகைக்கு இணையான கூறு) 15 முதல் 20 முடிச்சுகள் வரை இருக்க வேண்டும். கூடுதலாக, இந்த மேற்கு காற்று 600 மில்லிபார் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 4-4.5 கிமீ) வரை நீட்டிக்கப்பட வேண்டும். நிக்கோபார் தீவுகளில் இது காணப்பட்டுள்ளது. வெவ்வேறு அழுத்த நிலைகளில் மண்டலக் காற்றுக்கான முன்னறிவிப்பு வரைபடங்கள் இதைக் காட்டுகின்றன. நிகழ்வுக்கு அருகில் முன்னறிவிப்புகள் செய்யப்பட்டதால், அவை காற்றின் போக்குகளை கணிப்பதில் துல்லியமாக இருக்கும்.


நிச்சயமாக, காற்று மட்டும் பருவமழையை வரையறுக்கவில்லை. ஏனெனில் ஆண்டின் பிற நேரங்களில் மேற்கத்தியக் காற்று (westerly winds) வீசக்கூடும். இந்த காற்றுடன் வளிமண்டலத்தில் ஈரப்பதம் மற்றும் மேகங்கள் இருக்க வேண்டும். அவை மழைப்பொழிவுக்கு அவசியமானவை. இது வெளியேறும் நீண்ட அலை கதிர்வீச்சைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது. வெளியேறும் நீண்ட அலை கதிர்வீச்சு என்பது சூரிய கதிர்வீச்சை உறிஞ்சிய பிறகு பூமி மீண்டும் கதிர்வீச்சு செய்யும் வெப்பமாகும். மேகங்கள் இருக்கும்போது, ​​இந்த வெப்பம் குறைகிறது. பருவமழையின் வருகையை அறிவிக்க, தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு வெளியேறும் நீண்ட அலை கதிர்வீச்சு 200 W/m²-க்குக் கீழே குறைகிறதா என்று IMD சரிபார்க்கிறது. இதன் அடிப்படையில், தற்போது நிக்கோபார் தீவுகள் இந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.


பருவமழை தொடங்குவதாக அறிவிப்பதற்கான இறுதி மற்றும் மிக முக்கியமான நிபந்தனை மழைதான். கேரளாவில், 60% நிலையங்கள் (14-ல்) தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் குறைந்தது 2.5 மிமீ மழையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே அளவுகோலாகும். இது இன்னும் கேரளாவில் நடக்கவில்லை. இருப்பினும், மாநிலத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் முந்தைய நிலைமைகளை பூர்த்தி செய்வதாகத் தெரிகிறது. மறுபுறம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள வானிலை நிலையங்கள் கடந்த இரண்டு நாட்களில் தீவிர மழையைப் பதிவு செய்துள்ளன. இதனால்தான் இப்பகுதியில் பருவமழை வந்துவிட்டதாக IMD அறிவித்துள்ளது.


Original article:
Share: